மீண்டும் வெடித்த விண்கலன்: வெற்றிகரமான தோல்வியை சந்தித்த எலான் மஸ்க்- வெடித்து சிதறும் வீடியோ!

|

எஸ்என் 10 என பெயரிடப்பட்ட விண்கலத்தின் முன்மாதாரி சோதனை நடத்தப்பட்டது. இந்த முன்மாதிரி சோதனை வெற்றிப்பெற்றது என எண்ணிய சில நிமிடங்களில் அந்த விண்கலன் வெடித்து சிதறியது.

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டம்

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டம்

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமான செவ்வாய்க்கு செல்லும் திட்டத்திற்கான விண்கலன்கள் அவரது ஸ்பேஸ்எக்ஸ் நிறுனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு சோதனையிடப்பட்டு வருகின்றன. அதன்படி எஸ்என்10 என பெயரிடப்பட்ட முன்மாதிரி விண்கலன் டெக்சாஸில் உள்ள போகோசிகாவில் இருந்து ஏவப்பட்டது.

எஸ்என் 10 விண்கலம் சோதனை

எஸ்என் 10 விண்கலம் சோதனை

ஹெலி லிப்ட் ராக்கெட் வகைகளான எஸ்என் வரிசையிலான விண்கலன்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சமீபத்தில் உருவாக்கப்பட்ட எஸ்என் 10 விண்கலம் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது.

வெற்றிகரமாக ஏவப்பட்ட விண்கலன்

எஸ்என்10 விண்கலம் டெக்சாஸில் உள்ள போகோ சிகாவில் ஏவுதளத்தில் இருந்து சோதனையிடப்பட்டது. எஸ்என்10 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு பின் தரையிறக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆறு நிமிடங்களில் அது வெடித்து சிதறியது.

சுமார் 10,000 கிலோமீட்டர் உயரம் பறந்து வெற்றிகரமாக இந்த விண்கலம் தரையிறங்கியது. இதுமுன்பாக சோதனை செய்யப்பட்ட இரண்டு விண்கலமும் மிகதோல்வி அடைந்தது. அதோடு ஒப்பிடுகையில் இது எலான் மஸ்க் கனவிற்கு முன்னேற்றமாகவே கருதப்படுகிறது.

லேண்டிங் பேடில் வெடித்து சிதறிய விண்கலம் காற்றில் வீசப்பட்டிருக்கலாம் என ஸ்பேஸ்எக்ஸ் ஆன்லைன் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் வெற்றியை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் இந்த தோல்வி ஏற்பட்டது.

எஸ்என்10 ராக்கெட்

இதற்கு முன்பாக ஏவப்பட்ட எஸ்என்8, எஸ்என்9 ஃபயர்பால்ஸில் செயலிழந்து வெடித்தாக தெரிவிக்கப்பட்டது. எஸ்என்10 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டு தரையிறக்கப்பட்டு அடுத்ததாக தளத்தில் காற்று வீசப்பட்டதன் காரணமாக தரையில் மோதியது என கூறப்படுகிறது.

மிகச் சிறந்த வேலையை செய்கிறது

இதுகுறித்து மஸ்க் கூறுகையில், ஸ்பேஸ்எக்ஸ் குழு மிகச் சிறந்த வேலையை செய்கிறது என தெரிவித்தார். இந்த கடைசி மூன்று சோதனை விமானங்கள் ஒவ்வொன்றும் 6 1/2 நிமிடங்கள் நீடித்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Elon Musk's SpaceX Starship Explodes after Lands in Minutes

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X