Home
News

காதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா?

எலோன் மஸ்க் தனது காதலி கிரிம்ஸை ஆரவார படுத்துவதற்காக, இந்த ஆண்டின் மிகப்பெரிய கேமிங் நிகழ்வான 'தி கேமிங் அவார்ட்ஸ்' நிகழ்ச்சியில் யாருக்கும் தெரியாமல், எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் தோன்றி தனது காதலியையும் சேர்த்து அங்கிருந்த ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இன்னொரு காரியத்தையும் இவர் செய்துள்ளார்.

தி கேமிங் அவார்ட்ஸ் நிகழ்ச்சி

தி கேமிங் அவார்ட்ஸ் நிகழ்ச்சி

வீடியோ கேம் துறையில் மிகப்பெரிய விருதான 'தி கேமிங் அவார்ட்ஸ்' நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்தது. கேமிங் கலாச்சாரத்திற்கான ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை இரவு எலோன் மஸ்க் இந்த நிகழ்ச்சியில் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் ரகசியமாகத் தோன்றினார்.

புதிய பாடலான

புதிய பாடலான "4ÆM" பாடல் வெளியீடு

கிரிம்ஸ் தனது புதிய பாடலான "4ÆM" என்ற பாடலை இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். பின்னர் இந்த பாடல் ஸ்ட்ரீமிங் சேவைகளில் வெளியிடப்பட்டது. கிரிம்ஸ் தனது புதிய பாடலை அரங்கேற்றிக்கொண்டிருந்த வேளையில் கிரிமஸை ஜூம் செய்துகொண்டிருந்த கேமரா உடனே கூட்டத்திற்குள் திரும்பியது, கூட்டத்திற்குள் எலோன் மஸ்க் நடந்து வருவதைப் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.

சைபர்பங்க் 2077 கேம்

சைபர்பங்க் 2077 கேம்

எலோன் மாஸ்க் மற்றும் கிரிம்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். கிரிம்ஸின் பாடல் அறிமுகம், தீவிரமான சிஜிஐ விஷ்வல்ஸ்(Visual) மற்றும் சிறப்பு விஷ்வல் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த பாடல் மே 2020 இல் வெளியிடப்படவுள்ள "சைபர்பங்க் 2077" கேமை பற்றியது. மேலும் கிரிம்ஸ் இந்த கேமின் 'லிஸி விஸ்ஸி" என்ற ஒரு கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்துள்ளார்.

எலோன் மஸ்க் வருவார் என்று கணிதத்திற்கு காரணம்

எலோன் மஸ்க் வருவார் என்று கணிதத்திற்கு காரணம்

கிரிம்ஸின் நிகழ்ச்சி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது, மேலும் எலோன் மஸ்க் நிச்சயம் நிகழ்ச்சிக்கு வருவார் என்று பலர் கணித்தனர். இதற்கான முக்கிய காரணம் எலோன் மஸ்க் மிகப்பெரிய கேமர் என்பதனாலும், மேலும் "ஓவர்வாட்ச்" மற்றும் "மாஸ் எஃபெக்ட்" போன்ற எதிர்கால காலகட்டத்தில் நடக்கும் கேம்கள் இவருக்கும் பிடிக்கும் என்பதனால் தான்.

டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக்

சைபர்பங்க் 2077 கேமும் அப்படியான எதிர்கால காலகட்டத்தில் நடக்கும் கேமாகும். இந்த கேமில் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் இடம்பெறுகிறது என்பது கூடுதல் செய்தி.

சைபர்பங்க் 2077 கேமிங் குழு மஸ்க் உடன் போட்ட ஒப்பந்தம்

சைபர்பங்க் 2077 கேமிங் குழு மஸ்க் உடன் போட்ட ஒப்பந்தம்

எலோன் மஸ்க் கடந்த மாதம் தனது டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக்கை அறிமுகம் செய்தபோது சைபர்பங்க் 2077 கேமிங் குழு, அவரின் டிவிட்டர் பக்கத்தில் தங்களுடன் ஒரு ஒப்பந்தம் உள்ளது அதை மறக்க வேண்டாம் மஸ்க் என்று பதிவிட்டிருந்தது.

எலோன் மஸ்க் செய்த அந்த காரியம் இதுதான்

எலோன் மஸ்க் செய்த அந்த காரியம் இதுதான்

காதலியின் நிகழ்ச்சியைக் காண எலோன் மஸ்க், தி கேமிங் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தோன்றினார். கிரிம்ஸின் நிகழ்ச்சியைப் பார்த்துக் கைதட்டி ஆரவாரப் படுத்தியதுடன், பாடல் முடிந்தவுடன் தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்று கிரிமஸை பார்த்து தனது பரட்டை தெரிவித்தார். அவரை பார்த்து அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk's Pleasant Surprise For Girlfriend And You Know What It Is : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X