வெற்றிக்காக 1500 விலங்குகளை பலி கொடுத்த Elon Musk: அம்பலமான உண்மை?

|

Elon Muskகிற்கு சொந்தமான நியூராலிங்க் நிறுவனத்தின் சிப் ஆனது தற்போது மனிதர்களின் மூளையில் பொருத்தி சோதனை செய்ய தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சிப் சோதனையில் இருந்த சமயத்தில் அதாவது 2018 முதல் 1500 க்கும் மேற்பட்ட விலங்குகள் சோதனையில் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்காவில் ஃபெடரல் விசாரணை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Neuralink நிறுவனத்தின் சிப்

Neuralink நிறுவனத்தின் சிப்

Elon Muskக்கு சொந்தமான Neuralink நிறுவனத்தின் சிப் ஆனது பல ஆண்டுகளாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனையானது பன்றி, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் 2018 முதல் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து விலங்கு நலக் கொள்கைகளை மீறும் சாத்தியக்கூறுகளுக்காக இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

1500 விலங்குகள் கொல்லப்பட்டதாக தகவல்

1500 விலங்குகள் கொல்லப்பட்டதாக தகவல்

இதுகுறித்து வெளியான தகவலின்படி, 2018 முதல் தொடங்கப்பட்ட சோதனையில் 280க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், பன்றிகள், எலிகள் மற்றும் குரங்குகள் உட்பட சுமார் 1500 விலங்குகளை கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை செய்யப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை குறித்த துல்லியமான பதிவுகளை நிறுவனம் வைத்திருக்கவில்லை எனவும் இந்த எண்ணிக்கை தோராயமானது எனவும் ஆதாரங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

அழுத்தத்தின் காரணமாக கொலைகள்

அழுத்தத்தின் காரணமாக கொலைகள்

விலங்கு இறப்புகளின் மொத்த எண்ணிக்கையானது நியூராலிங்க் விதிமுறைகள் மற்றும் ஆராய்ச்சி நடைமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பல நிறுவனங்கள் விலங்குகள் மீது சோதனை செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் இங்கு வேகமாக சிப்பை சந்தைக்கு கொண்டு வர வேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாக விலங்கு இறப்புகளின் எண்ணிக்கை தேவைப்படுவதை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மஸ்க்கிற்கு தொடரும் சிக்கல்

மஸ்க்கிற்கு தொடரும் சிக்கல்

மஸ்க், அடுத்த 6 மாதத்திற்குள் இந்த சிப்பை மனித மூளையில் பொருத்த திட்டமிட்டிருக்கும் நிலையில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. மஸ்க் ஒவ்வொரு செயலிலும் நடவடிக்கையிலும் வித்தியாசமாக இருப்பார். இது மட்டும் அல்ல அவரது சிந்தனையும் அப்படி தான் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மேலோங்கி இருக்கும்.

விரைவில் பிரபலமடைய இருக்கும் நிறுவனம்

விரைவில் பிரபலமடைய இருக்கும் நிறுவனம்

எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார். அதேபோல் தான் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான மற்றொரு நிறுவனம் நியூரோலிங்க். விரைவில் இந்த நிறுவனமும் பிரபலமடைய இருக்கிறது.

தயாராக இருக்கும் சிப்

தயாராக இருக்கும் சிப்

எலான் மஸ்க் நியூரோலிங்க் நிறுவனத்தின் மூலம் மனித மூளையில் பொறுத்தக்கூடிய சிப் ஒன்றை தயாரித்து வந்தார். தற்போது இந்த சிப் மனித மூளையில் பொருத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அரசு அனுமதிக்கு காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரைன் சிப்

பிரைன் சிப்

சிப் என்பது எலோன் மஸ்க் தனது பிரைன் சிப் இன்டர்ஃபேஸ் ஸ்டார்ட்அப் மூலம் உருவாக்கப்பட்ட வயர்லெஸ் சாதனம் ஆகும். ஆறு மாதங்களில் நியூராலிங்கின் சிப்பை மனித மூளையில் சோதிக்க மஸ்க் திட்டமிட்டிருக்கிறார். நியூராலிங்க் சிப் ஆனது கணினி, மொபைல் போன் அல்லது வேறு எந்த சாதனத்தையும் மூளையின் செயல்பாட்டின் மூலம் நேரடியாகக் கட்டுப்படுத்த உதவும் என கூறப்படுகிறது. இந்த சிப்பை குரங்கின் மூளையில் பொருத்தி சோதித்த வீடியோவை மஸ்க் முன்னதாகவே பகிர்ந்திருந்தார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

மனிதகுலத்தின் முன்னேற்றம்

மனிதகுலத்தின் முன்னேற்றம்

எலோன்மஸ்க்-ன் நியூரலிங்க், மனித மூளைக்குள் கணினி சிப்களை பொருத்தும் நடவடிக்கை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய உள்வைப்புகளை உருவாக்குவதே இதன் குறிக்கோள் ஆகும். இந்த முயற்சி வெற்றி பெறும்பட்சத்தில் மனிதகுலத்தை எதிர்காலத்தில் சூப்பர் புத்திசாலித்தனமான கணினிகளுடன் இன்னும் அதிக அளவில் நிலைநிறுத்தும் சக்திவாய்ந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Elon Musk's Neuralink killed 1500 animals For Brain implant chip testing! Musk keeps getting into trouble..

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X