Home
News

மெட்ரோ திட்டமே இன்னும் முடியலை அதுக்குள்ள சுரங்க பாதை திட்டமா?

இந்தச் சுரங்க வழித்தடம் நகரத்தைப் பாதிக்காத வகையில் 30 அடி ஆழத்தில் அமைக்கப்படும் என்று அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

By Sharath

இன்றைய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை மிகவும் வேகமாகப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஈடுகொடுக்கப் போக்குவரத்து சேவைகளிலும் பல புதிய முயற்சிகள் மற்றும் பாதுகாப்பான சேவைத்திட்டங்கள் வந்த வண்ணம் உள்ளது. மெட்ரோ ரயில், மோனோ ரயில் மற்றும் புல்லட் ரயில் போன்ற சேவைகள் வளர்ச்சி நோக்கிச் சென்றதற்கான அடையாளங்களாக உள்ளது.

எலான் மஸ்கின் போரிங் நிறுவனம், இதற்கு அடுத்த கட்டத்திற்கு சென்று சுரங்க பாதை வாகன திட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகாலமாக அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் செயல்படுத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் மற்றுமொரு பெருநகரமான லாஸ் ஏஞ்செல்ஸில் சுமார் 3.6 மைல் தூரத்திற்கு ஒரு வழிப் பாதையாக சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. டகவுட் லூப் என்று பெயர் சூட்டப்பட்ட இந்தச் சுரங்கம் லாஸ் ஏஞ்செல்ஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து டோட்ஜ்ர் மைதானம் வரை அமையவிருக்கிறது.

நகரத்தைப் பாதிக்காத வகையில் 30 அடி ஆழத்தில்

நகரத்தைப் பாதிக்காத வகையில் 30 அடி ஆழத்தில்

இந்தச் சுரங்க வழித்தடம் நகரத்தைப் பாதிக்காத வகையில் 30 அடி ஆழத்தில் அமைக்கப்படும் என்று அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 405 ப்ரீ-வேயின் கீழ் 2.7மைல் சுரங்கம் அமைத்து சோதனை ஓட்டம் செய்து மக்கள் கருத்து பெறப்படும் என்று போரின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1400 பயணிகளை ஒரே நேரத்தில் சுமந்து செல்லும்

1400 பயணிகளை ஒரே நேரத்தில் சுமந்து செல்லும்

விளையாட்டு மற்றும் நிகழ்ச்சிகளின் போது, டோட்ஜ்ர் மைதானத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவே இந்தத் திட்டத்தினை முதலில் முன்வந்துள்ளதாக போரிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனத்தின் மூலம் 1400 பயணிகளை ஒரே நேரத்தில் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப் போவதாக கூறியுள்ளனர்.

250,000 பயணிகள்

250,000 பயணிகள்

பின்னர் மக்களின் கருத்தை கொண்டு பயணிகளின் எண்ணிக்கையை 2800 ஆகா உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆகா, ஒரு வருடத்திற்கு இந்த டகவுட் லூப் சுரங்க வாகனத்தின் மூலம் 250,000 பயணிகளை லாஸ் ஏஞ்செல்ஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து டோட்ஜ்ர் மைதானம் வரை கொண்டு செல்ல முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.6 தொலை அளவை 4 நிமிடங்களில் கடந்து செல்லும்

3.6 தொலை அளவை 4 நிமிடங்களில் கடந்து செல்லும்

3.6 தொலை அளவை 4 நிமிடங்களில் கடந்து செல்லும் திறன் கொண்ட இந்த டகவுட் லூப்பில் பயணம் செய்வதற்கான கட்டணம் $1 என்றும் அதனை முன்பதிவு செய்து பயணம் செய்யவேண்டும் என்றும் போரிங் நிறுவனம் கூறியுள்ளது. இந்த டகவுட் லூப்பின் செயல்முறை பற்றிய விபரம் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 18, 2018 வரை மக்கள் கருத்துக்காக வைக்கப்பட்டும். இதைப் பற்றிய கூட்டம் ஆகஸ்ட் 28, 2018 மாலை 6.15 முதல் இரவு 9.00 வரை டோட்ஜ்ர் மைதானத்தில் நடைபெறும் என்று போரின் நிறுவனம் கூறியுள்ளது.

14 மாதங்களுக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்

14 மாதங்களுக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்

மிகவும் எதிர்பார்க்கப்படுகிற இந்தத் திட்டம் போரிங் நிறுவனத்தின் கணிப்பின்படி இன்னும் 14 மாதங்களுக்குள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Elon Musk’s Boring Company proposes one-way, 3.6 mile tunnel to Dodger Stadium : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X