ஐயா எலான் மஸ்க்! என்ன ஜென்மம்யா நீ? மெய்யாலுமே நீ மனுஷன் தானா?

இவ்வளவு கூறியும் பிடிபடவில்லை என்றால், ஒரு விஷயம் சொன்னால் நினைவிற்கு வரலாம்.

|

அறிவியல் விரும்பிகள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் எலான் மஸ்க்கை பற்றிய அறிமுகமே தேவையில்லை.

அறியாதோர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம் : எலான் மஸ்க் - தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். போர்ப்ஸ் வணிக இதழின்படி எலான் மஸ்க் சொத்தின் நிகர மதிப்பு ஆனது சுமார் 15.7 பில்லியன் டாலர்கள் ஆகும்.

ஐயா எலான் மஸ்க்! என்ன ஜென்மம்யா நீ? மெய்யாலுமே நீ மனுஷன் தானா?

இவ்வளவு கூறியும் பிடிபடவில்லை என்றால், ஒரு விஷயம் சொன்னால் நினைவிற்கு வரலாம். அதான்ப்பா சிவப்பு நிற டெஸ்லா கார் ஒன்றை கட்டி விண்வெளிக்குள் செலுத்தி, அது செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்க வைத்தாரே - அவரே தான்.

மல்டி பில்லியனர்

மல்டி பில்லியனர்

அவருக்கு என்னப்பா மல்டி பில்லியனர், என்ன வேண்டுமானாலும் செய்வார்" என்கிற வழக்கமான சலிப்பால் எலான் மஸ்க்கை கடந்து சென்று விட முடியாது. ஏனெனில் எலான் மஸ்க்கிற்கு பணம் வெறுமனே கிடைத்துவிடவில்லை, எல்லாமே கடின உழைப்பு. அதற்கு மிகசிறந்த உதாரணம் தான் மாக அவரின் ஒரு வார தூங்கும் நேரத்தை கூறலாம்.

அமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா! ஷாக் காரணம்...அமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா! ஷாக் காரணம்...

இவ்வளவு நேரம் தான் தூங்குகிறேன்

இவ்வளவு நேரம் தான் தூங்குகிறேன்

"ஒரு வாரத்திற்கு இவ்வளவு நேரம் தான் தூங்குகிறேன்" என்கிற விவரத்தை வெளியிட்டு உள்ளார் எலான். அந்த கணக்கை பார்த்த பின்னர் "நீயெல்லாம் மனுஷன் தானா?" என்கிற கேள்வி தானாக எழும்.

 90 மணி நேரம் வேலை செய்கிறாராம்

90 மணி நேரம் வேலை செய்கிறாராம்

ஒரு வாரத்தில் 168 மணி நேரம் உள்ளன, பெரும்பாலான மக்கள் சராசரியாக தினத்திற்கு 8 முதல் 9 மணி நேரம் வரை உழைக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட 56 முதல் 63 மணி நேரம் தான் உழைப்பார்கள். சரி 10 மணி நேரம் உழைத்தால் கூட 70 மணி நேரம் தான் வரை. ஆனால் எலான் மஸ்க்கோ வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்கிறாராம், அதாவது தினமும் 13 மணி நேரம் பணியாற்றுகிறார்.

தான் வேலை செய்யும் நேரம் ஆனது அதிகமாகி விட்டது

தான் வேலை செய்யும் நேரம் ஆனது அதிகமாகி விட்டது

இது ஒரு அசாதாரணமான மற்றும் மிகவும் நீளமான வேலை நேரமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த விவரத்தை ட்விட்டரில் தனது ரசிகர்களுடனான ஒரு உரையாடலின் போது அவர் வெளிப்படுத்தி உள்ளார். மேலும் கூறுகயில், "சமீப ஆண்டுகளில், தான் வேலை செய்யும் நேரம் ஆனது அதிகமாகி விட்டது. எனினும், அடுத்த ஆண்டு முதல் 90 மணி நேரம் என்பதை 80 மணி நேரமாக குறைக்க விரும்புகிறேன்." என்றார் எலான் மஸ்க்.

யாரும் தொடாத மைல்கல்லை தொடப்போகும் இஸ்ரோ! கே. சிவனின் மாஸ்டர் பிளான்!யாரும் தொடாத மைல்கல்லை தொடப்போகும் இஸ்ரோ! கே. சிவனின் மாஸ்டர் பிளான்!

26 மில்லியன்

26 மில்லியன்

இதற்கிடையில், வேலை செய்யும் நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் எலான் தன்னுடைய ட்விட்டர் ஊட்டத்தில் உள்ள 26 மில்லியன் பின்தொடர்பவர்களை மகிழ்விக்கும் உள்ளடக்கத்தை எப்படி? எப்பொழுது நிரப்பிகிறார் என்பது மற்றொரு ஆச்சரியம்.

 மின்சார கார்

மின்சார கார்

கடந்த ஆண்டு தனது மின்சார கார் நிறுவனத்தின் வளர்ச்சியை சரியான பாதைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் கீழ், ஒரு 'வேதனைக்குரிய முயற்சியை' கையாண்டார். டெஸ்லா நிறுவனத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள 'ஒவ்வொருவரும் வாரத்திற்கு நூறு மணி நேரம்' எனும் திட்டத்தை கொண்டு வந்தார். அதோடு தானும் தினமும் 17 மணிநேரம் வேலை செய்வதை உறுதியும் செய்து கொண்டார். அதாவது தினமும் சாப்பிட்டு தூங்குவதற்கு வெறும் 7 மணி நேரத்தை மட்டுமே செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லாவின் பணி

டெஸ்லாவின் பணி

அவ்வாறு 100 மணி நேரத்திற்கு மேல் உழைக்க என்ன காரணம் என்பதையும் மஸ்க் பகிர்ந்து கொண்டார்: "பெரிய, பாரம்பரிய கார் நிறுவனங்களிலிருந்து அதிகரித்து வரும் போட்டியின் போது, ​​டெஸ்லாவின் மாடல் 3 உற்பத்தியானது கடும் சாவல்களை சந்தித்தது. மறுகையில் டெஸ்லாவின் பணி ஆனது வெறுமனே ஒரு மின்சார காரை உற்பத்தி செய்து வெளியேற்றுவது மட்டும் அல்ல. டெஸ்லா நிறுவனமானது எரிசக்தி போக்குவரத்தின் எதிர்கலாமாக திகழ விரும்புகிறது. அதனால் தான் 100 மணி நேரத்திற்கு மேல் உழைத்தோம்."

ஜியோவின் அதிரடியால் தவிக்கும் ஏர்டெல்: சொத்துக்கள் பறிபோகிறது.!ஜியோவின் அதிரடியால் தவிக்கும் ஏர்டெல்: சொத்துக்கள் பறிபோகிறது.!

ராக்கெட் விஞ்ஞானம்

ராக்கெட் விஞ்ஞானம்

ஆகமொத்தம் பில்லியனர்கள் நன்றாக படுத்து தூங்குவார்கள் என்று நீங்கள் நினைத்து கொண்டு இருந்தால் அந்த எண்ணத்தை அடியோடு மாற்றுங்கள். மின்சார கார்கள் முதல் ராக்கெட் விஞ்ஞானம் வரை பல தொழில்களுக்கு முதலாளியாக இருந்தாலும் கூட சில நேரங்களில் தொழிற்சாலையிலேயே தூங்கி எழுந்து வேலை பார்த்தால் தான் முன்னேற முடியும் என்பதற்கு எலான் மஸ்க் ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு!

Best Mobiles in India

English summary
Elon Musk reveals the terrifying and impressive length of his working week : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X