Home
News

பத்த வச்சிட்டியே பரட்ட.. சீன அரசுக்கு Elon Musk கொடுத்த ஐடியா.. சும்மாவே அவங்க உஷாரு.. இப்போ இது வேறயா!

"சும்மாவே சீனாக்காரன் பயங்கர உஷாரா இருப்பான்.. இதுக்கு நடுவுல இந்தாளு வேற போயி ஐடியா கொடுத்துட்டு வந்து இருக்காப்ல.. இனிமே என்னென்ன நடக்குமோ?" என்று கூறும்படியாக, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk), சீன அதிகாரிகளுக்கு பல யோசனைகளை வழங்கியுள்ளது போல் தெரிகிறது.

தனது முழு நேரத்தையும் ட்விட்டர் (Twitter) நிறுவனத்திலேயே செலவு செய்தால், டெஸ்லா (Tesla) ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் மீது கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறி ட்விட்டருக்கு புதிய சிஇஓ-வை நியமித்த எலான் மஸ்க், தனது சொந்த வேலைகளில் கவனம் செலுத்துவார் என்று பார்த்தால்.. சீனாவிற்கு பயணம் செய்துள்ளார்.

பத்த வச்சிட்டியே பரட்ட.. சீன அதிகாரிகளுக்கு Elon Musk கொடுத்த ஐடியா!

கடந்த திங்களன்று, ஜனநாயக கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஆன ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் (Robert F. Kennedy Jr.) உடனான நேரடி ஆடியோ உரையாடலின் (Live Audio Conversation) போது எலான் மஸ்க், தனது சமீபத்திய சீன பயணத்தை பற்றி மேலோட்டமாக பேசினார்.

"எனது சமீபத்திய சீன பயணத்தின் போது, சீனாவில் உள்ள மூத்த தலைமையை (Senior Leadership) நான் சந்தித்தேன். அப்போது செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் மற்றும் அதற்கான சில மேற்பார்வைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அவசியம் குறித்து நாங்கள் மிகவும் பயனுள்ள விவாதங்களை நடத்தினோம்" என்று எலான் மாஸ்க் கூறி உள்ளார்.

மேலும் "அந்த உரையாடல்களிலிருந்து எனக்கு கிடைத்த புரிதல் என்னவென்றால், சீன அரசாங்கமானது விரைவில் ஏஐ தொடர்பான ஒழுங்குமுறையை கொண்டுவரும்" என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார். அதாவது, ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆனது மிகவும் ஆபத்தானது; அதை ஜாக்கிரதையாக கையாளுங்கள் என்று சீன அரசாங்கத்திற்கு யோசனை சொல்லியுள்ளார் எலான் மஸ்க்.

ஏஐ ஆராய்ச்சி நிறுவனமான ஓப்பன் ஏஐ (OpenAI அறிமுகம் செய்த சாட்ஜிபிடி-யின் (ChatGPT) அசுர வளர்ச்சிக்கு பின்னர் ஏஐ தொழில்நுட்பத்தின் அபாயங்களை (Dangers of AI technology) எவ்வாறு குறைப்பது என்று பல நாடுகளின் அரசாங்கங்கள் பரிசீலித்து வருகின்ற நிலையில், அந்த பட்டியலில் சீனாவும் சேரும் என்பது போல் தெரிகிறது.

ஏஐ தொழில்நுட்பத்தை சீனா ஆதரிக்கிறதா அல்லது எதிர்கிறதா? ஆதரிக்கிறது என்றே கூறலாம். சமீபத்தில் சைபர்ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃப் சீனாவானது (Cyberspace Administration of China - CAC), சீன அரசாங்கமானது ஏஐ கண்டுபிடிப்பு (AI Innovation) மற்றும் ஏஐ ஆப்பை (AI App) ஆதரிப்பதாக தெரிவித்து இருந்தது.

"சீன அரசாங்கமானது பாதுகாப்பான மற்றும் நம்பகமான மென்பொருள் (Reliable software), கருவிகள் (Tools) மற்றும் தரவு வளங்களை (Data resources) பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது, ஆனால் ஏஐ மூலம் உருவாக்கப்படும் கன்டென்ட் ( AI generated content) ஆனது நாட்டின் சோசலிச மதிப்புகளுக்கு (Socialist values) ஏற்ப இருக்க வேண்டும்" என்றும் சிஏசி (CAC) கூறியுள்ளது.

மேலும் "ஜெனரேட்டிவ் ஏஐ தயாரிப்புகளை பயிற்றுவிப்பதற்காக பயன்படுத்தப்படும் தரவின் சட்டப்பூர்வத்தன்மைக்கு வழங்குநர்களே பொறுப்பாவார்கள். அதுமட்டுமின்றி ஜெனரேடிவ் ஏஐ-க்கான அல்காரிடம்கள் (Algorithms) மற்றும் ட்ரெயினிங் டேட்டாவை (Training data) வடிவமைக்கும்போது, அதில் எந்த விதமான பாகுபாடுகளும் இருக்க கூடாது என்றும் சிஏசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk Revealed China Will be initiating AI regulation in China After he Spoke with Chinese Officials
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X