Home
News

ஸ்டார்லிங்க் இணைய சேவை.. கட்டணம் எவ்வளவு? எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்.. விவரம் இதோ..

ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவை ஆனது இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கும் அதிவேக இணைய சேவையை இந்த ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனம் வழங்கும். இந்நிலையில் ஸ்டார்லிங்க் சேவை குறித்த ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க்.

எலான் மஸ்க் பதிவு

அதாவது இந்தியாவில் ஸ்டார்லிங் இணைய சேவையைக் கொண்டு வருவதில் அதன் நிறுவனர் எலான் மஸ்க் தீவிரமாக உள்ள நிலையில், விரைவில் ஸ்டார்லிங் சேவை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்லிங்க் இணைய சேவை.. கட்டணம் எவ்வளவு?

இந்தியாவில் ஸ்டார்லிங் சேவை குறித்து அந்நிறுவன அதிகாரியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி எனத் தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்நிலையில் ஜோதிராதித்யாவின் எக்ஸ் பதிவைப் பகிர்ந்த எலான் மஸ்க் ஸ்டார்லிங் மூலம் இந்தியாவுக்கு சேவையாற்றுவதற்கு ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீபத்தில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கான மாதாந்திரக் கட்டணமாக ரூ.8,600 மற்றும் ஒருமுறை நிறுவுதல் கட்டணமாக ரூ.34,000 என்று இணையதளங்களில் தகவல் வெளியான நிலையில், அதனை ஸ்டார்லிங்க் நிறுவனம் மறுத்தது. அதாவது கட்டண விவரங்கள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.

மேலும் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவையை இந்தியாவில் பயன்படுத்தும் ஒருவருக்கு மாதாந்திர கட்டணமாக ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் கசிந்துள்ளது.

அதுவும் ஸ்டார்லிங் சேவை இந்தியாவில் அறிமுகம் ஆகும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. காரணம் என்னவென்றால் இன்னும் ஸ்பெக்ட்ராம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பாதுகாப்பு சார்ந்த அனுமதியை இன்னும் ஸ்டார்லிங் பெறவில்லை. இது இன்னொரு காரணமாக உள்ளது. இருப்பினும் அனைத்து வகையான அனுமதி மற்றும் மத்திய அரசின் ஸ்பெக்ட்ரம் பெற்று விரைவில் ஸ்டார்லிங் இணையதள வசதியை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. அதன்பின்பு தான் விமானம், கடல்சார் துறை, அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இந்த இண்டர்நெட் சேவைகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடியாகச் சக்திவாய்ந்த இணையச் சேவை

அதேசமயம் நாம் இப்போது பயன்படுத்தும் வழக்கமான இணையம் ஆனது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் அல்லது டவர்களில் இருந்து வரும் சிக்னல் மூலம் தான் கிடைக்கிறது. குறிப்பாக அனைத்து தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கும் இந்த கேபிள்களை கொண்டு செல்வது மிகவும் கடினம்.

ஸ்டார்லிங்க் இணைய சேவை.. கட்டணம் எவ்வளவு?

இந்த சிக்கலை தீர்க்க, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் பூமியைச் சுற்றி ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை நிறுவி, அங்கிருந்து நேரடியாகச் சக்திவாய்ந்த இணையச் சேவையை வழங்குகிறது. இதன் மூலம் அனைத்து தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கும் எளிமையாக இணைய சேவையை வழங்க முடியும்.

அதுவும் பூமியில் இருந்து 550 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் மூலமாக இன்டர்நெட் சேவை கிடைக்க உள்ளது. மேலும் இந்த ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பொறுத்தவரை வழக்கமான Geostationary satellites விட முற்றிலும் வித்தியாசமானது. அதாவது ஸ்டார்லிங் நிறுவனம் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக ஸ்பேஸ்எக்ஸ் LEO செயற்கோள்களை பயன்படுத்துகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk responds to Jyotiraditya Scindias Starlink post: Looking forward to serving India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X