Home
News

சொத்தை விற்று உலக மக்களின் பசியை தீர்க்க நான் தயார்: இதை செய்ய நீங்கள் தயாரா?- எலான் மஸ்க் அதிரடி கேள்வி!

எலான் மஸ்க் பங்குகளை விற்று சுமார் 6 பில்லியன் டாலர்களை WFP-க்கு வழங்க தயாராக இருப்பதாக முன்வந்துள்ளார். ஆனால் WFP அதன் கணக்கை எவ்வாறு செய்கிறது என்பதை காட்ட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்திருக்கிறார். WFP இயக்குனர் டேவிட் பீஸ்லி, இதே தலைப்பில் விவாதத்திற்கு மஸ்க்கை அழைத்திருக்கிறார். எலான் மஸ்க் அதன் நிறுவனங்களை தவிர்த்து பிற கருத்துகளை வழங்குவதில் வல்லவர். அதன்படி தற்போது எலான் மஸ்க் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு சவாலை முன்வைத்தார்.

எலான் மஸ்க் தெரிவித்த கருத்துகள்

எலான் மஸ்க் தெரிவித்த கருத்துகள்

எலான் மஸ்க் தெரிவித்த கருத்துகள் ஆனது அவரது நிறுவனங்கள் குறித்தோ அல்லது கிரிப்டோ கரன்சி குறித்தோ அல்ல. இது சமூகம் சார்ந்தது ஆகும். உலகளாவிய பசி குறித்த தீவிரமான விஷயம் என்பதாகும். ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் (டபிள்யூஎஃப்பி) இயக்குனர் டேவிட் பீஸ்லி, சிஎன்என்-க்கு பதிலளிக்கையில், மஸ்க் அல்லது ஒரு பில்லியனர்களின் 2 சதவீத செல்வத்தை செலுத்தினார் உலகளாவிய பசியை தீர்க்க முடியும் என கூறினார். இதையடுத்து ஐநா சரியான உத்தியை கொண்டு வந்தால், தனது பணத்தை கொடுக்க பணக் கொடுக்க ஒப்புக் கொண்டார்.

உலகின் பசியை தீர்க்க 6 பில்லியன் டாலர்

உலகின் பசியை தீர்க்க 6 பில்லியன் டாலர்

உலகின் பசியை 6 பில்லியன் டாலர் எவ்வாறு தீர்க்கும் என்பதை WFP டுவிட்டர் விவரிக்க முடிந்தால், தற்போதே டெஸ்லா பங்குகளை விற்று அதை செய்வேன் என இணை நிறுவனரின் டுவிட்டருக்கு மஸ்க் பதிலளித்தார். அது திறந்த மூல கணக்கியலாக இருக்க வேண்டும் எனவும் பணம் செலவிடப்படுகிறது என்பதை பொதுமக்கள் துல்லியமாக பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

42 மில்லியன் மக்களுக்கு உதவும்

42 மில்லியன் மக்களுக்கு உதவும்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான மஸ்க், மொத்தம் 300 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பை கொண்டிருக்கிறார். பீஸ்லி கூற்றுப்படி, இந்த செல்வத்தில் 2 சதவீதம் சுமார் 6 பில்லியன் டாலர் இருக்க வேண்டும். "42 மில்லியன் மக்களுக்கு உதவும், நாம் அவர்களை அடையவில்லை என்றால் இறந்துவிடுவார்கள். இதை கொடுப்பது சிக்கலானது அல்ல". பீஸ்லி அதே அந்த டுவிட்டர் பதிவில் முழுமையான முறையான விளக்கத்தை அளிக்கவில்லை.

உலகப் பசியை தீர்க்க 6 பில்லியன் டாலர்

உலகப் பசியை தீர்க்க 6 பில்லியன் டாலர்

ஆனால் தொடர்ந்து பீஸ்லி தெரிவிக்கையில், 6 பில்லியன் டாலர் உலகப் பசியை தீர்க்கும் என்று தாங்கள் ஒருபோதும் கூறவில்லை. இது முன்னோடியில்லாத பசிப்பட்டினியின் நெருக்கடியை 42 மில்லியன் உயிர்களை காப்பாற்ற ஒருமுறை நன்கொடையாகும் என குறிப்பிட்டதாக கூறினார். இந்த சவால் ஆனது முற்றுப்புள்ளி பெறாமல் இருக்கிறது. WFP தனது லெட்ஜரை பொதுமக்களுக்கு காட்ட வேண்டும் என மஸ்க் விரும்பும் போது WFP இயக்கனர், பில்லியனர்கள் எப்படி உலகப் பசியை தீர்க்க முடியும் என்பது குறித்து விவாதிக்க வேண்டும் என விரும்புகிறார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்

2021 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியிருக்கிறார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்., தற்போது 210 பில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியல்

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியல்

உலகின் மிகப் பெரிய பணக்காரராக முதலிடத்தில் கடந்த சில மாதங்களாகவே அமேசான் மற்றும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இருந்த வந்த நிலையில் டெஸ்லா பங்கு மதிப்பு உயர்ந்து வருவதையடுத்து டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஜெப் பெசோஸ் 19 ஆயிரத்து 200 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இருவருக்கும் இடையேயான போட்டி

இருவருக்கும் இடையேயான போட்டி

மஸ்க் மற்றும் பெசோஸ் இருவரும் பல மாதங்களாகவே உலகப் பணக்காரர் பட்டியலின் முதலிடத்தை ஒருவருக்கொருவர் மாறிமாறி பகிர்ந்து வருகின்றனர். இருவருக்கும் இடையேயான போட்டி பூமியில் மட்டுமின்றி விண்ணிலும் நடந்து வருகிறது. எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ், ஜெப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் ஆகிய இரண்டு நிறுவனங்களும் விண்வெளி பயணத்துக்கான அடுத்தக் கட்டத்தை வேகமாக முன்னேறி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Elon Musk Ready to Sell Stocks and Give Around 6 Billion$ to WFP to End World Hunger But One Condition
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X