உக்ரைனுக்கு ஆதரவு: சரியான நேரத்தில் உதவி செய்த எலான் மஸ்க்.!
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 7-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு பிற நாடுகளுக்கும் அகதிகளாக வெளியேறத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக ரஷ்யாவின் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வை குறிவைத்து தாக்குதல்கள் நடத்திவந்த நிலையில், தற்போது உக்ரைனின் மற்றொரு பெருநகரமான கார்கிவ்-ல் ரஷ்யப் படையின் வெடிகுண்டு மற்றும்
ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் உக்ரைனுக்குள் படையெடுத்த ரஷ்யா முதல் வேலையாக தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்அந்த நாட்டின் இணைய சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

மிகவும் பின்னடைவை சந்தித்த உக்ரைன் நாட்டிற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உதவி செய்த முன் வந்தார். அதாவது செயற்கைக்கோள் வழி வழங்கப்படும் 'ஸ்டார் லிங்க்' இணைய சேவையை உக்ரைன் நாட்டிற்கு எலான் மஸ்க் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரஷிய படைகள் ஆக்கிரமிக்க முடியாத அண்டை நாடுகளின் எல்லைகளில் ரீசீவர் முனையங்களை நிறுவி, செயற்கைக்கோள் மூலமாக அலைகற்றை உள்வாங்கி,அவற்றை உக்ரைக்கு வழங்குவதே தங்களது திட்டம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் படைகள் எந்ததாக்குதலை நடத்தினாலும் ஸ்டார்லிங் இணைய சேவை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.

அதேபோல் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து ரஷ்யாவில் ஆப்பிள் போன்கள் விற்பனையை தற்காலிமாக நிறுத்துவதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. ரஷ்யாவின் ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரை தொடர்ந்து பல்வேறு பொது நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்தி வருகிறது. மின்னணு பணப்பரிமாற்ற செயலிகளான ஆப்பிள் பே மற்றும் கூகுள் பே நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுவத்துவதாக அறிவித்திருக்கிறது.குறிப்பாக ரஷ்யாவின் நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாகவும், ரஷ்யாவினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு துணை நிற்போம் எனவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர ரஷ்ய ஊடகத்துறையின் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்கள் செய்வதற்கும் மானிடைஸ் செய்வதற்கும் மெட்டா தடை விதித்து அறிவித்திருக்கிறது. அதேபோல் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பணம் பெறுவதற்கும் விளம்பரம் செய்வதற்கும் ஆன கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை மெட்டா வெளிப்படையாக அறிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி ரஷ்ய நாட்டின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் விளம்பரங்களில் வாயிலாக கூகுள் இணையதளங்களிலும், கூகுளுக்கு சொந்தமான செயலிகளின் மூலமாக பெரும் வருமானத்துக்கு தடை விதித்துள்ளது ஆல்பாபெட்.

மேலும் உக்ரைனில் கூகுள் மேப்ஸ் லைவ் டிராஃபிக் டேட்டாவை கூகுள் தற்காலிமாக முடக்கி உள்ளது. நாட்டில் உள்ள உள்ளூர் சமூகங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூகுள் தெரிவித்திருக்கிறது. ஆல்பாபெட் இன்க்-ன் கூகுள் கடந்த ஞாயிற்றுக் கிழமை உக்ரைனில் தற்காலிமாக சில கூகுள் மேப்ஸ் கருவிகளை முடக்கியதாக உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்திய பகுதிகளின் அதிகாரிகள் உடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications