Home
News

இது லிஸ்ட்ல இல்லையே.. Youtube கதை முடிந்தது.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய வசதி.. கலக்கும் எலான் மஸ்க்..

யூடியூப் தளத்தை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் கோடிக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. நீங்கள் சுவையான சிக்கன் குழம்பு வைக்க வேண்டும் என்றால், கைத்தேதர்ந்த செஃப்களின் வீடியோக்களை பார்த்துச் சமைக்கலாம்.

அதேபோல் படம் வரைய ஆசைப்பட்டால் இந்த யூடியூப் தளத்தில் டிராயிங் ஆர்ட்டிஸ்ட் பதிவிட்ட வீடியோக்களை பார்த்து எளிமையாக கற்றுக் கொள்ளலாம். இதுபோல அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், விளையாட்டு, சினிமா போன்ற அனைத்து வீடியோக்களும் இந்த யூடியூப் தளத்தில் உள்ளன.

ஸ்மார்ட் டிவிகளில் புதிய வசதி.. கலக்கும் எலான் மஸ்க்..

ஆனால் இந்த யூடியூப் தளத்திற்குப் போட்டி கொடுக்கும் விதமாக எலான் மஸ்க் ஒரு புதிய செயலியைக் கொண்டுவர உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது எலான் மஸ்க் சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறார்.

அதன்படி வரும் நாட்களில் எக்ஸ் தளம் (X) அமேசான் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கான டிவி ஆப் ஒன்றை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஃபார்ச்சூன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எலான் மஸ்க் இந்த டிவிட்டர் (எக்ஸ்) தளத்தை வாங்கி நாள் முதல் இருந்தே வீடியோ கண்டென்ட்-க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஸ்மார்ட் டிவிகளில் புதிய வசதி.. கலக்கும் எலான் மஸ்க்..

அதுவும் இந்த தளத்தில் ஷாட் வீடியோ, வெர்டிக்கல் ஷாட் வீடியோ, கடைசியாக நீண்ட நேரம் கொண்ட வீடியோ எனப் பல்வேறு வீடியோ அம்சங்கள் கொண்டுவரப்பட்டது. அண்மையில் கூட பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் ட்விட்டரில் தனது முதல் நீண்ட நேர வீடியோவை பதிவிட்டார். பின்பு இதில் போதுமான வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்த அவர் long format வீடியோவை பதிவிடத் துவங்கியுள்ளார்.

அதேபோல் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் லாங்க் பார்மேட் வீடியோ இரண்டையும் கொண்டு வர வேண்டும் என்பது தான் எலான் மஸ்க் திட்டம். இதை அனைத்து நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்து வரும் வேளையில் ட்விட்டரில் தற்போது ஒவ்வொருவரும் செலவிடும் நேரம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் நீண்ட நேர வீடியோக்களை பெரிய திரையில் பார்க்க ஸ்மார்ட் டிவிகளுக்கான எக்ஸ் (X) செயலி கொண்டுவரப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் டிவியில் வர இருக்கும் புதிய எக்ஸ் செயலி ஆனது யூடியூப் உடன் நேரடியாகப் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.

ஸ்மார்ட் டிவிகளில் புதிய வசதி.. கலக்கும் எலான் மஸ்க்..

இதுதவிர வீடியோ கேம்கள், பாட்காஸ்ட் மற்றும் பெரிய பதிவு போன்ற அனைத்தையும் இந்த எக்ஸ் தளத்தில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார் எலான் மஸ்க். மேலும் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தை வீடியோக்களின் முதன்மை தளமாக மாற்றுவதே எலான் மஸ்க் அவர்களின் திட்டம். பின்பு இதற்கு வேண்டிப் பல முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து வருகிறது எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனம்.

குறிப்பாக யூடியூப் தளத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் பல அருமையான அம்சங்கள் இந்த எக்ஸ் தளத்தில் வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனாலும் பதிலுக்கு யூடியூப் பல்வேறு புதிய சேவைகளைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk plans to bring the x app to smart TVs to compete with the YouTube TV app
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X