Just In
- 1 hr ago
அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!
- 2 hrs ago
முதல் 5ஜி வீடியோ கால்: சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார் அமைச்சர் அஷ்வினி வைனவ்! வீடியோ.!
- 2 hrs ago
மர்மமா இருக்கு என்னனு தெரியல?- பிரபஞ்சத்தின் விசித்திரமான ஒன்றை கண்டுபிடித்த நாசா!
- 3 hrs ago
பட்ஜெட் விலையில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Lava Z3 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
Don't Miss
- News
மத்திய அரசு நிதியை மாற்றி செலவழித்த அதிமுக அரசு! மார்க்சிஸ்ட் பகீர்புகார்! மாஜி மந்திரிக்கு சிக்கல்
- Movies
அடிப்பொலி.. சியான் விக்ரமின் கோப்ரா படம் எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா? வெளியானது ஹாட் அப்டேட்!
- Lifestyle
இரவு உணவை எத்தனை மணிக்குள் சாப்பிட வேண்டும்? விரைவாக சாப்பிடுவது உண்மையில் நல்லதா?
- Sports
சந்திரா.. அவங்க 2 பேரையும் பாத்துக்கோ.. டெஸ்ட் கிரிக்கெட்டை ஆளப்போறங்க.. சேவாக் சொன்ன ஆருடம்
- Finance
ஆர்பிஐ அறிவித்த 30,307 கோடி ரூபாய் ஈவுத்தொகை.. மத்திய அரசு கணிப்பு என்ன தெரியுமா..?!
- Automobiles
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டோங்கோ தீவு: சரியான நேரத்தில் உதவிக்கரம் நீட்டும் எலான் மஸ்க்.! எப்படி தெரியுமா?
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பேரழிவை சந்தித்த டோங்கா நாட்டுக்கு பல நாடுகள் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது. குறிப்பாக அங்கு தொலைத்தொடர்பு மற்றும் இணை சேவை முழுவதுமாக முடங்கி போயுள்ளது. இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் அங்கு இணைய சேவை வழங்க முன்வந்துள்ளார் எலான் மஸ்க்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவுகளில் ஒன்றான டோங்கா தீவில் எரிமலைகள் பிரமாண்டமாக வெடித்து சிதறியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் காரணமாக சுமார் 20 கிலோமீட்டர் வரையிலும் சாம்பல் மற்றும் புகை மண்டலம் பரவியது. குறிப்பாக இதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக இந்த இயற்கை பேரழிவினால் அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக அங்கு பல பகுதிகள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தன. மேலும் அங்கு விமான நிலைய ஓடுபாதை சாம்பலால் மூடி இருந்தது. பின்பு அதை இப்போதுதான் அகற்றி உள்ளனர். இதை தொடர்ந்து அந்த நாட்டுக்கு பல நாடுகள் நிவாரண பொருட்கள் வழங்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளன.

அதேபோல் டோங்கோ தீவின் தலைநகரில் இருந்து சுமார் 64 கிமீ தொலைவில் இந்த எரிமலை காணப்படுவதால் டோங்கோநாட்டிற்கு இது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியது. எரிமலை வெடித்து சிதறியதன் மூலம் ஏற்பட்ட அதிர்வு பல கிமீ தொலைவில் உள்ள நாடுகளிலும் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 12 ஆதரவோடு வரும் விவோ ஒய்75 5ஜி- ஜனவரியில் இந்தியாவில்., இந்தமுறை அந்த நடிகர்தான்?

மேலும் எரிமலை வெடிப்புக்கு பின்பு டோங்கோ எவ்வளவு உக்கிரமாக பாதிக்கப்பட்டுள்ளது என சில செயற்கைகோள் படங்கள் மூலம்
தெரிந்துகொள்ள முடிகிறது. அதிலும் அந்த நாட்டின் தலைநகரமான நுகுஅலோஃபா அடர்த்தியான பழுப்பு சாம்பலால் சூழ்ந்துள்ளது
தெளிவாகத் தெரிகிறது.

குறிப்பாக அந்த நாட்டில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை முழுவதுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில் உலகின்
மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் அவர்கள், தனக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் அங்கு இணைய சேவை வழங்க முன்வந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ஸ்டார்லிங் திட்டத்தின் மூலம் இணைய சேவையை மீண்டும் வழங்க வேண்டுமானால்டோங்கோ மக்கள் எங்களிடம் தெரிவிக்கலாம் என எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.200-க்கு கீழ் கிடைக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அருமையான ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

அதேபோல் எரிமலையால் பாதிக்கப்பட்ட டோங்கோ தீவுகளில் தொலைத்தொடர்பு சேவையை மீணடும் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் இணைய சேவையை தொடங்க குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகும் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தான் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999