சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு., இதை கொடுக்கும் வரை டுவிட்டரை வாங்க மாட்டேன்: ஜகா வாங்கும் எலான் மஸ்க்!

|

டுவிட்டரில் 5 சதவீதம் மட்டுமே ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான முறையான ஆவணங்களை மஸ்க் கேட்டு மஸ்க் வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து மஸ்க் தெரிவித்த கருத்துக்களை விரிவாக பார்க்கலாம். டுவிட்டர் தளத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவான ஸ்பேம் கணக்குகள் மட்டுமே இருக்கிறது என குறிப்பிடப்படுகிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் தற்போது வரை முறையாக சமர்பிக்கப்படவில்லை. குறைந்த விலையில் ஒப்பந்தம் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. ஒருவர் குறிப்பிடுவதை விட மோசமான ஒன்றுக்கு நீங்கள் அதே விலையை கொடுத்து வாங்க முடியாது என குறிப்பிட்டிருக்கிறார்.

9.2% பங்குகளை கைவசம் வைத்திருந்த மஸ்க்

9.2% பங்குகளை கைவசம் வைத்திருந்த மஸ்க்

எலான் மஸ்க் டுவிட்டரில் மிக பிரபலமானவர். எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவது உறுதி செய்யப்படுவதற்கு முன்பே டுவிட்டரின் 9.2% பங்குகளை மஸ்க் தன் கைவசம் வைத்திருந்தார். மஸ்க் டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட இருந்த நிலையில் டுவிட்டரின் ஆதார ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன.

5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள்

5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள்

இதில், டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் டுவிட்டரில் மஸ்க்கை பின்தொடர்பவர்களில் பாதி பேர் போலியானவர்கள் சமீபத்திய தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் மஸ்க் டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை இதுவரை பார்க்கவில்லை என குறிப்பிட்டார்.

20 முதல் 25% வரையிலான ஆட்டோமேட்டட் கணக்குகள் இருக்கலாம்

20 முதல் 25% வரையிலான ஆட்டோமேட்டட் கணக்குகள் இருக்கலாம்

மேலும் டுவிட்டரில் 20 முதல் 25% வரையிலான ஆட்டோமேட்டட் கணக்குகள் இருக்கலாம் என கணக்கிப்படுவதாக குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வரை டுவிட்டரை வாங்கப் போவதில்லை என மஸ்க் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரை மஸ்க் வாங்குவது உறுதி செய்யப்பட்ட உடன் டுவிட்டரின் பங்கு சரிவை சந்தித்தது. இதையடுத்து டுவிட்டரை வாங்குவதாக மஸ்க் அறிவித்தபோது இந்த பங்கு மதிப்பு தற்போது இல்லை. எனவே மஸ்க் டுவிட்டரை குறைந்த விலையில் வாங்க முயற்சிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கிறது.

டுவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் தெரிவித்த கருத்து

டுவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் தெரிவித்த கருத்து

முன்னதாக டுவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் தெரிவித்த கருத்து குறித்து பார்க்கையில், ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் 5% என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கணக்கு குறித்து பார்க்கையில், இது 2013 ஆம் ஆண்டில் இருந்தபடியே தற்போதும் இருக்கிறது. ஸ்பேம் கணக்குகளை பொது மற்றும் தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்தி வெளிப்படியாக உருவாக்க முடியாது. எந்த கணக்குகள் எம்டிஏயூஎஸ் ஆக கணக்கெடுக்கப்படும் என்பது அறிவது சாத்தியமற்ற செயலாகும் என குறிப்பிட்டிருக்கிறார். பராக் அகர்வால் டுவிட்டுக்கு மஸ்க் ஒரே ஒரு பூப் எமோஜியை பதிவிட்டு டுவிட் செய்திருக்கிறார். மேலும் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் 5% என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கான ஆதாரம் அளிக்கப்படாத பட்சத்தில் விளம்பரதாரர்கள் கொடுக்கும் பணத்திற்கு என்ன கிடைக்கும் என்பதை எப்படி அவர்கள் அறிந்துக் கொள்வார்கள், நிதி நிலைமை ஆரோக்கியம் என்பது அவசியம் என மஸ்க் பதிலளித்திருக்கிறார்.

டுவிட்டரில் பாட்கள் மற்றும் ஆட்டோமேட்டட் கணக்குகள்

டுவிட்டரில் பாட்கள் மற்றும் ஆட்டோமேட்டட் கணக்குகள்

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்து மஸ்க் தெரிவிக்கையில், டுவிட்டரில் பாட்கள் மற்றும் ஆட்டோமேட்டட் கணக்குகள் 20 முதல் 25 சதவீதம் வரை இருக்கலாம் என தெரிவித்திருக்கிறார். டுவிட்டர் தளத்தில் இதுகுறித்து அறிய மென்பொருள் பரிசோதனை செய்ய வேண்டும். ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் 5% கீழ் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் ஆதாரம் எதுவும் தற்போது வரை பார்க்கவில்லை என மஸ்க் குறிப்பிட்டு இருக்கிறார்.

டுவிட்டரில் பணி நீக்க நடவடிக்கை

டுவிட்டரில் பணி நீக்க நடவடிக்கை

டுவிட்டர் சிஇஓ பராக் அகர்வால், டுவிட்டரில் முக்கிய பணிகளில் உள்ள நிர்வாகிகளை பணி நீக்கம் செய்து வருகிறார். இதையடுத்து டுவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிஇஓ பராக் அகர்வால் இதற்கு விளக்கமளித்து இருக்கிறார். கடந்த சில வாரங்களாகவே நிறைய நடந்து வருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சியிலேயே நான் கவனம் செலுத்தி வருகிறேன். இதற்கு முன்பு வரை இல்லாத அளவிற்கு பகிரங்கமாக இப்போது நான் சொல்கிறேன். வதந்திகள் பரப்புவது என்பது எப்போதும் சரியல்ல, தலைமை குழு செயல்பாடுகள் மாற்றங்களை அறிவித்து வருகிறோம். மக்களை பாதிக்கும் மாற்றம் என்பது கடினமானவையே, நிறுவனம் கையகப்படுத்தப்படும் பட்சத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து நன்கு அறிவோம்.

அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயார்

அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயார்

அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாராகவே இருக்க வேண்டும். டுவிட்டரை சிறந்த தயாரிப்பாக வணிகத்திற்கான சிறந்த தளமாக மேம்படுத்தி வருகிறோம். நிறுவனத்தின் எதிர்கால தலைமை என்பதை பொருட்படுத்தாமல் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டுவிட்டருக்கு சரியானவற்றை செய்வதிலேயே எனது எண்ணம் இருக்கிறது. டுவிட்டரை இயக்குவதற்கு தற்போதும் நான்தான் பொறுப்பாளி. ஒவ்வொரு தினமும் வலுவான டுவிட்டர் உருவாக்குவது என்பதே தங்களின் நோக்கம். தலைமை மாறினாலும் டுவிட்டரில் முடிவுகள் எடுப்பதில் தனக்கு தடங்கள் இருக்காது, நிறுவனத்தின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு எந்த முடிவுகளை எடுக்கவும் தான் தயங்க மாட்டேன். என பராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான பணியமர்த்தல் இடை நிறுத்தம்

பெரும்பாலான பணியமர்த்தல் இடை நிறுத்தம்

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், டுவிட்டரில் பணிபுரிந்து வந்த இரண்டு முக்கிய நிர்வாகிகளை பணி நீக்கம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எலான் மஸ்க் உலகளாவிய செய்தியிடல் தளமான டுவிட்டரின் புதிய உரிமையாளராக ஆவதற்கு தயாராக இருப்பதால், பெரும்பாலான பணியமர்த்தல் இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. டுவிட்டரின் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் பொறியியலுக்கு தலைமை தாங்கும் பொது மேலாளரான கேவோன் பெய்க்பூர், தயாரிப்புகளின் தலைவர் ப்ரூஸ் பால்க் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Elon Musk Not Going Buy Twitter Until Clarify Number on Spam Accounts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X