Home
News

மனித மூளையில் கணினி சிப்: மனித குலத்தின் அடுத்த முன்னேற்றம்., பன்றி மீது சோதனை!

மனிதனின் மூளையை இயந்திங்களோடு நேரடியாக இணைக்கும் தொழில்நுட்ப முயற்சியை எலோன் மஸ்க்-ன் நியூரோலிங்க் ஆராய்ந்தது. இதன் முதற்கட்ட சோதனை குறித்தும் செயல்பாட்டின் முழுவிவரங்கள் குறித்தும் பார்க்கலாம்.

எலோன்மஸ்க்-ன் நியூரலிங்க்

எலோன்மஸ்க்-ன் நியூரலிங்க்

எலோன்மஸ்க்-ன் நியூரலிங்க், மனித மூளைக்குள் கணினி சிப்களை பொருத்தும் நடவடிக்கை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வந்தது. நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய உள்வைப்புகளை உருவாக்குவதே இதன் குறிக்கோள் ஆகும். இந்த முயற்சி வெற்றி பெறும்பட்சத்தில் மனிதகுலத்தை எதிர்காலத்தில் சூப்பர் புத்திசாலித்தனமான கணினிகளுடன் இன்னும் அதிக அளவில் நிலைநிறுத்தும் சக்திவாய்ந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி

உலகம் அடுத்ததடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறது. முன்னற்றம் என்பது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை வைத்தே கணிக்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல. வளரும் தொழில்நுட்பங்கள் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறது.

2016 ஆம் ஆண்டு தொடக்கம்

2016 ஆம் ஆண்டு தொடக்கம்

இந்த நிலையில் எலோன் மஸ்க்-ன் நியூரோலிங்க் நிறுவனம், 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மனிதனின் மூளையை இயந்திங்களோடு நேரடியாக இணைக்கும் தொழில்நுட்ப முயற்சியை ஆராய்ந்தது.

மனித மூளையில் சிப்

மனித மூளையில் சிப்

மனிதனில் மூளையில் சிப் வைக்கும் முயற்சியின் முன்னோட்ட நடவடிக்கையின் முதற்கட்டமாக பன்றியின் மூளையில் கணினி சிப் வைத்து 2 மாதங்களாக ஆய்வு செய்யப்பட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

8 மிமீ அளவு கொண்ட கணினி சிப்

8 மிமீ அளவு கொண்ட கணினி சிப்

பன்றியின் மூளையில் இரண்டு மாதங்களாக 8 மிமீ அளவு கொண்ட கணினி சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிப் பொருத்தப்பட்ட பன்றிக்கு இரண்டு மாதங்களாக எந்தவித உடல் நலக் குறைவும் ஏற்படவில்லை. சிப் பொருத்தப்பட்ட நாளில் இருந்தே பன்றி நலமுடனே காணப்பட்டுள்ளது.

சிக்னல்கள் கம்யூட்டர் மூலம் ஆய்வு

சிக்னல்கள் கம்யூட்டர் மூலம் ஆய்வு

பன்றியின் மூளையில் பொருத்தப்பட்ட சிப் மூலம் பன்றியின் நடவடிக்கையில் உருவாகும் சிக்னல்களை கம்யூட்டர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. நியூரோலிங்க் பதிவு செய்யப்பட்ட சிக்னல்களையும், பன்றியையும் வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு கட்டத்திற்கு முன்னேற்றும்

பல்வேறு கட்டத்திற்கு முன்னேற்றும்

கம்பியூட்டர் சிப் பொருத்தம் இந்த பரிசோதனையானது விலங்குகளோடு ஒப்பிடுகையில் மனிதர்களும் கடும் சவாலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி பெரும் வெற்றி மனித வளர்ச்சியை அடுத்த கட்டமல்ல பல்வேறு கட்டத்திற்கு முன்னேற்றும் என கூறப்படுகிறது.

அதிநவீன ரோப்போகளின் உதவியோடு

அதிநவீன ரோப்போகளின் உதவியோடு

மனித மூளையில் சிப் பொருத்துவதற்கு உரிய ஒப்புதல் பெற்று, அதிநவீன ரோப்போகள் உதவியுடன், மனிதர்களின் தலைமுடியைவிட சிறய கம்யூட்டர் சிப்கள் மனிதன் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு பகுதியில் பொருத்தும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு சோதனை நடத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

நரம்பியல் பிரச்சனை தொடர்பான கோளாறுகள்

நரம்பியல் பிரச்சனை தொடர்பான கோளாறுகள்

மனிதர்கள் மீதான செயல்படுத்தப்படும் இந்த ஆராய்ச்சி வெற்றி பெறும் பட்சத்தில் இது மூளையில் உள்ள கம்ப்யூட்டர் சிப்கள் மூலம் இயந்திரங்களை நேரடியாக கட்டுபடுத்தவும் உடலின் தோன்று நரம்பியல் பிரச்சனை தொடர்பான கோளாறுகள், முதுகுத் தண்டுவட பிரச்சனைகள் குணப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

source: ctvnews.ca

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musks Neuralink Shows Implant Computer Chip in Pig Brain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X