அந்த வயசுலேயே அவரு அப்படி: நம்ப முடியாத மதிப்பெண்., மஸ்க்கை மறுபரிசீலனை செய்யனும்: எலான்மஸ்க் தாயின் டுவீட்!

|

மேய் மஸ்க் அவ்வப்போது எலோன் மஸ்க்கின் சிறுவயது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். அதன்படி இப்போது எலான் மஸ்க் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

எலான் மஸ்க் தாயார் மேய் மஸ்க்

எலான் மஸ்க் தாயார் மேய் மஸ்க்

உலக பணக்காரர்களில் முன்னிலை வகிக்கும் எலான் மஸ்க் தாயார் மேய் மஸ்க். எலான் மஸ்க்கின் இளம் வயது கணினி திறனாய்வு பரிசோதனையின் முடிவை தற்போது அவரது தாயார் வெளியிட்டுள்ளார். சான்றிதழோடு பதிவிட்ட இந்த டுவிட்டர் பதிவு ஏணைய லைக்குகளை பெற்று வருகிறது.

மேய் மஸ்க் பதிவிட்ட டுவிட்டர்

மேய் மஸ்க் பதிவிட்ட டுவிட்டர்

மேய் மஸ்க் பதிவிட்ட டுவிட்டர் பதிவு தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக தகவல் மேலான்மை இயக்கனர் கையெழுத்திட்ட கடிதத்தோடு இருக்கிறது. எலான் மஸ்க் தனது 17 வயதில் கனடாவுக்கு செல்வதற்கு முன்பு கலந்து கொண்ட கணனி திறனாய்வு தேர்வு இதுவாகும்.

1989 என்ற வருட குறிப்போடு இருந்த கடிதம்

1989 என்ற வருட குறிப்போடு இந்த கடிதம் இருக்கிறது. இதில் நீங்கள் 17 வயதில் கணினி திறனாய்வு சோதனையை கண்டேன். சரியாக நினைவில் இருந்தால், அவர்கள் இவ்வளவு அதிக மதிப்பெண்கள் பார்த்ததில்லை எனவே உங்களை மறுபரீசிலனை செய்ய வேண்டியிருந்தது. எனவே நீங்கள் ஒரு சிறந்த பொறியியலாளர் என்பதில் ஆச்சரியமில்லை என பதிவிட்டுள்ளார்.

கணினி திறனாய்வு சோதனைகள்

1989 தேதியிட்ட கடிதத்தில் கணினி நிரலாக்கத்தை பற்றி எலான்மஸ்க் மீது திறனாய்வு சோதனைகளை நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் முடிவுகள் நிலுவையில் இருந்தது எனவும் 17 வயதிலேயே தங்களது கணினி திறனாய்வு சோதனைகளை தான் கண்டேன் எனவும் நீங்கள் ஒரு சிறந்த பொறியியலாளர் என்பதில் ஆச்சரியம் இல்லை எனவும் கூறினார்.

மேய் மஸ்க் பதிவிட்ட டுவிட்டர் பதிவு

மேய் மஸ்க் பதிவிட்ட டுவிட்டர் பதிவில் #ProudMom என்ற ஹேஸ்டேக் உடன் பதிவிட்டுள்ளார். இந்த டுவிட் 154 கே லைக்குகளுக்கு மேல் பெற்று வருகிறது. மேலும் 13 கே மேல் மேற்பட்ட ரீடுவிட் பெற்று வருகிறது. மேய் மஸ்க் அவ்வப்போது இதுபோன்ற எலான்மஸ்க் குறித்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார். தோல்வி அடையும் போது இவர் பெரும்பாலும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை, இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான்.

அனைத்துமே வெற்றிகரமான தோல்விதான்

அனைத்துமே வெற்றிகரமான தோல்விதான்

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். சமீபத்தில் இதற்கான முன்மாதிரி விண்கலம் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது விண்கலம் வெடித்து சிதறியது. இந்த நிகழ்வு பல்வேறு விவாதங்களுக்கு உட்பட தொடங்கிய நிலையில் எலான் மக்ஸ் கூலாக இது வெற்றிகரமான தோல்வி, தோல்வி அடைய கூடாது என்பதற்கான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என தெரிவிப்பார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Elon Musk Mother Shares His Computer Aptitude Test Score

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X