அப்புறம் என்ன Elon Musk ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதானே: டிம் குக் தெளிவாக சொல்லிட்டாரு.!

|

எலான் மஸ் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய நாள் முதல் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். தற்போது எந்த பக்கம் திரும்பினாலும் எலான் மஸ்க் செய்யும் காரியம் தான் பேசு பொருளாக இருக்கிறது.

 நம் நினைவுக்கு முதலில் வருவது?

நம் நினைவுக்கு முதலில் வருவது?

குறிப்பாக Elon Musk என்று கூறியதும் நம் நினைவுக்கு முதலில் வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்கள் தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளைக் கண்டுள்ளார்.

குறிப்பாக இவர் தோல்வி அடையும் போது உச்சரிக்கும் வார்த்தை என்னவென்றால், இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான். அதேபோல் ட்விட்டர் நிறுவனத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல இவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Bluebugging Attack: மொபைல் பயனர்கள் மத்தியில் பீதியை கிளப்பும் ப்ளூபக்கிங்! தெரியாமல் கூட இதை செஞ்சிடாதீங்க!Bluebugging Attack: மொபைல் பயனர்கள் மத்தியில் பீதியை கிளப்பும் ப்ளூபக்கிங்! தெரியாமல் கூட இதை செஞ்சிடாதீங்க!

 புளூ டிக் பெற கட்டணம்

புளூ டிக் பெற கட்டணம்

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி கையோடு புளூ டிக் பெற கட்டணம், ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வது, விளம்பரதாரர்களைப் புறக்கணிப்பது எனப் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் ஐ ஸ்டோரில் இருந்து ட்விட்டர் செயலியை ஆப்பிள் நிறுவனம் நிரந்தரமான நீக்க உள்ளதாகக் குறிப்பிட்டு எலான் மஸ்க் போட்டி ட்வீட் ஒன்று பயனர்களைப் பதற வைத்தது.

மனித மூளையில் பொருத்தும் சிப் தயார்! மனித குலத்துடன் விளையாட போகும் Elon Musk.. ரெடியா இருங்க?மனித மூளையில் பொருத்தும் சிப் தயார்! மனித குலத்துடன் விளையாட போகும் Elon Musk.. ரெடியா இருங்க?

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்

அதாவது ட்விட்டர் தளத்தில் ஆப்பிள் நிறுவனம் விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்டதாகவும், விரைவில் ஆப்பிள் ஆப் ஸ்டேரில் இருந்தும் கூட ட்விட்டர் செயலியை நீக்கப்போகிறார்கள் என்று ட்வீட் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் மஸ்க்.

5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?

இதுதவிர அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் இருப்பதை ஆப்பிள் நிறுவனம் சுத்தமாக வெறுக்கிறதாக என குறிப்பிட்டு அதன் சி.இ.ஓ டிம் குக்கை டேக் செய்து பதிவிட்டார். குறிப்பாக அவர் எழுதிய பதிவில், உலகில் மிகப்பெரிய சந்தையாக இருக்கும் ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டரை நீக்கிவிடுவதாக ஆப்பிள் நிறுவனம் மிரட்டுகிறது. இதற்கு என்ன காரணம் என ஆப்பிள் கூறவில்லை எனப் பதிவிட்டார்.

பின்வாங்க மாட்டேன்

பின்வாங்க மாட்டேன்

அடுத்து கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ட்விட்டர் செயலியை நீக்கினால் அதற்குப் போட்டியாக சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிப்பதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூட ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் எலான்.

இந்நிலையில், நேற்று கலிஃபோர்னியாவில் இருக்கும் ஆப்பிள் நிறுவன தலைமையகத்தில் அதன் சிஇஒ டிம் குக் அவர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் எலான் மஸ்க்.

ரூ.3000 பட்ஜெட்டில் எக்கச்சக்க அம்சங்களுடன் அறிமுகமான புதிய ஸ்மார்ட்வாட்ச்: தாராளமா வாங்கலாம்.!ரூ.3000 பட்ஜெட்டில் எக்கச்சக்க அம்சங்களுடன் அறிமுகமான புதிய ஸ்மார்ட்வாட்ச்: தாராளமா வாங்கலாம்.!

நீக்கம் செய்யப்படாது

நீக்கம் செய்யப்படாது

பின்பு ஆப்பிள் தலைமையகத்தில் டிம் குக்கை சந்தித்ததை குறித்து எலான் மஸ்க் ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் நல்ல உரையாடல். மற்றதைக் காட்டிலும் ட்விட்டர் பற்றிய தவறான புரிதலை தீர்த்துவிட்டோம். அப்படியெல்லாம் ஒருபோதும் செய்யமாட்டோம் என்று டிம் குக் தெளிவாக கூறிவிட்டார் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அதாவது ஆப்பிள் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் செயலியை ஒருபோதும் நீக்கம் செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வரூபம் எடுத்த YouTube: இந்தியாவில் 1.7 மில்லியன் வீடியோக்கள் டெலிட்! இனி தேடினாலும் சிக்காது..விஸ்வரூபம் எடுத்த YouTube: இந்தியாவில் 1.7 மில்லியன் வீடியோக்கள் டெலிட்! இனி தேடினாலும் சிக்காது..

இனி பல்வேறு மாற்றங்கள் வரும்

இனி பல்வேறு மாற்றங்கள் வரும்

அதேபோல் ட்விட்டர் தளத்தில் இனி பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது புதிய அம்சங்கள் அதிகமாக வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Elon Musk Meets Apple CEO Tim Cook: Apple Will Never Delete Twitter App: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X