ஜெப் பீசோஸின் மூன் லேண்டர் பற்றி ஆபாச ஜோக் கூறிய எலன் மஸ்க்!
இருப்பினும் அவ்விரு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் ஒன்றாக சேர்ந்து நன்றாக செயல்பட்டதாக வரலாறே இல்லை.
டெஸ்லா மற்றும் ப்ளூ ஆரிஜின் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே விண்வெளியின் மிகப்பெரிய திட்டங்களை வகுத்துவைத்துள்ளன. அது நிலவுக்கு செல்வதாயினும், செவ்வாய் அல்லது அதற்கு அப்பாலும் பயணிப்பதாக இருந்தாலும் சரி.

இருப்பினும் அவ்விரு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் ஒன்றாக சேர்ந்து நன்றாக செயல்பட்டதாக வரலாறே இல்லை. அது இந்த வாரம் தொடர்ந்து, ஜெப் பீசோஸின் புதிய விண்கலத்தைப் பற்றி எலன் மஸ்க் கேலி செய்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, ப்ளூ ஒரிஜின் நிறுவனம் 'ப்ளூ மூன்' என்றழைக்கப்படும் அதன் முதல் மூன் லேண்டரின் புகைப்படம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்புதல் மற்றும் அங்கு தண்ணீர் மற்றும் கனிமங்களுக்கான ஒரு சுரங்க நிறுவனத்தை அமைக்கும் பீசோஸின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
எனினும் மஸ்க்-ஆல் தனது போட்டியாளருடன் ட்விட்டரில் கேலி செய்வதை தவிர்க்க முடியவில்லை!. கடந்த காலங்களில் அவர் சமூக வடிப்பான்கள், பொது அறிவு, மற்றும் எப்போதாவது கூட உண்மையை உணர்ந்து பேசாதது என முழுமையான ஏதும் இல்லாத செயல்பாடுகளால் இது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக தோன்றவில்லை.
எனவே ப்ளூ ஆரிஜன் நிறுவனம் வெளியிட்ட படத்தை மாற்றியமைக்க முடிவு செய்த அவர், அதை ஒரு கீழ்த்தரமான ஜோக்காக மாற்றினார்.

ஆமாம்! அவர் ஒரு பில்லியனராக உள்ள தலைமை நிர்வாக அதிகாரி, ஆயிரக்கணக்கான ஊழியர்களின் முதலாளி, தன்னம்பிக்கை கொண்ட விண்வெளி முன்னோடி என்றெல்லாம் புகழப்படக்கூடியவர், விண்வெளி துறையில் தனது எதிர்ப்பாளர்களை சிறுமைப்படுத்துவதற்காக, ஆண்களின் பிறப்பறுப்பு தொடர்பான ஆபாச கருத்துகளை பயன்படுத்தி முயற்சிக்கிறார். இதையும் நியாப்படுத்தும் அவரது இரசிகர்களை என்னவென்று சொல்வது!


Click it and Unblock the Notifications