1000 ரூபாய்க்கு 1 ரூபாய் கம்மி: இது எப்படி இருக்கு! Twitter பயனர்களுக்கு மஸ்க் வைத்த செக்.!

|

பல தோல்வியுற்ற முயற்சிகளுக்கு பிறகு எலான் மஸ்க் இறுதியாக Twitter ப்ளூ சந்தா சேவையை பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தி உள்ளார். ப்ளூ டிக் உள்ளிட்ட பல அம்சங்களை பயன்படுத்த பயனர்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

1000 ரூபாய்க்கு 1 ரூபாய் கம்மி: Twitter பயனர்களுக்கு மஸ்க் வைத்த செக்!

ஜாக் டோர்சி ட்விட்டரின் உரிமையாளராக இருந்த போது, சரிபார்ப்பு செயல்முறை அதாவது ப்ளூடிக் வழங்கல் என்பது எளிதாகவும் தெளிவாகவும் இருந்தது. ப்ளூடிக் சேவைக்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய தேவையும் இருந்ததில்லை. ஆனால் ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், இதில் இருந்து வேறுபட்ட கருத்துகளை கொண்டிருக்கிறார். ப்ளூடிக் சேவையில் பெரிய மாற்றங்களை செய்திருக்கிறார் எலான் மஸ்க்.

ட்விட்டரின் ப்ளூடிக் சேவைக்கு சந்தா கட்டணம் என்ற முறையை கொண்டு வருவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதை செயல்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து இந்த முடிவில் பின்வாங்கி வந்தார். இந்த நிலையில் பல தோல்வியுற்ற முயற்சிகளுக்கு பிறகு ப்ளூடிக் சந்தா கட்டணத்தை செயல்படுத்தி இருக்கிறார் மஸ்க்.

உலகளவில் ஆண்ட்ராய்டுக்கான ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை $8 முதல் கிடைக்கிறது. அதேபோல் iPhone பயனர்களுக்கு $11 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஐபோன் பயனர்கள் ட்விட்டர் ப்ளூ சந்தா சேவைக்கு ரூ.999 செலுத்த வேண்டும். இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த சந்தா சேவையானது ப்ளூ டிக், 1080 பிக்சல் வீடியோக்கள் பதிவிடும் திறன், ட்வீட் திருத்தம் உள்ளிட்ட பல ப்ரீமியம் அம்சங்களுக்கான அணுகலை பயனர்களுக்கு வழங்குகிறது.

ப்ரீமியம் ட்விட்டர் ப்ளூ அம்சங்களை அணுக ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் எவ்வளவு செலுத்த வேண்டும் என்ற விவரத்தை பார்க்கையில், ட்விட்டர் ப்ளூ அம்சத்தை பெறுவதற்கு ஐஓஎஸ் பயனர்களை விட ஆண்ட்ராய்ட் பயனர்கள் குறைவாகவே கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

1000 ரூபாய்க்கு 1 ரூபாய் கம்மி: Twitter பயனர்களுக்கு மஸ்க் வைத்த செக்!

ஆண்ட்ராய்டில் பயனர்கள் ப்ளூ டிக் சேவைக்கு மாதம் $8 செலுத்த வேண்டும். அதேபோல் iOS பயனர்கள் சேவையைத் தொடங்குவதற்கு $11 செலுத்த வேண்டும். ஐபோன் பயனர்களுக்கு மட்டும் ஏன் அதிகத் தொகை என்ற விவரத்தை நிறுவனம் எதுவும் விளக்கவில்லை. ஆனால் ஆண்ட்ராய்ட் பயனர்களை விட ஐஓஎஸ் பயனர்கள் $3 அதிகமாக செலுத்த வேண்டும்.

அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் 'ப்ளூ டிக்' பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் ப்ளூ டிக் இருக்கும்.

இந்த நிலையில் ப்ளூடிக் சேவையில் பல கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. அதாவது ப்ளூ டிக், 1080 பிக்சல் வீடியோக்கள் பதிவிடும் திறன், ட்வீட் திருத்தம் உள்ளிட்ட பல ப்ரீமியம் அம்சங்களுக்கான அணுகல் வழங்கப்பட இருக்கிறது. ஆனால் இதில் ட்விட்டர் எடிட் அம்சம் இடம்பெறாது என கூறப்படுகிறது. காரணம் மஸ்க் ட்விட்டர் எடிட் அம்சத்தை அனைத்து பயனர்களுக்குமானதாக அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ட்விட்டர் கட்டணம் குறித்த தகவலை முன்னதாக நிறுவனம் ட்வீட் மூலம் வெளியிட்டது. அதில் "நாங்கள் @TwitterBlue ஐ மீண்டும் தொடங்குகிறோம் - ப்ளூ டிக் உள்ளிட்ட அணுகலை பெறுவதற்கு ஆண்ட்ராய்டு பயனர்கள் $8/மாதம் மற்றும் iOS பயனர்கள் $11/மாதம் என செலுத்த வேண்டும் என ட்வீட்டில் தெரிவித்தது. அதன்படி பல்வேறு தோல்வியுற்ற முயற்சிகளுக்கு பிறகு ட்விட்டரில் மீண்டும் கட்டண சேவை அதிகாரப்பூர்வமாக கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Elon Musk Led Twitter: Rs.999 For iPhone Users to get blue tick subscription in Twitter, What about Android Users?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X