WhatsApp கதை முடிந்தது.. XChat அறிமுகம் செய்த எலான் மஸ்க்.. அசரவைக்கும் சூப்பர் அம்சங்கள்..
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனத்துக்கு போட்டி கொடுக்கும் வகையில் XChat எனும் மெசஞ்சர் சேவையை அறிமுகம் செய்துள்ளார் எலான் மஸ்க். அதுவும் எலான மஸ்க் அறிமுகம் செய்துள்ள இந்த சேவையின் முக்கிய அம்சம் என்னவென்றால், பயனர்களின் பாதுகாப்பிற்கும், தனிப்பட்ட தகவல்களின் ரகசியத்திற்கு அதிக முக்கியத்து கொடுப்பது தான்.
தற்போது எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, XChat சேவை ஆனது தற்போது ஐபோன் (IOS) மற்றும் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் இணையப் பதிப்புகளில் வெளிவரத் தொடங்கியுள்ளது. ஆனால் கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு (Android) போன்களில் இந்த சேவை அறிமுகமாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் உங்களுடைய பழைய டைரக்ட் மெசேஜ்களும்(DMs), புதிய XChat சேவையும் இப்போது எக்ஸ் செயலியின் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது ஆகவே எக்ஸ்சாட்-ஐ பயன்படுத்த உங்கள் X செயலியை உடனே அப்டேட் செய்து கொள்ளுங்கள் என நிறுவனம் கூறியுள்ளது.
ஜூன் மாதமே இந்த XChat சேவையைப் பற்றிக் கூறி இருந்தார், அப்போது பயனர்கள் தங்கள் தனிப்பட்ட செய்திகளை மிகவும் பாதுகாப்பாக பரிமாற்றிக் கொள்ளவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற மெசேஜிங் செயலிகளை விடப் பல படிகள் முன்னேறி, பிட்காயின் போன்ற மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த எக்ஸ்சாட் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அதுவும் Rust என்று அழைக்கப்படும் அதிவேகமான மற்றும் பாதுகாப்பான கம்ப்யூட்டர் மொழியில் தான் இந்த XChat உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீங்கள் அனுப்பும் செய்தியை, அனுப்புபவரும், பெறுபவரும் மட்டுமே பார்க்க முடியும். வேறு யாராலும் இதைப் பார்க்க முடியும். எக்ஸ் தளம் நினைத்தாலும் நீங்கள் அனுப்பும் செய்தியைப் பார்க்க முடியும்.
அதேபோல் நீங்கள் அனுப்பும் செய்திகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, தானாகவே மறைந்து போகும் வசதியும் கூட இதில் உள்ளது. அதிலும் நீங்கள் எவ்வளவு நேரத்தில் மறைய வேண்டும் என்பதை செட் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
XChat சேவையில் போட்டோ, வீடியோ, டாக்குமெண்ட் (Photos, Videos, Documents) என அனைத்தையும் எளிதாக அனுப்பலாம். குறிப்பாக இந்த எக்ஸ் தளத்தில் யாருக்கும் போன் நம்பர் கொடுக்காமல் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதுதவிர பல சிறப்பான வசதிகள் இந்த XChat சேவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த XChat ஆனது தற்போது அனைவருக்கும் பயன்படுத்தக் கிடைத்தாலும், இதன் சில முக்கிய வசதிகள் பிரீமியம் சந்தா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த சேவையில் அதிக அளவில் சேமிப்பு வசதி, முன்னுரிமை உதவி மற்றும் பல புதிய அம்சங்கள் பயன்படுத்தும் வாய்ப்பு கட்டணம் செலுத்தும் பயனர்களுக்கும் கிடைக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
வாட்ஸ்அப் மற்றும் சீனாவில் மிகவும் பிரபலமாக உள்ள WeChat போன்ற பிரபலமான செயலிகளுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் XChat அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த XChat சேவையில் இன்னும் அதிகமான அம்சங்கள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் வரும் காலங்களில் வாட்ஸ்அப் செயலியை விட XChat சேவைக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








