டிவிட்டர் கணக்கை டிலீட் செய்த எலன் மஸ்க்! சிறுபிள்ளைத்தனமான கோபம்.!
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க் மற்றொரு வெளிப்படையான கோபம் மற்றும் விரத்தி களியாட்டத்தை நிகழ்த்தியுள்ளார்.
அவர் அமைதியான நடத்தை அல்லது பகுத்தறிவு சிந்தனை செயல்முறை உள்ளவராக எப்போதும் அறியப்படவில்லை.ஆனால்அவர் இன்னும் எப்படியாவது மோசமாகி வருகிறார்.

கணக்கை நீக்கிவிட்டதாக ட்வீட் செய்தார்
இந்த பிரச்சனையின் ஒரு பகுதியாக நாம் அவர் ஏங்கிகிடக்கும் கவனத்தை அவருக்கு கொடுக்கிறோம். தற்போதைய இந்த உதாரணத்தை நாம் பார்ப்பதற்கு முன்னர் இதற்கு சில பின்னணியை அறிந்துகொள்ள வேண்டும். மஸ்க் அவரது ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டதாக ட்வீட் செய்தார்.

வாக்குவாதத்தை நிகழ்த்தியிருந்தார்
ஏன்? ஏனெனில் அதற்கு முன்பாக அவர் சில கலைப்படைப்புகளைப் பற்றி டிவிட்டர் தளத்தில் வாக்குவாதத்தை நிகழ்த்தியிருந்தார். இப்போது இந்த ட்வீட்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஸ்கீரின்ஷாட்களை வழங்கிய கோடாகு-விற்கு நன்றி.
மறுத்துவிட்டார் மஸ்க்
அந்த டிவீட்-ல் மஸ்க், நியர்:ஆட்டோமாடா(Nier: Automata) என்ற கேமில் 2B கேரக்டரின் கலைநயமான ஓவியம் (Fan Art) வெளியிடப்பட்டதை பார்க்க முடியும். அந்த டிவீட்-க்கு கீழே ஒருவர் புகைப்படத்தை உருவாக்கிய கலைஞரின் பெயரை குறிப்பிட்ட வேண்டும் என கூறியதற்கு உறுதியாக மறுத்துவிட்டார் மஸ்க்.

ஓவியரின் பெயர் மெலி மகாலி
உண்மையில் அந்த ஓவியத்தை உருவாக்கியவரை கண்டறிவது மிகவும் எளிது. அந்த ஓவியரின் பெயர் மெலி மகாலி. எதனால் ஏன் அவர் அதை குறிப்பிட மறுக்கிறார்? உண்மையில் அவரிடம் மிகப்பெரிய ஈகோ உள்ளது. அவர் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் அவரிடம் சொல்லவதை மஸ்க் விரும்புவதில்லை. அவர்கள் முற்றிலும் சரியாக கூறுவதை அறிந்திருந்தாலும் அதை ஏற்பதில்லை . மற்றொரு காரணம் என்னவெனில், இதேபோன்ற மற்றொரு சண்டையில் மஸ்க் ஈடுபட்ட போது அதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. எனவே இது அவருக்கு ஏற்கனவே அடிவாங்கிய இடம் தான்.

வாதத்தால் தாக்கினார்
உண்மையில் மஸ்க் தொடந்து மன்னிப்பு கேட்க மறுத்தார். யாரும் கலைஞர்களை கண்டுபிடிக்க முடியும், அவர்களை எப்போதும் ட்விட்டரில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என தனது தனித்துவமான வாதத்தால் தாக்கினார். பின்னர் தனது அனைத்து பதில் டிவீட்கள், முதலில் பதிவிட்ட கலைப்படைப்பின் ட்வீட் என அனைத்தையும் நீக்கினார்.

கருப்பு படத்தை வைத்தார்
அதன் பின்னர் தான் இந்த விஷயங்கள் முதிர்ச்சியற்ற நிலையில் இருந்து சிறுபிள்ளைத்தனமானதாக மாறியது. தனது ட்விட்டர் பெயரை டாடி டாட் காம்( Daddy dot com) என மாற்றிய மஸ்க், அவரது சுயவிவர புகைப்படமாக (profile picture) ஒரு கருப்பு படத்தை வைத்தார். பின்னர் அவரது டிவிட்டர் கணக்கை நீக்குவதுப் பற்றி ட்வீட் செய்தார்.

கணக்கை டிலீட் செய்யவில்லை
நிச்சயமாக ட்விட்டரில் புதிதாக இணைந்தவர் கூட அவர் இன்னும் ஆன்லைனில் இருப்பதை பார்த்துவிட்டு டிவிட்டர் கணக்கை டிலீட் செய்யவில்லை என எளிதில் கூறிவிடுவார். மேலும் அவர் அதன்பிறகு ஏதுவும் டிவீட் செய்யவில்லை. ஆனால் மீண்டும் தனது டிவிட்டர் கணக்கு பெயரை எலன் மஸ்க் என மாற்றிவிட்டார்.

நீக்குவது பற்றி பதிவிட்டதும்...
உண்மையாக கூற வேண்டுமானால் அவரால் எப்போதும் டிவிட்டரை விட்டு போக முடியாது. அந்த அளவிற்கு அவர் ட்விட்டர் மூலம் கவனத்தை ஈர்ப்பதை மிகவும் நேசிக்கிறார். அவரின் மூளையற்ற பின்தொடர்பாளர்களால் தான் இவ்வாறு நடந்துகொள்கிறார். அவர் தனது டிவிட்டர் கணக்கை நீக்குவது பற்றி பதிவிட்டதும் , ஆயிரக்கணக்கானோர் அவ்வாறு செய்யவேண்டாம் என அவரை கெஞ்சி பதிவிட்டுள்ளனர். அதுதான் அவருக்கும் வேண்டும்.

5 வயது குழந்தை
நீங்கள் கேக் தராததால் 5 வயது குழந்தை தனது பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவேன் என மிரட்டுவதை போல தான் இதுவும் என வெளியிருந்து பார்ப்பவர்களும் எளிதில் புரிந்துகொள்வார்கள். அவர்களால் நிச்சயம் வெளியேற முடியாது மற்றும் நம்மை தவிர்த்து இயங்கவும் முடியாது. இதன்மூலம் நமது கவனத்தை ஈர்க்க முயல்கின்றனர்.

அவரால் தவிர்க்கமுடியாது
கிட்டத்தட்ட ஒரு நாள் ஏற்கனவே முடிந்துவிட்டது. அதாவது அவர் ஒருவேளை நாளையிலிருந்நு தீவிரமாக மீண்டும் டிவீட் செய்வார் என எதிர்பார்க்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக டிவிட்டர் ட்விட்டர் என்ற போதையை அவரால் தவிர்க்கமுடியாது, இதை மறுப்பதற்கும் அவருக்கு வழியில்லை என்பதே கசப்பான உண்மை.


Click it and Unblock the Notifications