புதுசு புதுசா யோசிக்கிறாங்க: டெக்ஸாஸில் உருவாக்கும் 'ஸ்டார்பேஸ்' விண்வெளி நகரம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

|

கடந்த சில தசாப்தத்தில், எலோன் மஸ்க் தனது ராக்கெட்டுகள், டெஸ்லா முன்னேற்றம், அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தைச் சுற்றியுள்ள விசாரணைகள் மற்றும் அவதூறு வழக்கு போன்ற பல தலைப்புச் செய்திகளைக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இப்போது ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் தெற்கு டெக்சாஸில் உள்ள போகா சிக்காவில் தனது சொந்த விண்வெளி மைய காலனியை உருவாக்கி வருகிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

எலான் மஸ்கின் சொந்த 'ஸ்டார்பேஸ்' நகரம்

எலான் மஸ்கின் சொந்த 'ஸ்டார்பேஸ்' நகரம்

மஸ்க்கின் பல விசித்திரமான யோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, இன்னும் சில விசித்திரமான காட்டுத்தனமான யோசனைகள் எல்லாம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. எலான் மஸ்கின் பதிவைப் பார்க்கும்போது, ​​மஸ்க் தனது சொந்த ஸ்டார்பேஸை உருவாக்கக் கூடிய வேலைகளைத் துவங்கிவிட்டது போல தெரிகிறது. இருப்பினும், இந்த ஸ்டார்பேஸ் பற்றிய தகவல்கள் இன்னும் உலகத்தில் உள்ள பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற ஒரு பெரிய அதிநவீன ஸ்டார்பேஸ் காலனியை தற்போது இவர் உருவாக்கி வருகிறார்.

உள்ளூர் மக்கள் கூறும் புகார்

உள்ளூர் மக்கள் கூறும் புகார்

போகா சிகா கடற்கரையில் ஸ்பேஸ் எக்ஸின் ராக்கெட் சோதனை வசதி ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. சோதனைகளின் போது பொது கடற்கரைகள் அடிக்கடி மூடப்படுவதாகவும், ஒரு சிறிய எச்சரிக்கை அடையாளம் அல்லது அறிவிப்பு வைக்கப்படுவதாகவும் மக்கள் புகார் அளித்துள்ளனர். உள்ளூர் மக்கள் கூறுகையில், மஸ்கின் நிறுவனம் சில குடியிருப்பாளர்களை கடும் தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி அல்லது தங்கள் வீடுகளை விற்குமாறு அழுத்தம் கொடுத்தது என்றும் கூறியுள்ளனர்.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

டெக்ஸாஸில் ஸ்டார்பேஸ் உருவாக்கும் பனி

டெக்ஸாஸில் ஸ்டார்பேஸ் உருவாக்கும் பனி

இந்த ஆண்டு மார்ச் மாதம், மஸ்க் இந்த திட்டத்தைத் தொடங்குவதற்காக 30 மில்லியன் டாலர்களை பிரவுன்ஸ்வில்லுக்கு வழங்குவதாக அறிவித்தார். மொத்த தொகையில், 20 மில்லியன் டாலர் பள்ளிகளுக்கு வழங்கப்படும், மேலும் 10 மில்லியன் பிரவுன்ஸ்வில்லியின் புத்துயிர் பெறப் பயன்படுத்தப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க, தற்பொழுது டெக்ஸாஸில் ஸ்டார்பேஸ் உருவாக்கும் பனி நடைபெற்று வருவது போல் தெரிகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் ஸ்டார்பேஸில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள்

இன்னும் சில ஆண்டுகளில் ஸ்டார்பேஸில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள்

ஊடகத்திற்குக் கிடைத்த தகவலின் படி இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஸ்டார்பேஸில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் இருப்பார்கள் என்று மஸ்க் முன்பு கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற பணியாளர்களை சில சிறப்பு வேலைகளுக்காகவும் நியமிக்கவும் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற டெக்சாஸில் இருக்கும் இந்த வசதியை மஸ்க் பார்வையிட்டுள்ளார். முன்மொழியப்பட்ட ஸ்டார்பேஸ் என்ற விண்வெளி நகரத்தின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
Elon Musk is Building a Starbase in Texas : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X