மனித உணர்வு.. நடனம்.. சமையல்.. யோகா செய்யும் Optimus Gen 2 ரோபோ.. எலான் மஸ்க் வெளியிட்ட வீடியோ வைரல்..
எலான் மஸ்க் (Elon Musk) இன் தொழில்நுட்ப நிறுவனமா டெஸ்லா (Tesla) அதன் அடுத்த ஹியூமனாய்டு ரோபோவான ஆப்டிமஸ் ஜென் 2 (Optimus Gen 2) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோ சமையல், யோகா மற்றும் நடனமாடும் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
சயின்ஸ் ஃபிக்ஷன் (Science fiction) திரைப்படங்களில் நாம் பார்த்த ரோபோக்கள் (Robots) எல்லாம் மிக விரைவில் மனிதர்களுடன் சேர்த்து நிஜ வாழ்வில் வாழத் துவங்க போகின்றன. ஆம், ரோபோக்களும் (Robot) மனிதர்களும் (Humans) இணைந்து வாழும் சூழல் உருவாக இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளது. இதை நிரூபிக்கும் விதமாக எலான் மஸ்க் புதிய ஹியூமனாய்டு ரோபோவை (Humanoid Robot) அறிமுகம் செய்துள்ளது.

எலான் மஸ்க் இன் டெஸ்லா நிறுவனம் புதிதாக ஆப்டிமஸ் ஜென் 2 (Optimus Gen 2) ஹியூமனாய்டு ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோட் இதற்கு முன்பு கடந்த 2022 செப்டம்பர் மற்றும் மார்ச் 2022 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட பம்பில்பீ (Bumblebee) மற்றும் ஆப்டிமஸ் ஜென் 1 (Optimus Gen 1) மாடலை விட அதிக திறமைகொண்டது என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப்போது டிசம்பர் 2023 இல் டெஸ்லா நிறுவனம் ஆப்டிமஸ் ஜென் 2 ஹியூமனாய்டு ரோபோவை (Optimus Gen 2 Humanoid Robot) அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோட் மனிதன் போன்ற தோற்றத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல், மனிதனை போலவே நடக்கிறது (Walking), உடல் பயிற்சி (Excercise) செய்கிறது, சமையல் (Cooking) செய்கிறது, நடனமாடுகிறது (Dance). எலான் மஸ்க் என்றால் சும்மாவா?
இந்த சிறப்புகளை எல்லாம் தாண்டி, ஒரு படி முன்னே சென்று, இந்த ரோபோவுக்கு உணர்வுகளையும் கொடுத்துள்ளார். ஆம், இந்த ரோபோவின் கை விரல்கள் அனைத்திலும் டாக்டைல் சென்சிங் (Tactile Sensing) தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம், ரோபோ தொடும் பொருட்களின் மீது சரியான அழுத்தத்தை வழங்குகிறது. உதாரணமாக முட்டையை உடையாமல் பக்குவமாக கையில் எடுக்கிறது.

இதற்கு முன் டெஸ்லா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ரோபோட் மாடல்களில் இது தான் வேகமான நடையை கொண்டுள்ளது. இதன் கைகளின் அசைவுகள் மற்றும் இது கீழே விழாமல் இருக்க பக்காவான பேலன்ஸ் போன்ற பல விஷயங்களில் இது மனிதனை போலவே செயல்பட வேண்டும் என்று நிறுவனம் இதை பக்குவமாக உருவாக்கியுள்ளது.
இந்த ஆப்டிமஸ் ஜென் 2 ஹியூமனாய்டு ரோபோவின் வடிவமைப்பிலும் டெஸ்லா குறைவைக்கவில்லை. இது மிகவும் ஹை-டெக்கான தோற்றத்தில் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்டிமஸ் ஜென் 2 ஹியூமனாய்டு ரோபோவால் என்னென்னெ செய்ய முடியும் என்ற ஒரு குட்டி வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தின் வழியாக உலகிற்கு காண்பித்துள்ளார்.
இந்த வீடியோ இப்போது இணையம் முழுக்க வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவின் தொடக்கத்தில் டெஸ்லா நிறுவனத்தின் 2 முந்தைய ஹியூமனாய்டு ரோபோ மாடல்கள் காண்பிக்கப்படுகிறது. பிறகு ஆப்டிமஸ் ஜென் 2 ஹியூமனாய்டு ரோபோ காண்பிக்கப்படுகிறது. இதில் இதன் உடல் மற்றும் வடிவமைப்பு தெளிவாக காண்பிக்கப்படுகிறது. பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி போல ஸ்டைலாக நடந்து வரும் காட்சியும் காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ அதன் பின், அமர்ந்து எந்திரித்து ஸ்குவாட் செய்யும் காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. பிறகு முட்டையை எடுத்து அடுக்குவதும் அதன் உடைத்து சமைப்பதும் காண்பிக்கப்படுகிறது. இறுதியில் சுவாரசியமாக இந்த ஆப்டிமஸ் ஜென் 2 ஹியூமனாய்டு ரோபோக்கள் நடனமாடுவதையும் நிறுவனம் காண்பித்துள்ளது. இந்த ரோபோட்கள் விரைவில் இன்னும் பல மேம்படுத்தல்களை பெரும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








