சும்மா வாய் பேசிட்டு போயிடுவேன்னு நினைச்சீங்களா.. Grok AI சாட்பாட்டை திறந்துவிட்ட Elon Musk.. ஆட்டம் ஆரம்பம்!
சும்மா வாய் பேசிட்டு.. அப்படியே வேற வேலைய பார்த்துட்டு போயிடுவேன்னு நினைச்சீங்களா? என் பெயரு எலான் மஸ்க்.. சொன்னதை செய்யற ஆளு.. என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும்படியான ஒரு வேலையை பார்த்துள்ளார் எக்ஸ், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ்-ன் சொந்தக்காரர் ஆன எலான் மஸ்க்!
சரியாக ஒரு வாரத்திற்கு முன்னர், க்ரோக் ஏஐ (Grok AI) என்கிற தனது ஏஐ சாட்பாட் ஆனது கூடிய விரைவில் ஓப்பன் சோர்ஸ் (Open Source) ஆக மாற்றப்படும் என்று எலான் மஸ்க் (Elon Musk) உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தற்போது க்ரோக் ஏஐ ஆனது ஓப்பன் சோர்ஸ் ஆக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் க்ரோக் ஏஐ சாட்பாட்டின் சோர்ஸ் கோட்-ஐ பொதுமக்களால் மாற்றியமைக்கவும் (Modification), மறுபகிர்வு (Redistribution) செய்யவும் முடியும். அதாவது ஆராய்ச்சியாளர்களால் மற்றும் டெவலப்பர்களால் ஓப்பன் சோர்சிங் க்ரோக் ஏஐ-ல் பணிபுரிய முடியும் மற்றும் க்ரோக்கின் எக்ஸ்ஏஐ திறன்களை (xAI abilities) மேம்படுத்த முடியும்.
இப்படி செய்வதன் மூலம் கூகுள் (Google) நிறுவனத்தின் ஜெமினி ஏஐ (Gemini AI), ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டியிட முடியும். க்ரோக் ஏஐ சாட்பாட்டின் ஓப்பன் ரிலீஸ் (Open release) ஆனது கிட்ஹப் (GitHub) தளத்தில் அணுக கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க்கின் இந்த அதிரடி நடவடிக்கை கூகுள் நிறுவனத்தின் ஜெனெரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன ஜெமினிக்கு பெறும் சிக்கலாக, போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சமீபத்தில் தான் கூகுள் ஜெமினி ஒரு பெரிய சிக்கலில் மாட்டி, விஷயம் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு சென்றது.
"மோடி ஒரு பாசிசவாதியா?" என்று ஜெமினி ஏஐ-யிடம் ஒரு பயனர் கேள்வி கேட்ட போது, பிரதமர் மோடியின் கொள்கைகள் "பாசிசமாக" இருப்பதாக என்று சில வல்லுநர்கள் கருதுவதாக ஜெமினி ஏஐ பதில் அளித்துள்ளது. ஜெமினியின் இந்த "வெளிப்படையான பதில்".. இந்திய அரசாங்கத்தை கூகுள் நிறுவனத்திற்கு எதிராக திருப்பி விட்டது.

ஜெமினியின் இந்த பதில். இந்தியாவில் ஏஐ இயங்குதளங்களின் கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாம் என்பதால், அதில் சிக்கிக்கொள்ள கூடாது என்பதற்காக.. தனது ஏஐ தளமான ஜெமினி, பிரதமர் நரேந்திர மோடியை (PM Narendira Modi) பற்றி தகாத கருத்துக்களை கூறியதற்காக இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று கூகுள் நிறுவனம் சரண்டர் ஆனது!
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜெமினி ஏஐ ஆனது நம்பகத்தன்மையற்றதாக உள்ளது என்பதையும் கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இந்திய அரசாங்கம் கூகுளின் மன்னிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. "நம்பகத்தன்மையற்றது" என்று கூறுவது சரியான பதில் இல்லை என்று அமைச்சர் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.
பயனர்களுக்கு பதில்கள் மற்றும் தீர்வுகளையும் வழங்கும் போது ஏஐ இயங்குதளங்கள் சோதனை கட்டங்களில் செயல்படக்கூடாது. குறிப்பாக பயனர்களுக்கு தவறான அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களை வழங்கும் அபாயம் இருந்தால் நிச்சயம் அவைகள் சோதனை கட்டங்களில் செயல்படக்கூடாது என்றும் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தி உள்ளார்.
முறையான பாதுகாப்புகள் இல்லாமல் இந்தியாவை ஒரு சோதனைக் களமாக ஏஐ இயங்குதளங்கள் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது என்றும் அமைச்சர் சந்திரசேகர் கூறியுள்ளார். இதுபோன்ற விஷயங்களில் எலான் மஸ்க்கின் க்ரோக் ஏஐ சிக்காதா? என்று கேட்டால்.. அதற்கு எந்த வாக்குறுதியும் அளிக்க முடியாது. க்ரோக் ஏஐ-யின் பேஸ் மாடலானது நிறைய தரவுகளில் பயிற்சியளிக்கப்பட்டு இருந்தாலும் கூட, குறிப்பிட்ட பணிகளில் சிறப்பாக செய்யப்படவில்லை. இந்த மாடல் 314-பில்லியன்-பிராமீட்டர் மிக்ஸ்ச்சர்-ஆஃப்-எக்ஸ்பர்ட்ஸ் மாடல் என்று அழைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








