சுந்தர் பிச்சை ஹேப்பி.. Elon Musk கையில் வசமாக சிக்கிய ChatGPT.. OpenAI-யின் பணத்தாசைக்கு வேட்டு!
தம்பி நான் திண்ணைய பிடித்து நடந்த போது, நீ என்னைய பிடித்து நடந்தவன் என்று கேட்கும்படியாக எலான் மஸ்க் (Elon Musk) அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்திற்கும், அந்நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-க்கும் (ChatGPT) ஒருசேர ஆப்பு வைக்கும் வேலை ஒன்றை செய்துள்ளார்.
கலிபோர்னியாவில் உள்ள வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் "புதிய திட்டத்திற்கு" எதிராக கலிபோர்னியாவில் உள்ள வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார். சமீபத்தில் ஓப்பன்ஏஐ நிறுவனமானது முழு அளவில் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறுப்போவதாக தகவல் வெளியானது.

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தை தடுக்கும் நோக்கத்தின் கீழும் மற்றும் பல போட்டி-எதிர்ப்பு நடைமுறைகளை குற்றம் சாட்டும் நோக்கத்தின் கீழும் எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன், தலைவர் கிரெக் ப்ரோக்மேன், மைக்ரோசாப்ட் மற்றும் பல குழு உறுப்பினர்களை இலக்காக கொண்டுள்ளது. மேலும் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் கட்டமைப்பு மாற்றம் மற்றும் வணிக செயல்பாடுகளை இடைநிறுத்தும்படி கோருகிறது.
மேலும் இலாப நோக்கற்றதாகவும், அனைவரும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டிய ஏஐ ஆராய்ச்சிக்கு எதிராக ஓப்பன் ஏஐ நிறுவனமானது செயல்படுகிறது என்றும் எலான் மஸ்க்கின் சட்டக் குழு வாதிடுகிறது. இதுதவிர்த்து ஓப்பன்ஐ நிறுவனத்தின் போட்டியாளர்களுக்கு (குறிப்பாக மஸ்க்கின் சொந்த ஏஐ நிறுவனமான எக்ஸ் ஏஐ-க்கு நிதியளிப்பதில் இருந்து முதலீட்டாளர்களை கெடுப்பது மற்றும் மைக்ரோசாப்ட் உடன் தனியுரிம தகவலை தவறாக பகிர்வது போன்ற குற்றச்சாட்டுகளையும் எலான் மஸ்க் முன்வைத்துள்ளார்.
ஓப்பன்ஏஐ நிறுவனத்திற்கு போட்டியளிக்கும் ஏஐ நிறுவனங்களை ஆதரிக்க மாட்டோம் என்று முதலீட்டாளர்களிடமிருந்து வாக்குறுதிகளை பெற்று உள்ளதாகவும் ஓப்பன் ஏஐ நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஓப்பன்ஏஐ-க்கு எதிரான வழக்கில், எலான் மஸ்க்கின் வழக்கறிஞர்கள், இந்நிறுவனம் நம்பிக்கையற்ற விதிமுறைகளை (Antitrust regulations) மீறுவதாக வாதிடுகின்றனர்.
எலான் மஸ்க் தொடுத்துள்ள இந்த வழக்கு, ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி ஆப்பை கட்டண முறைக்கு (ChatGPT App Payment Mode) மாற்றுவதை தடுப்பது மட்டுமின்றி, சாம் ஆல்ட்மேனின் நிதி நலன்களை சுட்டிக்காட்டி, ஓப்பன்ஏஐ மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு இடையேயான உறவை கேள்விக்குள்ளாக்குகிறது.
இதெல்லாம் எலான் மஸ்க்கின் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் சொந்த ஏஐ சாட்பாட் ஆன க்ரோக் ஏஐ-க்கு நன்மைகளாக முடியும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சில மாதங்களுக்கு முன்னர் க்ரோக் ஏஐ-யின் இரண்டாவது வெர்ஷன் (Grok 2 AI) பயிற்சியில் இருப்பதாகவும், அது பொது வெளிக்கு வரும்போது அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.
முன்னதாக இவர் தனது ஏஐ நிறுவனத்தின் க்ரோக் ஏஐ-யின் 1.5 வெர்ஷனை (Grok AI 1.5 Version) ஓப்பன் சோர்ஸ் (Open Source) ஆக மாற்றினார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில், க்ரோக் 2 வெர்ஷன் ஆனது ஒவ்வொரு மெட்ரிக்கிலும் ஏற்கனவே உள்ள ஏஐ-ஐ விட சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் பயிற்சியில் உள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.
எலான் மஸ்க் தனது க்ரோக் ஏஐ சாட்பாட்டை ஓப்பன் சோர்ஸ் ஆக்கியதன் மூலம், இந்த சாட்பாட்டின் சோர்ஸ் கோட்-ஐ பொதுமக்களால் மாற்றியமைக்கவும் (Modification), மறுபகிர்வு (Redistribution) செய்யவும் முடியும். அதாவது ஆராய்ச்சியாளர்களால் மற்றும் டெவலப்பர்களால் ஓப்பன் சோர்சிங் க்ரோக் ஏஐ-ல் பணிபுரிய முடியும் மற்றும் க்ரோக்கின் எக்ஸ்ஏஐ திறன்களை (xAI Abilities) மேம்படுத்த முடியும்.
ஒட்டுமொத்தமாக, ஓப்பன் ஏஐ-யின் சாட்ஜிபிடியையும், கூகுளின் ஜெமினியையும் காலி செய்ய தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் எலான் மஸ்க் செய்து வருகிறார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க.. சாட்ஜிபிடி-4 (ChatGPT-4) மாடலை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த ஓரியன் ஏஐ (Orion AI) மாடலின் அறிமுகம் (2024 டிசம்பரில்), கூகுள் குரோம் ப்ரவுஸருக்கு (Google Chrome Browser) போட்டியாக தனது சொந்த இண்டர்நெட் ப்ரவுஸரை (Developing own Web Browser) உருவாக்குவது என ஓப்பன் ஏஐ நிறுவனமும் சளைக்காமல் வேலை செய்துவருகிறது.


Click it and Unblock the Notifications








