பாரம்பரிய கல்விமுறை ஏன் பயனற்றது! விளக்குகிறார் எலன் மஸ்க்..!

2017ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் மஸ்க் கூறியதாவது "மக்கள் தேவையே இல்லாத நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வதாக நான் நினைக்கிறேன்.

|

புதுமைபடைப்பாளியும், தொழில் முனைவோரான எலன் மஸ்க் பாரம்பரிய பள்ளி கல்விமுறையில் ஆர்வம் இல்லாதவர். இவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாகவும், டெல்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சி.ஈ.ஓ மற்றும் ப்ராடெக்ட் ஆர்கிடெக்டாகவும், சோலார்சிட்டியின் சேர்மேனாகவும் உள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரான இவர், பேஃபால் நிறுவன இணைநிறுவனர் ஆவார்.

பாரம்பரிய கல்விமுறை ஏன் பயனற்றது! விளக்குகிறார் எலன் மஸ்க்..!

2017ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் மஸ்க் கூறியதாவது "மக்கள் தேவையே இல்லாத நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வதாக நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் எதிர்காலத்தில் அவற்றை எப்போதும் பயன்படுத்துவதில்லை. எனவே பள்ளியில் இருக்கும் குழந்தைகள் தாங்கள் ஏன் இங்கு இருக்கிறோம் என குழப்பத்தில் உள்ளனர்" என தெரிவித்தார்.

கொடுமைபடுத்துதல்

கொடுமைபடுத்துதல்

முன்னதாக மஸ்க் தனது பள்ளி அனுபவத்தைப் பற்றி கூறுகையில்," கொடுமைபடுத்துதல், மதிப்பு மற்றும் சுவாரசியம் இல்லாத பாடங்கள் இரண்டும் சேர்ந்து பள்ளியில் தனது சொந்த அனுபவம் கொடூரமானதாக இருந்தது" என்கிறார்.

 முன்னுரிமை அளிப்பதில்லை

முன்னுரிமை அளிப்பதில்லை

மஸ்க் தனது ஊழியர்கள் கல்லூரி பட்டம் பெற்றுள்ளனரா என்பதை எப்போதும் பொருட்படுத்துவதில்லை. 2018ல் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எலன், விண்ணப்பதாரரின் முறையான கல்விக்கு தான் முன்னுரிமை அளிப்பதில்லை என கூறினார்.

உயர்நிலைப் பள்ளி

உயர்நிலைப் பள்ளி

"உண்மையில் கல்லூரி பட்டம் அல்லது உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் கூட தேவையில்லை. ஒரு நல்ல பல்கலைக்கழகத்தில் யாராவது பட்டம் பெற்றார்கள் எனில் அவர்களால் சிறப்பான விஷயங்களை மேற்கொள்ள முடியும் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். ஆனால் அது அவ்வாறுக இருக்கவேண்டயி அவசியம் இல்லை "என்கிறார் மஸ்க்.

 சுவாரஸ்யமான ட்விட்டர் கருத்து

சுவாரஸ்யமான ட்விட்டர் கருத்து

இந்த தலைப்பில் ஒரு சில சுவாரஸ்யமான ட்விட்டர் கருத்து பரிமாற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார் மஸ்க். "நீங்கள் ஒரு பட்டம் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. நீங்கள் ஹார்வர்ட் செல்ல விரும்பினால் உங்களுக்கு பள்ளிபடிப்பு தேவை" என்ற டிவீட்டிற்கு கடந்த ஆண்டு பதிலளித்த மஸ்க் "அது உண்மை இல்லை. கல்வியை பள்ளிப்படிப்புடன் சேர்த்து குழப்பிக்கொள்ளாதீர். நான் ஹார்வர்ட்க்கு போகவில்லை.ஆனால் அங்கு படிப்பவர்கள் எனக்கு கீழே வேலை செய்கிறார்கள் " என பதிலளித்தார்.

குழந்தைகளுக்கு என்ன உபதேசிக்கிறார்

குழந்தைகளுக்கு என்ன உபதேசிக்கிறார்

மஸ்க் தனது சொந்த குழந்தைகளுக்கு என்ன உபதேசிக்கிறார் என்பதைப் பற்றிக் கூறுகிறார். 2014 நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், மஸ்க் தனது குழந்தைகளுக்கு பள்ளியை தொடங்கியதாகவும், எனவே அவர்கள் கற்றலில் தங்கள் சொந்த பாதையை பின்பற்றுவார்கள் என கூறினார்.

ஆங்கிலம் அல்லது மொழி பாடங்களை விரும்புகிறார்கள்

ஆங்கிலம் அல்லது மொழி பாடங்களை விரும்புகிறார்கள்

"கண்டிப்பாக செய்ய வேண்டும் என நான் நினைக்கும் விஷயங்களை சாதாரண பள்ளிகள் செய்வதில்லை. சிலர் ஆங்கிலம் அல்லது மொழி பாடங்களை விரும்புகிறார்கள். சிலர் கணிதத்தை விரும்புகிறார்கள். சிலர் இசையை விரும்புகிறார்கள். வெவ்வேறு நேரங்களில் பல்வேறு திறமைகள். சிந்தனை மற்றும் அவர்களின் திறன்களை பொருத்துவதற்கு கல்வி மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது." என அந்த கலந்துரையாடலில் அவர் தெரிவித்தார்.

 பாரம்பரிய கற்பித்தல் முறையில்

பாரம்பரிய கற்பித்தல் முறையில்

குழந்தைகள் கேள்விகளுக்கு பதிலளிப்பது மற்றும் மனப்பாடம் செய்வது போன்றவற்றை விட நிகழ்நேர அனுபவம் எவ்வளவு முக்கியமானது என்பதை அவர் விளக்குகிறார்.


"கருவிகளை கற்பிப்பதை காட்டிலும், சிக்கல் தீர்க்கும் திறன் ஈல்லது சிக்கலை கற்பித்தல் முக்கியம். இன்ஜின் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி கற்பிக்க முயற்சிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். பாரம்பரிய கற்பித்தல் முறையில் ஸ்க்ரூடிரைவர் மற்றும் விரின்செஸ் பற்றி எல்லாம் கற்பிக்க வேண்டும். ஆனால் இது மிகவும் கடினமான வழி "என்கிறார் மஸ்க்.

உலகின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளர்கள்

உலகின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளர்கள்

பின்னர் எப்படி நிகழ்கால வாழக்கைக்கு ஏற்ப இன்ஜின் வேலை செய்யும் விதத்தைப் பற்றி கற்பிப்பது என்பதை பற்றி கூறும் எலன் "நமக்கு எதற்காக ஸ்க்ரூடிரைவர் வேண்டும், அது எதற்காக வேண்டும் என கற்பிக்க வேண்டும். அதன்பின்னரே ஒரு மிக முக்கியமான விஷயம் நடக்கும். அக்கருவிகள் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என வெளிப்படையாக தெரியும்" என்கிறார்.

உலகின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர், அரசாங்கத்தின் கைகளில் தனது குழந்தைகளின் மூளையை ஒப்படைப்பதை நம்பவில்லை என்றால், நீங்கள் தற்போது பொது பள்ளியில் உங்கள் குழந்தைகளை படிக்க வைத்துக்கொண்டிருந்தால், உங்கள் விருப்பங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Elon Musk Explains Why Traditional Schooling Is Useless: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X