கொடூரமான கடந்த காலத்தின் விளைவு! எலான் மஸ்க்கின் 'Demon Mode' பக்கம்! டா வின்சி வரலாற்று ஆசிரியர் விளக்கம்!
உலகிலேயே மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின், சொத்து மதிப்பு 170 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இவரைப் போலவே விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில், பல பணக்காரர்கள் இருந்தாலும், பரம்பரை சொத்து என்பதே இல்லாமல், வெறும் 30 ஆண்டுகளில் இவர் அடைந்த உச்சத்தை யாரும் அடைந்திருக்க மாட்டார்கள்.
செயற்கைக்கோள்கள் மூலம் இன்டர்நெட் வசதி வழங்குவது முதல் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிடுவது வரையில், இப்போது, பெரிதும் பேசப்படும் எதிர்கால திட்டங்களை, எலான் மஸ்க் தனது ஆரம்ப காலத்திலேயே தொடங்கிவிட்டார். அவ்வளவு ஏன்? இப்போது, உலகையே கட்டிப்போட்டு வரும் செயற்கை நுண்ணறிவை, சிப் மூலம் மனித மூளையில் பொருத்தும் ஆராய்ச்சியை எலான் மஸ்க் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டார் என்றால், அவரது தொலைநோக்கு பார்வை நம்மை வியக்கத்தான் வைக்கும்.

இவ்வளவு அறிவாற்றலை கொண்டிருக்கும் எலான் மஸ்க்குக்கு, கோபமும், தைரியமும் அதைவிட அதிகம் என்பதே உண்மை. அவரது, சில ட்வீட்களை நீக்கிய ட்விட்டர் (Twitter) நிறுவனத்தையே பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதற்கு அவரது கோபம் மட்டுமே காரணம். அதுமட்டுமல்லாமல், மிகப்பெரும் பணக்காரர்களை கூட சாதாரணமாக கிண்டல் செய்துவருகிறார்.
அப்படி மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் முதல் மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜூக்கர்பெர்க் வரையில் வம்பு இழுத்துள்ளார். இதில் மார்க் ஜூக்கர்பெர்க் விவகாரம், இப்போது, கைகலப்பு வரையில் போகும்போலிக்கிறது. இவ்வளவு பெரிய ஆளுமை, கட்டுக்கடங்காத கோபம், பயம் அறியாத துணிவை எலான் மஸ்க் கொண்டிருக்க காரணம் அவரது, கொடூரமான குழந்தை பருவம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், அவரது குழந்தை பருவம் மிகவும் மோசமானதாவே இருந்திருக்கிறது. சிறுவயதில் ஆசைப்பட்டது எதுவுமே கிடைக்காமல், லோயர் கிளாஸ் வாழ்க்கையில் இருந்து, மெல்ல மெல்ல அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு உயர்ந்து, அதன்பின் அப்பாவின் தொழில் முடங்கியதால் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை பெற்றது வரையில், ஒரு சாதாரண மனிதனின் கசப்பான நாட்களை அவரது வாழ்க்கையிலும் பார்க்க முடிகிறது.
இப்படி பல துயர சம்பவங்களை கண்ட அவருக்கு, வெற்றி மட்டுமே நிம்மதியை தந்திருக்கிறது. இந்த வெற்றிக்காக அவருக்கு உதவியது டீமன் மோட் (Demon Mode) பக்கமே. ஆம், எலான் மஸ்க், அடிக்கடி தொழில்சார்ந்த முடிவுகளில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் கடுமையாக நடந்து கொள்வார். அவரது நிறுவனங்களில் பணிபுரியும் முக்கிய நிர்வாகிகளையே மதிக்காமல் கோபத்தை வெளிப்படுத்துவார்.
அப்போது, அவர் மீது பயம் வருவது ஒருபக்கம் இருந்தாலும், அவருக்கு உளவில் ரீதியாக ஏதோ பிரச்சனை இருப்பது போல தோன்றும் அளவுக்கு அவரது நடவடிக்கைகள் இருக்கும். ஆனால், அது பின்னாளில், அவருக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்று தரும் என்பதே இங்கு ஆச்சர்யம். இந்த டீமன் மோட் காரணமாகவே, அவரது முன்னாள் மனைவியும் பாடகருமான கிரிம்ஸ் (Grimes) அவரை விட்டு பிரிந்தார்.
சொல்லப்போனால், அவரின் கடுமையாக நடந்துகொள்ளும் செயலுக்கு டீமன் மோட் என்று பெயர் வைத்ததே கிரிம்ஸ் தான். இந்த டீமன் மோட் குறித்து, எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதும், வரலாற்றாசிரியர் வால்டர் ஐசக்சன் (Biographer Walter Isaacson) சமீபத்தில் நடந்த ட்விட்டர் ஸ்பேஸ் நேர்காணலில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், "எலான் மஸ்க்கின் டீமன் மோட் பக்கத்தை நானும் பார்த்தேன்.
சில நேரங்களில், துளியும் கருணையே இல்லாத கடுமையான முடிவுகளை எடுப்பதிலும், மற்றவர்களிடம் கோபமாக நடந்துகொள்வதிலும் அவரது குழந்தை பருவ காலம் பிரதிபலிக்கும். அந்த நேரத்தில் அவரை யாராலும் எதிர்கொள்ள முடியாது. அப்போது, அது அர்த்தமற்றதாக தோன்றினாலும், அவரது வெற்றிக்கு பலமுறை டீமன் மோட் பக்கம் பக்க பலமாக இருந்திருக்கிறது என்பதை நினைத்தால் விசித்திரமாக இருக்கிறது.
ஆனால், அந்த டீமன் மோட் உடல்ரீதியாக யாரையும் காயப்படுத்தாது. இதுபோன்ற குணாதிசயங்களை நான் பார்த்தில்லை. இது அவரது கொடூரமான கடந்த காலத்தின் விளைவாக இருக்காலம்" என்று விவரித்துள்ளார். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








