வெடித்து சிதறிய SpaceX ராக்கெட்; சுக்குநூறான எலான் மஸ்க்கின் கனவு திட்டம்!

|

செவ்வாய் கிரகத்தை, எலான் மஸ்க்கை விட அதிகமாக யாரும் நேசித்திட முடியாது என்றே கூறலாம்.

ஏனெனில் உயிரினங்கள் வாழ தகுதியற்ற ஒரு கிரகத்திற்கு மனிதர்களை கொண்டு செல்லும் கனவை நிஜமாக்க ஒரு மனிதன் எதையும் இழக்க தயாரக இருக்கிறான் என்றால் - வெறுமனே வேடிக்கை பார்க்கும், "இதெல்லாம் நடக்குற கதையா?" என்று கருத்து சொல்லும் கூட்டத்தை விட - எலான் மஸ்க் கொஞ்சம 'ஒசத்தி' தான்.

ஆனால் விதி யாரை விட்டது?

ஆனால் விதி யாரை விட்டது?

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை ஒரே வரியில் சொல்லி விடலாம் - 10 அடி பின்நோக்கி சரியும் பின் 10000 அடி முன்னோக்கி பாயும்!

இப்படி கடந்த பல மாதங்களாக முன்னோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் மிகவும் மோசமான சரிவு ஒன்றை சந்தித்தது; அதுவும் எலான் மஸ்க்கின் கனவு திட்டத்தில்!

வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் பூஸ்டர் ராக்கெட்!

வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் பூஸ்டர் ராக்கெட்!

"அடுத்த தலைமுறை" ஸ்டார்ஷிப் விண்கலத்திற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய பூஸ்டர் ராக்கெட் ஆனது கடந்த திங்களன்று (ஜூலை 11, 2022) டெக்சாஸில் நடந்த ஒரு கிரவுண்ட்-டெஸ்ட்டின் போது தீப்பிடித்து எரிந்து பின், வெடித்து சிதறியது.

இந்த விபத்தானது, இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஸ்டார்ஷிப்பைச் செலுத்தும் எலான் மஸ்க்கின் கனவு திட்டத்திற்கு பெறும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

78 கிலோ குப்பையை விண்வெளியில் இருந்து தூக்கி போட்ட நாசா; இதோ வீடியோ!78 கிலோ குப்பையை விண்வெளியில் இருந்து தூக்கி போட்ட நாசா; இதோ வீடியோ!

லைவ்ஸ்ட்ரீமிங்கின் போது வெடித்த ராக்கெட்!

லைவ்ஸ்ட்ரீமிங்கின் போது வெடித்த ராக்கெட்!

சூப்பர் ஹெவி பூஸ்டர் 7 ப்ரோட்டோடைப் (Super Heavy Booster 7 prototype) என்று அழைக்கப்படும் இந்த பூஸ்டர் ராக்கெட்டின் கிரவுண்ட்-டெஸ்ட் ஆனது நாசா ஸ்பேஸ் ஃப்ளைட் இணையதளம் வழியாக லைவ்ஸ்ட்ரீமும் செய்யப்பட்டது.

ஆனால் சோதனையின் போது யாருமே எதிர்பார்க்காதபடி, அது வெடித்து சிதறியது .இதுகுறித்து ட்வீட் செய்த எலான் மஸ்க், "ஆமாம், உண்மையில் இது நல்லது அல்ல. குழு சேதத்தை மதிப்பிடுகிறது" என்றும், "காயங்கள் ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெடிப்பிற்கு என்ன காரணம்?

இந்த வெடிப்பிற்கு என்ன காரணம்?

ஸ்பேஸ்எக்ஸ் பூஸ்டர் ராக்கெட்டின் வெடிப்புக்கு என்ன காரணம் என்று தெளிவாக தெரியவில்லை. ஏனெனில், இந்த சோதனை லைவ்ஸ்ட்ரீம் செய்யப்பட்ட போதிலும் கூட, வெடிப்பின் போது ராக்கெட்டின் அடிப்பகுதியானது தீப்பிழம்புகள் மற்றும் கடுமையான புகையில் மூழ்கி விட்டது. அதனால் "மேலோட்டமான காரணம்" என்ன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை!

அடக்கொடுமையே! அப்போ இவ்ளோ வருஷம் அடக்கொடுமையே! அப்போ இவ்ளோ வருஷம் "இதை" வச்சிக்கிட்டு தான் செவ்வாய் கிரகத்தில் தண்ணீ தேடுனீங்களா?

ஸ்டார்ஷிப்: பகல் கனவு காண்கிறாரா எலான் மஸ்க்?

ஸ்டார்ஷிப்: பகல் கனவு காண்கிறாரா எலான் மஸ்க்?

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை கொண்டு சென்று, அவர்களை அங்கே குடியேற்ற வேண்டும் என்கிற "கனவின்" கீழ் உருவாகும், ஒரு வருங்கால விண்வெளி திட்டம் தான் - ஸ்டார்ஷிப்!

கேட்கும் போதே தலைசுற்ற வைக்கும் இந்த திட்டம் "நல்ல வகையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது" என்பதே நிதர்சனம்.இது ​​மனிதர்களுக்கான விண்வெளிப் பயணத்தை மிகவும் மலிவானதாக மாற்றும் அதே சமயம் மிகவும் வழக்கமானதாவும் மாற்றும் என்று எலான் மஸ்க் நம்புகிறார்.

இந்த 394 அடி ஸ்டார்ஷிப்பிற்கு ஏற்கனவே பல அடிகள் விழுந்துள்ளது!

இந்த 394 அடி ஸ்டார்ஷிப்பிற்கு ஏற்கனவே பல அடிகள் விழுந்துள்ளது!

இதற்காக உருவாகும் ஸ்பேஸ்எக்ஸின் "முழுமையான" ஸ்டார்ஷிப் ஆனது, அதன் சூப்பர் ஹெவி பர்ஸ்ட்-ஸ்டேஜ் பூஸ்டருடன் இணைக்கப்படும் போது சுமார் 394 அடி (120 மீட்டர்) உயரம் வரை செல்லுமாம்!

பல தோல்விகள் மற்றும் வெடிப்புகளுக்கு பிறகே, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தானொரு ஸ்டார்ஷிப் ப்ரோட்டோடைப்பை வெற்றிகரமாக சோதனை செய்து, பத்திரமாக தரை இறக்கியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

யாருமே சொல்லித்தர மாட்டாங்க.. Truecaller-இல் யாருமே சொல்லித்தர மாட்டாங்க.. Truecaller-இல் "இதை" மறைக்க முடியும்னு!

இதற்கு முன் 4 வெடிப்புகள் நடந்துள்ளது!

இதற்கு முன் 4 வெடிப்புகள் நடந்துள்ளது!

நினைவூட்டும் வண்ணம் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும், ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்பின் நான்கு ப்ரோட்டோடைப்களை அதிக உயரத்தில் பறக்க வைக்கும் சோதனை நடந்தது. ஆனால் அனைத்துமே தோல்வியில் முடிந்தன; தரையிறங்கும் போது வெடித்து சிதறின.

ஒருவழியாக இந்த சோதனை மே 2021 இல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதன் பின்னரே ஸ்டார்ஷிப் திட்டம் குறித்து எலான் மஸ்க் மிகவும் நம்பிக்கையாக இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் ஒரு ராக்கெட் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் இதுவும் "ஒரு 10 அடி பின்னோக்கிய சரிவு" என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் "10000 அடி பாய்ச்சல்" மிக தொலைவில் இல்லை என்பதிலும் சந்தேகம் வேண்டாம்!

Best Mobiles in India

English summary
Elon Musk Dream Project Starship Setback After SpaceX Booster Rocket Blast

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X