Elon Musk அப்பவே அப்படி: 12 வயதில் என்ன வேலை செஞ்சிருக்காரு பாருங்க!

|

Elon Musk ட்விட்டரை வாங்கிய நாள்முதல் அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீப காலமாக எந்த பக்கம் திரும்பினாலும் மஸ்க் ட்விட்டர் என்பது தான் பேசு பொருளாக இருக்கிறது. SpaceX, Tesla, Boring Company, Neuralink உள்ளிட்ட பல நிறுவனங்களின் உரிமையாளராக எலான் மஸ்க் இருக்கிறார். மஸ்க் சேட்டைக்காரர், எதையும் யோசிக்காமல் நடவடிக்கை எடுக்கிறார் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், இத்தனை நிறுவனங்களின் உரிமையாளர் என்ற பட்டம் அவ்வளவு எளிதாக மஸ்க்கிற்கு கிடைக்கவில்லை.

12 வயதில் பிளாஸ்டர் வீடியோ கேம்

12 வயதில் பிளாஸ்டர் வீடியோ கேம்

எலான் மஸ்க் சிறுவயது முதலே புத்திசாலியாக இருந்திருக்கிறார். 12 வயதில் ஒரு வீடியோகேம் உருவாக்கி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் மஸ்க் 12 வயதில் பிளாஸ்டர் என்ற வீடியோ கேமை உருவாக்கி இருக்கிறார். இது வீரர்கள் ஐந்து கப்பல்கள் மூலம் எதிரிகளை வீழ்த்தும் விளையாட்டு ஆகும்.

12 வயதில் சம்பாதித்த மஸ்க்

12 வயதில் சம்பாதித்த மஸ்க்

எலோன் மஸ்க்கின் முதல் வீடியோ கேம் 1983 இல் அவருக்கு 12 வயது இருக்கும் போதே உருவாக்கி இருக்கிறார். இந்த கேமிங் குறியீடு ஆனது 1984 இல் பிசி மற்றும் ஆப்ஸ் டெக்னாலஜி என்ற தொழில்துறை வர்த்தக இதழில் வெளியிடப்பட்டது. அப்போது மஸ்க்கிற்கு $500 செலுத்தப்பட்டுள்ளது. அதாவது அவர் 12 வயதிலேயே $500 சம்பாதித்து இருக்கிறார்.

எலோன் மஸ்க்கின் பிளாஸ்டார் வீடியோ கேம் விளையாடுவது எப்படி?

எலோன் மஸ்க்கின் பிளாஸ்டார் வீடியோ கேம் விளையாடுவது எப்படி?

எலோன் மஸ்க்கின் பிளாஸ்டார் வீடியோ கேம் விளையாடுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

ஸ்டெப் 1: உங்கள் கணினியில் இணைய உலாவியை ஓபன் செய்து Blastar-1984 என்ற விளையாட்டைத் தேடவும். இந்த இணைப்பை கிளிக் செய்து விளையாட்டை ஓபன் செய்யலாம். பிளாஸ்டர் கேம்.

ஸ்டெப் 2: இதை கிளிக் செய்தால் HTML வடிவமைப்பு ஓபன் ஆகும். இங்கு உங்களுக்கு வழிமுறை தேவை என்றால் ஆம் என்பதற்கு Y என்றும் இல்லை என்பதற்கு N என்றும் கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 3: உங்கள் விண்கலம் கீழே வைக்கப்பட்டுள்ள நிலையில் விளையாட்டு தொடங்கும். ஒரு கேமிற்கு மொத்தம் ஐந்து லைஃப்கள் வழங்கப்படும்.

வெற்றிகரமான தோல்வி

வெற்றிகரமான தோல்வி

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார். தோல்வி அடையும் போது இவர் உச்சரிக்கும் வார்த்தை, இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான்.

வெடித்து சிதறிய விண்கலம்

வெடித்து சிதறிய விண்கலம்

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். ஆரம்பத்தில் இதற்கான முன்மாதிரி விண்கலம் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது விண்கலம் வெடித்து சிதறியது.

கூல் பதில்

கூல் பதில்

இந்த நிகழ்வு பல்வேறு விவாதங்களுக்கு உட்பட தொடங்கிய நிலையில் எலான் மக்ஸ் கூலாக இது வெற்றிகரமான தோல்வி, தோல்வி அடைய கூடாது என்பதற்கான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என கூறினார்.

எலான் மஸ்க் வெற்றி

எலான் மஸ்க் வெற்றி

டெஸ்லாவின் முதல் மின்சார கார் ரூ.72 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்போர்ட்ஸ் காராக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் சந்தையில் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஆனால் இந்த உலகம் நல்ல மின்சார காரை வரவேற்க காத்திருக்கிறது என்ற நம்பிக்கை எலான் மஸ்க்கிடம் இருந்தது. தொடர்ந்து மாடல் எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தி எலான் மஸ்க் வெற்றி அடைந்தார்.

உலகப்பணக்காரர்கள் பட்டியல்

உலகப்பணக்காரர்கள் பட்டியல்

ஒவ்வொரு தோல்வியிலும் தானும் துவண்டுவிடாமல் தனது ஊழியர்களை துவண்டுபோக விடாமல் ஊக்க வார்த்தைகளை அளித்து எலான் மஸ்க் தனது நிறுவனத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்று, உலகப்பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.

Best Mobiles in India

English summary
Elon Musk created a video game alone at the age of 12: Musk started making money from childhood

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X