ரொம்ப கஷ்டம்., அடம்பிடிக்கும் எலான் மஸ்க்: "சந்தேகமா இருக்கு., இதை கொடுக்கலனா எனக்கு டுவிட்டரே வேண்டாம்"
போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் குறித்த தரவுகளை வழங்கவில்லை என்றால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் நிரந்தரமாக நிறுத்தக்கூடும் என மஸ்க் தரப்பு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளை வழங்க மறுத்ததன் மூலம் டுவிட்டர் தனது ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் இந்த மீறல் என்பது டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க வழிவகுக்கும் எனவும் மஸ்க் தரப்பு வழக்கறிஞர்கள் குழு டுவிட்டர் நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உறுதி செய்யப்பட்ட டுவிட்டர் ஒப்பந்தம்
டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்குவது உறுதி செய்யப்பட்டது. போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் குறித்த முறையான ஆவணங்களை டுவிட்டர் நிறுவனம் சமர்பிக்கவில்லை என குறிப்பிட்ட மஸ்க் இதுகுறித்த தரவுகள் சமர்பிக்கும் வரை இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படாது என தெரிவித்தார். தரவுகளை வழங்க மறுத்ததன் மூலம் டுவிட்டர் தனது ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் இந்த மீறல் என்பது டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க வழிவகுக்கும் எனவும் மஸ்க் தரப்பு வழக்கறிஞர்கள் குழு டுவிட்டர் நிறுவனத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் தரப்பு வழக்கறிஞர்கள் குழு கடிதம்
டுவிட்டர் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் தரப்பு வழக்கறிஞர்கள் குழு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி நடந்து கொள்வதற்கு டுவிட்டர் மறுப்பு தெரிவிப்பதாக எலான் மஸ்க் கருதுகிறார் எனவும் மஸ்க் கேட்கும் தகவலை முறையாக டுவிட்டர் நிறுவனம் சமர்பிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க் கேட்கும் தகவல்களை டுவிட்டர் வழங்கப்படாத பட்சத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை மஸ்க் நிறுத்திவைக்கக்கூடும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் குறித்த ஆவணம்
டுவிட்டர் தளத்தில் உள்ள போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் குறித்து முறையாக அறிவிக்கும் வரை டுவிட்டர் தளத்தை வாங்கப் போவதில்லை என எலான் மஸ்க் முன்னதாகவே தெரிவித்திருந்தார். டுவிட்டரில் 5 சதவீதம் மட்டுமே ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் இருக்கிறது என டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்திருக்கும் நிலையில் அதற்கான முறையான ஆவணங்களை கேட்டு மஸ்க் வலியுறுத்தி வருகிறார். டுவிட்டரில் மஸ்க்கை பின்தொடர்பவர்களில் பாதி பேர் போலியானவர்கள் என சமீபத்திய தகவல்கள் தெரிவித்தது. டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை இதுவரை தான் பார்க்கவில்லை என மஸ்க் குறிப்பிட்டார். அதேபோல் டுவிட்டரில் 20 முதல் 25% வரையிலான ஆட்டோமேட்டட் கணக்குகள் இருக்கலாம் என கணக்கிப்படுவதாகவும் மஸ்க் குறிப்பிட்டார்.

டுவிட்டரின் பங்கு சரிவு
டுவிட்டரை மஸ்க் வாங்குவது உறுதி செய்யப்பட்ட உடன் டுவிட்டரின் பங்கு சரிவை சந்தித்தது. இதையடுத்து டுவிட்டரை வாங்குவதாக மஸ்க் அறிவித்தபோது இருந்த பங்கு மதிப்பு தற்போது இல்லை. எனவே மஸ்க் டுவிட்டரை குறைந்த விலையில் வாங்க முயற்சிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. ஸ்பேம் கணக்குகளை பொது மற்றும் தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்தி வெளிப்படியாக உருவாக்க முடியாது எனவும் எந்த கணக்குகள் எம்டிஏயூஎஸ் ஆக கணக்கெடுக்கப்படும் என்பதை அறிவது சாத்தியமற்ற செயல் எனவும் டுவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் பதிலளித்தார்.

ஆதாரங்களை கேட்டு மஸ்க் வலியுறுத்தல்
எலான் மஸ்க் டுவிட்டரில் மிக பிரபலமானவர். எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவது உறுதி செய்யப்படுவதற்கு முன்பே டுவிட்டரின் 9.2% பங்குகளை மஸ்க் தன் கைவசம் வைத்திருந்தார். தொடர்ந்து 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை மஸ்க் வாங்குவது என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டுவிட்டரின் ஆதார ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன. இதில், டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து டுவிட்டரில் 5% மற்றும் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் இருக்கிறது என்ற ஆதாரங்களை கேட்டு மஸ்க் வலியுறுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications