Just In
- 8 hrs ago
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- 9 hrs ago
அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?
- 9 hrs ago
தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!
- 10 hrs ago
ஓஹோ! இப்படி செஞ்சா 12 மாதத்திற்கு YouTube Premium இலவசமா? இது தெரியாம போச்சே!
Don't Miss
- News
ராசியில்லாத ராஜா.. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து உருட்டி விட்ட கண்டச்சனி,அஷ்டம குரு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஹர்திக் நியமனம்
- Movies
அஜித் சார்.. டேட் கூட தெரியாதா?.. ரசிகருக்கு எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- Automobiles
ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?
- Finance
அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!
- Lifestyle
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
வாய்ப்பில்ல ராஜா., மஸ்க் தலைமையிலான டுவிட்டர் ரொம்ப மோசமாகும்- சர்ச்சையை கிளப்பிய பில் கேட்ஸ் கருத்து!
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பில் கேட்ஸ், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தி வால் ஷ்ட்ரீட் ஜர்னல், சிஇஓ கவுன்சில் கூட்டத்தை நடத்தியது. இதில் பங்கேற்ற பில்கேட்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்லார். போலி தகவல்களை கையாளும் முறையில் எலான் மஸ்க் தலைமையிலான டுவிட்டர் நிறுவனம் மேலும் மோசமான நிலையை சந்திக்கும் என பில் கேட்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

எலான் மஸ்க் தலைமையிலான டுவிட்டர் மோசமானதாக மாறலாம்
மேலும் பில்கேட்ஸ் எலான்மஸ்க் குறித்து கூறுகையில், எலான் மஸ்க் தலைமையிலான டுவிட்டர் மோசமானதாக மாறலாம். ஆனால் இது அவரின் செயல் கிடையாது. காரணம் அவரது டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் சாதனைகள் மிகப் பெரியது. அந்தந்த துறைகளின் வல்லுனர்களை பணிக்கு தேர்ந்தெடுத்து மஸ்க் வெற்றி பெற்று விட்டார். ஆனால் சமூகவலைதளம் என்பது அப்படி கிடையாது. இந்த துறையில் அப்படி வெற்றிப் பெற முடியாது. பல கோடி பேர் பயன்படுத்தும் தளமாக சமூகவலைதளம் இருக்கிறது. இதில் எலான் மஸ்க் எண்ணம் வெற்றி பெறுமா என்பது பெரும் கேள்விக் குறி தான் என பில்கேட்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இம்முறை அவர் வெற்றி என்பது சந்தேகம் தான். ஆனால் பரந்த மனதுடன் அணுக வேண்டும் காரணம் எலான் மஸ்க்கை குறைத்து மதிப்பிடவே முடியாது என தெரிவித்திருக்கிறார்.

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய மஸ்க்
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய மஸ்க் கருத்து சுதந்திரத்திற்கு அதிகம் மதிப்பளிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். இதனால் தவறான தகவல் மற்றும் வெறுப்பு பேச்சுகள் அதிகளவில் பரவ வழி வகுக்கும் என பில்கேட்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். எலான் மஸ்க் குறித்து நல்ல விதமாக கூறுவதறகு என்னிடம் இருந்து எதுவும் இல்லை, டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பை பாராட்டுகிறேன். டுவிட்டர் தளம் மோசமாக ஒன்றாக மாற்றினால், அதுவே நடக்கட்டும். அதுகுறித்து நிச்சயமாக பேசுவேன். இப்படி தான் நடக்கும் என்று மட்டும் நிச்சயமாக கூற மாட்டேன் என பில்கேட்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

எலான் மஸ்க் பதிவிட்ட டுவிட்
டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்திய வாங்கிய எலான் மஸ்க் குறித்த தகவல் தொடர்ந்து இணையத்தை கலக்கி வருகிறது. அதன்படி மே 3 எலான் மஸ்க் பதிவிட்ட டுவிட் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்று நிறுவனங்களில் நிறுவனரான எலான் மஸ்க், சமீபத்தில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதைதொடர்ந்து மஸ்க் பதிவிட்ட டுவிட்டில், டுவிட்டர் சாதாரண பயனர்களுக்கு எப்போது போல் இலவசமாக இருக்கும் எனவும் ஆனால் வர்த்தக ரீதியாக அல்லது அரசு சார்ந்து டுவிட்டரை பயன்படுத்துவோருக்கு சிறிய கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் தொடர்பு கொண்டதாகவும் அதற்கு டுவிட்டர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எடிட் பட்டன் தேவை, ப்ளூ டிக் ப்ரீமியம் சந்தா சேவை
எடிட் பட்டன் தேவை, ப்ளூ டிக் ப்ரீமியம் சந்தா சேவை கட்டணம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை டுவிட்டரில் எலான் மஸ்க் மேற்கொள்ள இருக்கிறார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னரே எலான் மஸ்க், டுவிட்டரில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு முன்பு எலான் மஸ்க், ஐ லவ் டுவிட்டர் என பதிவிட்டிருந்தார். எலான் மஸ்க் இந்த பதிவுக்கு டேவ் ஸ்மித் என்பவர் ரிப்ளை செய்திருந்தார். அதில் பிடித்திருந்தால் வாங்க வேண்டியது தானே என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மஸ்க், விலை என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஐந்தாண்டுக்கு முன்பு எலான் மஸ்க் பதிவிட்ட டுவிட் தற்போது வைரலானது.

டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்
டுவிட்டரின் பெரும் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், அதை தன் வசமாக்க பெரும் முயற்சியை மேற்கொண்டார். டுவிட்டருக்கு டிமான்ட் வைத்து அதை வாங்கத் தயார் என மஸ்க் கூறினார். அதன்படி மஸ்க்கிற்கு டுவிட்ரை விற்க இயக்குனர் குழு ஒப்புக் கொண்டது. எலான் மஸ்க் டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு விற்க டுவிட்டர் நிறுவனம் ஒப்புக் கொண்டது. இதன்பின் டுவிட்டரின் உரிமையாளராக தனது டுவீட்டை மஸ்க் பதிவிட்டார். அதில், எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள் என நம்புகிறேன் ஏனெனில் அதுதான் பேச்சு சுதந்திரம் என மஸ்க் டுவிட் செய்தார்.

ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறித்து ஆலோசனை
டுவிட்டரை வாங்க முயற்சிக்கும் போதே மஸ்க் பேச்சு சுதந்திரம் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதேபோல் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமான விஷயங்கள் டுவிட்டரில் விவாதம் செய்யப்படுகின்றன, புதிய அம்சங்களுடன் டுவிட்டர் மேம்படுத்தப்படும், இதன்மூலம் டுவிட்டர் எப்போதும் இல்லாததைவிட மிகவும் சிறந்ததாக இருக்கும், டுவிட்டரில் வைரஸ் தாக்குதல் நிறுத்தப்பட்டு சிறந்ததாக்க விரும்புகிறேன் என டுவிட் செய்திருந்தார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086