Home
News

இவனுங்க கொடுக்குற மென்டல் டார்ச்சர்ல.. Elon Musk-ன் 2 முக்கிய அறிவிப்புகள்.. நொந்து போன சுந்தர்!

யானைக்கும் அடி சறுக்கும் என்கிற பழமொழிக்கு வலிமை சேர்க்கும்படி.. அவ்வப்போது கூகுள் (Google) நிறுவனமானது சில "அடிகளை" வாங்குவது வழக்கம். "அதுக்காக இப்படி கேப்பு விடாம அடிக்க கூடாது டா சாமி!" என்று கூறும்படியாக ஒரு லேட்டஸ்ட் சம்பவம் நடந்து உள்ளது.

அதை சம்பவத்தை நடத்தியுள்ளது.. வேறு யாருமில்லை "நம்ம அண்ணன்" எலான் மஸ்க் (Elon Musk) தான். கூகுள் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் ஆன ஜெமினிக்கு (AI Chatbot Gemini) மட்டுமின்றி.. ஜெமினியின் முக்கிய போட்டியாளர் ஆன சாட்ஜிபிடி-க்கு (ChatGPT) எதிராக 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுளளார்!

Elon Musk-ன் 2 முக்கிய அறிவிப்புகள்.. நொந்து போன சுந்தர்!

டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் எக்ஸ் (X) ஆகிய நிறுவனங்களின் சொந்தக்காரர் ஆன எலான் மஸ்க், தனது சொந்த ஏஐ சாட்பாட் ஆன க்ரோக் ஏஐ-ன் இரண்டாவது வெர்ஷன் (Grok 2 AI) தற்போது பயிற்சியில் இருப்பதாகவும், அது பொது வெளிக்கு வரும்போது அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்றும் கூறி உள்ளார்.

மேலும் சில தினங்களுக்கு முன்னர் ஓப்பன் சோர்ஸ் (Open Source) ஆக்கப்பட்ட க்ரோக் ஏஐ-யின் 1.5 வெர்ஷன் (Grok AI 1.5 Version) ஆனது அடுத்த வாரம் முதல் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அணுக கிடைக்கும் என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Elon Musk-ன் 2 முக்கிய அறிவிப்புகள்.. நொந்து போன சுந்தர்!

க்ரோக் 2 வெர்ஷன் ஆனது ஒவ்வொரு மெட்ரிக்கிலும் ஏற்கனவே உள்ள ஏஐ-ஐ விட சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் அது ட்ரெயினிங்கில் உள்ளதாகவும், க்ரோக் 1.5 ஆனது கோட்டிங் மற்றும் கணிதம் தொடர்பான பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை [பெற்றுள்ளதாகவும் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் நாங்கள் நடத்திய சோதனைகளில், க்ரோக் 1.5 ஆனது 50.6% மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. மேலும் ஜிஎஸ்எம்8கே (GSM8K) தரவரிசையில் 90% மதிப்பெண்களை பெற்றுள்ளது. மேலும் இது ஹுமன்இவல் (HumanEval) தரவரிசையில் 74.1% மதிப்பெண்களையும் பெற்றது: இது கோடிங்கை உருவாக்கும் மற்றும் கோட்டிங் தொடர்பான சிக்கல்களை தீர்க்கும் திறனை மதிப்பிடுகிறது.

Elon Musk-ன் 2 முக்கிய அறிவிப்புகள்.. நொந்து போன சுந்தர்!

எலான் மஸ்க் தனது க்ரோக் ஏஐ சாட்பாட்டை ஓப்பன் சோர்ஸ் ஆக்கியதன் மூலம், இந்த சாட்பாட்டின் சோர்ஸ் கோட்-ஐ பொதுமக்களால் மாற்றியமைக்கவும் (Modification), மறுபகிர்வு (Redistribution) செய்யவும் முடியும். அதாவது ஆராய்ச்சியாளர்களால் மற்றும் டெவலப்பர்களால் ஓப்பன் சோர்சிங் க்ரோக் ஏஐ-ல் பணிபுரிய முடியும் மற்றும் க்ரோக்கின் எக்ஸ்ஏஐ திறன்களை (xAI Abilities) மேம்படுத்த முடியும்.

ஒட்டுமொத்தமாக.. கூகுளின் ஜெமினி ஏஐ-க்கும், ஓப்பன் ஏஐ-யின் சாட்ஜிபிடி-க்கும் போட்டியாக தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ.. அதை எல்லாம் "கண்ணும் கருத்துமாக" எலான் மஸ்க் செய்து வருகிறார். ஆனால் இதையெல்லாம் பார்த்து ஓப்பன் ஏஐ நிறுவனம் கொஞ்சம் கூட பதறுவது போல் தெரியவில்லை.

ஏனென்றால் க்ரோக் ஏஐ சாட்பாட்டின் ஓப்பன் ரிலீஸ் (Open release) ஆனது கிட்ஹப் (GitHub) தளத்தில் அணுக கிடைக்கும் என்கிற அறிவிப்பிற்கு பின்னர், சாட்ஜிபிடி தொடர்பான ஒரு முக்கிய தகவல் வெளியானது. அது என்னவென்றால் ஓப்பன் ஏஐ நிறுவனமானது, விரைவில் அதன் சாட்ஜிபிடி-5 வெர்ஷனை (ChatGPT 5 Version) ரிலீஸ் செய்ய உள்ளது!

ஜிபிடி 5 (GPT 5) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜெனரேட்டிவ் ப்ரீ ட்ரெயின்டு ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் 5 (Generative Pre-Trained Transformers 5) வெர்ஷனில் ஆட்டோநமஸ் முறையில் செயல்படக்கூடிய ஏஐ ஏஜெண்ட்கள் (AI Agents that can Operate Autonomously) போன்ற புதிய திறன்களை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இந்த "நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏஐ மாடல்" ஆனது அடுத்த சில மாதங்களில்.. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால்.. ஜூன் அல்லது ஜூலை மாத வாக்கில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. க்ரோக் ஏஐ 2-வை போலவே சாட்ஜிபிடி-5 வெர்ஷனும் கூட கூகுள் ஜெமினிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk Confirmed Grok 2 AI is Under Training Grok 1 5 Version Available on X Next week
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X