TikTok-ஐ வாங்குவது கற்பனை.. Twitter-க்கு அடுத்து இதுனு சொன்ன எப்படி.. அதிகாரப்பூர்வமாக சொன்ன TikTok நிறுவனம்!
இந்தியாவில் கொடிக்கட்டி பறந்த டிக்டாக் (TikTok) நிறுவனம் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அமெரிக்காவில் ஜனவரி 19ஆம் தேதியில் தடை செய்யப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் பில்லியனர் எலான் மஸ்க் (Elon Musk) டிக்டாக் நிறுவனத்தை வாங்க இருப்பதாக பேச்சுக்கள் அடிப்பட்டன. ஏற்கனவே, ட்விட்டரை வாங்கப்போகிறார் என்ற பேச்சு அடிப்பட்டதற்கு பிறகு உண்மையிலேயே அதை வாங்கிதால், இதிலும் அது நடக்கும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு டிக்டாக் நிறுவனமே பதிலளித்துள்ளது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டிக்டாக் வருகைக்கு பிறகு இந்தியாவில் அதிகப்படியான மக்கள் அதை பயன்படுத்த தொடங்கினர். இது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத பயன்பாடாகவும் மாறியது. பொழுதுபோக்கை கடந்து அடிக்சனாக மாறியதாக கூறி அந்த ஆப் தடை இங்கு செய்யப்பட்டது. இதேபோல அமெரிக்காவில் வரும் ஜனவரி 19ஆம் தேதியில் தடை செய்யப்பட்ட இருக்கிறது. ஆனால், காரணம் வேறாகும்.

அதாவது, டிக்டாக் மூலம் அமெரிக்காவின் தகவல்கள் சீனாவுக்கு பகிரப்படுவதாக கூறப்படுவதால், இந்த தடை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சொல்லப்போனால், ஜனவரி 19ஆம் தேதிக்குள் தடை செய்ய வேண்டும் அல்லது அமெரிக்காவை சேர்ந்த உரிமையாளர் யாருக்காவது விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டிருக்கிறது. இதனால், எலான் மஸ்க் பெயர் அடிப்பட்டுள்ளது.
டிக்டாக் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுபோன்ற சோஷியல் மீடியா ஆப்கள் மீது அவருக்கும் ஆர்வம் இருப்பதால், அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இது கிட்டத்தட்ட சர்வதேச செய்தியாகவே மாறிவிட்டது. ஆனால், டிக்டாக் நிறுவனம் அதை மறுத்துவிட்டது. இது முற்றிலும் கற்பனையான ஒன்று என்று தெரிவித்துவிட்டது.
ஆகவே, டிக்டாக் தரப்பில் இதற்கு மறுப்பு வந்துவிட்டது. ஆனால், டிக்டாக் விற்பனை செய்யப்படும் சூழல் வந்தால், எலான் மஸ்க் தரப்பில் இருந்து அறிவிப்பு வரும்வரையில் செய்திகள் ஓயாது. இதனிடையே மற்றொரு செய்தியும் பரவி வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு டிக்டாக் தடைக்கு நீட்டிப்பு வழங்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
டிக்டாக் நிறுவனத்தை பொறுத்தவரையில் அமெரிக்காவிடம் அதை ஒப்படைக்க தயாராக இல்லை. சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. இதில் தோல்வியடைந்தால், டிக்டாக் தடையை ஏற்று கொள்ள தயாராகவே இருக்கிறது. ஜனவரி 19ஆம் தேதியில் அமெரிக்காவில் டிக்டாக் இருக்குமா அல்லது தடை செய்யப்படுமா என்பது தெரிந்துவிடும்.
உலகில் 447 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட எலான் மஸ்க் சோஷியல் மீடியா மீது அதீத ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இவரது பல ட்வீட்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனால், சில ட்வீட்கள் நீக்கப்பட்டன. இதில் கடுப்பான எலான் மஸ்க் ட்விட்டர் என்னிடம் இருந்தால், கருத்து சுதந்திரம் வழங்குவேன் என்று சொன்னார்.
அந்த நேரத்தில் ட்விட்டரை அவரே வாங்கிவிடலாமே என்று தொடங்கி அவர் வாங்கப்போகிறார் என்பது வரையில் பேச்சுக்கள் அடிப்பட்டன. ஆனால், அதன் விலை 44 பில்லியன் அமெரிக்க டாலக்களாக இருப்பதால், அது சாத்தியமில்லை என்றே பலருக்கு தோன்றியது. ஆனால், உண்மையில் எலான் மஸ்க் அதை வாங்கிவிட்டார். அதன் பெயரையும் எஸ்க் என்று மாற்றிவிட்டார்.
இதன் காரணமாகவே எலான் மஸ்க் எதையாவது வாங்குகிறார் என்று பேச்சுக்கள் அடிப்பட்டால், அதை கடந்து செல்ல முடியவில்லை. டிக்டாக்குக்கு முன்னதாக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு நிகராக எக்ஸ்மெயில் உருவாக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு ட்விட்டரில் பதிலளித்த எலான் மஸ்க் அதுவும் எங்களது திட்டங்களில் இருக்கிறது என்று சொன்னது குறிப்பிட வேண்டியது.


Click it and Unblock the Notifications








