உலகப் பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸை முந்திய எலான் மஸ்க்.! பறக்கு மீம்ஸ்.!

|

தற்போது வெளிவந்த தகவலின்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் எலான் மஸ்க். மேலும் அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை ஏறியதை அடுத்து அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டால்கள் இருந்து 128 பில்லின் டாலர்களாக உயர்ந்துள்ளது.

 ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில்

அண்மையில் வெளியான ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் எலான் மஸ்க உள்ளார். குறிப்பாக டெஸ்லாவின் பங்குகள் உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.

மஸ்கின் சொத்து மதிப்பு

குறிப்பாக எலான் மஸ்கின் சொத்து மதிப்பு உயர்ந்ததை அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 3-ம் இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் டொயோட்டா, ஜெனரல் மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களைவிடக் குறைவான வாகனங்களைத் தயாரித்தாலும், உலகின் மதிப்புமிக்க கார் நிறுவனமாக டெஸ்லா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தையான ஐரோப்பாவில்

கடந்த செவ்வாய் கிழமை ஜெர்மனியில் பேசிய மஸ்க், மிகப்பெரிய சந்தையான ஐரோப்பாவில் சிறிய கார்களுடன் டெஸ்லா நுழைவது மிகவும் அறிவுடைய செயலாக இருக்கும் என்றார்.

அமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.5000 Pay Balance: பெறுவது எப்படி?அமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.5000 Pay Balance: பெறுவது எப்படி?

 பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளினார்.

அதேபோல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் அவர்கள் உலகப் பணக்காரர்கள் பட்டியிலில் 2017-ம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்தார். அதன்பின்பு அமேசான் நிறுவனம் ஜெஃப் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளினார்.

127.7 பில்லியன்

பில்கேட்ஸ் சொத்து மதிப்பு 127.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது. பின்பு பில்கேட்ஸ் அவரது அறக்கட்டளைகளுக்கு தானமளிக்காமல் இருந்திருந்தால் சொத்து மதிப்பு அதிகமாக இருந்திருக்கும். அதேபோல் ஜெஃப்பின் சொத்து மதிப்பு 182 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது ப்ளூம்பெர்க். மேலும் இப்போது பில் கேட்ஸ் மற்றும் எலான் மஸ்க் என இருவர்களின் மீம்கள் சமூகவலைதளங்களில் வைரலாக வைரலாக பரவி வருகிறது அதைப் பார்ப்போம்..

#1

#2

#3

#4

Most Read Articles
Best Mobiles in India

English summary
Elon Musk Becomes the Second Richest Man in the World: Do you Know the Bill Gates Place!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X