Home
News

திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..

Premium+ட்விட்டர் தளத்தை வாங்கிய நாள் முதல் பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறார் எலான மஸ்க் (Elon Musk). குறிப்பாக இந்த எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் ஏராளமான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார் எலான் மஸக்.

அதாவது பெயர் மாற்றம், பயனர்களுக்குக் கட்டண முறையில் விசேஷ அம்சங்களை வழங்கும் சந்தா முறை போன்ற பல்வேறு மாற்றங்கள் இந்த தளத்தில் வந்தது. இந்நிலையில் எக்ஸ் (தளத்தில்) மீண்டும் ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்..

தற்போது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவை இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். மேலும் இது தொடர்பான அறிவிப்பைத் தனது எக்ஸ் (ட்விட்டர்) அக்கவுண்டில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட அறிவிப்பு என்னவென்றால், எக்ஸ் தளத்தில் 2500-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதார்களை ஃபாளோவர்களாக கொண்டிருக்கும் அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் சந்தா (Premium) இலவசமாக வழங்கப்படும் என்றும், 5000-க்கும் அதிகமான வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்டுள்ள அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் பிளஸ் சந்தா (Premium+) இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்..

அதேபோல் இலவச பிரீமியம் சந்தாவை பெறுவது எப்படி என்று பார்ப்போம். அதாவது எக்ஸ் தளத்தில் வெறும் 2500 ஃபாளேவர்களை வைத்திருப்போருக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படாது. குறிப்பாக 2500 ஃபாளோவர்கள் இருப்பின் அவர்கள் எக்ஸ் தளத்தின் பேசிக், பிரீமியம் அல்லது பீரிமியம் பிளஸ் சந்தாக்கள் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

இதேபோன்று தான் பிரீமியம பிளஸ் சந்தாவை பெற குறிப்பிட்ட அக்கவுண்ட்-ஐ குறைந்தபட்சம் 5000 ஃபாளோவர்கள் இந்த சந்தாக்களில் எதையேனும் வாங்கியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர யூடியூப் தளத்திற்குப் போட்டி கொடுக்கும் விதமாக எலான் மஸ்க் ஒரு புதிய ஆப் ஒன்றை கொண்டுவர உள்ளதாகத் தகவல் வெளிவந்தது. சமீபத்தில் எக்ஸ்(X) தளம் அமேசான் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கான பதிய டிவி ஆப் ஒன்றை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஃபார்ச்சூன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் லாங்க் பார்மேட் வீடியோ இரண்டையும் கொண்டு வர வேண்டும் என்பது தான் எலான் மஸ்க் திட்டம்.

திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்..

இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் நீண்ட நேர வீடியோக்களை பெரிய திரையில் பார்க்க ஸ்மார்ட் டிவிகளுக்கான எக்ஸ் (X) செயலி கொண்டுவரப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக டிவிகளில் எக்ஸ் (X) செயலி விரைவில் வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் வீடியோ கேம்கள், பாட்காஸ்ட் மற்றும் பெரிய பதிவு போன்ற அனைத்தையும் இந்த எக்ஸ் தளத்தில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார் எலான் மஸ்க். மேலும் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தை வீடியோக்களின் முதன்மை தளமாக மாற்றுவதே எலான் மஸ்க் அவர்களின் திட்டம் என்று தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk announced free Premium and Premium Plus subscription for X users: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X