கையும் களவுமாக மாட்டிய Elon Musk: நண்பர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு?- மஸ்க் சொன்ன பதில்!

|

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான செய்தியில் எலான் மஸ்க்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் எலான் மஸ்க் தொடர்பில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வைரலாகி வரும் நேரத்தில் எலான் மஸ்க் இதுகுறித்து பதிலளித்துள்ளார்.

முறிந்து போன நட்பு

முறிந்து போன நட்பு

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் தகவல்படி, கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் எலான் மஸ்க் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தான், கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மற்றும் எலான் மஸ்க்கிற்கு இடையேயான நீண்ட நாள் நட்பு முடிவுக்கு வந்தது எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி இருந்த போது டெஸ்லா நிறுவனத்தை காப்பாற்ற எலான் மஸ்க்கிற்கு உதவியது செர்ஜி பிரின் தான் எனவும் கூறப்படுகிறது.

அனைத்து முதலீடுகளையும் விற்கும்படி அறிவுறுத்தல்

அனைத்து முதலீடுகளையும் விற்கும்படி அறிவுறுத்தல்

மேலும் எலான் மஸ்க் நிறுவனங்களில் உள்ள தனது தனிப்பட்ட முதலீடுகளை விற்கும்படி தனது ஆலோசர்களுக்கு கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் அறிவுறுத்தி இருக்கிறார். இந்த முதலீட்டின் அளவுகள் எவ்வளவு என்பது சரியாக தெரியவில்லை. ஏதேனும் விற்பனை நடந்துள்ளதா என்பது குறித்த தகவலும் தெளிவாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் இடம்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் இடம்

டெஸ்லா சிஇஓ, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் என பல புகழ் எலான் மஸ்க்கிற்கு இருக்கிறது. அதேபோல் ப்ளூம்பெர்க் பில்லியன்ஸ் இன்டெக்ஸ் படி, எலான் மஸ்க் சுமார் 242 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல் செர்ஜி பெரின் 94.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் இடங்களை பிடித்திருக்கிறார்.

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் தொடர்பு

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் தொடர்பு

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிகோல் ஷனாஹனுக்கும் எலான் மஸ்க்கிற்கும் தொடர்பு இருந்தது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருக்கிறது. நிகோல் ஷனாஹனுக்கும் மஸ்க்கிற்கும் இடையேயான விவகாரம் மியாமி நகரின் ஆர்ட் பாஸலில் நடந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணக்காரர்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி

பணக்காரர்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி

மியாமி நகரில் ஆர்ட் பாஸல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இது உலக பணக்காரர்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் எலான் மஸ்க் மற்றும் நிகோல் ஷனாஹன் பங்கேற்றுள்ளனர்.

இதில் தான் மஸ்க்கிற்கும் ஷனாஹனுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷயம் செர்ஜி பிரிவினுக்கு தெரிய வந்தது எனவும் இதையடுத்து எலான் மஸ்க், செர்ஜி பிரிவினிடம் மன்னிப்பு கோரினார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிந்து வாழும் கணவன் மனைவி

பிரிந்து வாழும் கணவன் மனைவி

இந்த தகவலை ஊர்ஜிதப் படுத்தும் விதமாக, கடந்த 2021, டிசம்பர் 31 ஆம் தேதி முதல் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மற்றும் அவரது மனைவி நிகோல் ஷனாஹான் ஆகிய இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

மேலும் செர்ஜி பிரின் விவகாரத்து கோரி நிகல் ஷனாஹனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தகவல் பெரிதளவு பரவியதை அடுத்து எலான் மஸ்க் இதற்கு பதிலளித்து இருக்கிறார்.

மஸ்க் சொன்ன பதில் என்ன தெரியுமா?

பரவிய இந்த தகவலுக்கு எலான் மஸ்க் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

அதில் "இது ஆதாரமற்ற செய்தி. நானும் செர்ஜியும் நண்பர்கள், நேற்று இரவு கூட ஒரு விருந்தில் ஒன்றாக இருந்தோம்! நான் நிக்கோல் ஷனாஹானை மூன்று வருடங்களில் இரண்டு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன், இந்த இரண்டு முறையும் அனைவருக்கும் மத்தியில் தான் சந்தித்திருக்கிறேன். காதல் எதுவும் இல்லை" என தெரிவித்துள்ளார்.

இது முதன்முறை அல்ல

இது முதன்முறை அல்ல

எலான் மஸ்க் மீதான இதுபோன்ற புகார்கள் என்பது முதன்முறையல்ல, இன்சைடர் தகவலின்படி எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் ஊழியர் ஒருவர், 2016 ஆம் ஆண்டில் மஸ்க்கால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார் எனவும் இதையடுத்து அந்த ஊழியருக்கு 250,000 டாலர் செலுத்தி விவகாரம் நிவர்த்தி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் "முற்றிலும் உண்மைக்கு புறம்பானது" என மஸ்க் பதிலளித்தார்.

சமீபத்தில் பிறந்த இரட்டை குழந்தை

சமீபத்தில் பிறந்த இரட்டை குழந்தை

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான மற்றொரு நிறுவனம் நியூரோ லிங்க், இந்த நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக ஷிவான் ஜில்ஸ் இருக்கிறார். எலான் மஸ்க்கிற்கும் அவரது நிறுவனத்தின் மூத்த ஊழியரான ஷிவான் ஜில்ஸ்-க்கும் 2021 நவம்பரில் இரட்டை குழந்தைகள் பிறந்தது.

இந்த தகவல் 2022 இல் தான் வெளிச்சத்துக்கு வந்தது. எலான் மஸ்க் மற்றும் ஜிலஸ் ஆகியோர் தங்களின் இரட்டை குழந்தைகளின் பெயர் மாற்றுவது தொடர்பாக மனு அளித்தனர். இதன்மூலம் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.

எலான் மஸ்க் மற்றும் ஷிவான் ஜில்ஸ்

எலான் மஸ்க் மற்றும் ஷிவான் ஜில்ஸ்

ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கி இருக்கும் பட்சத்தில் அதை முன்னின்று நடத்துபவராக ஷிவான் ஜில்ஸ் தான் இருந்திருப்பார் என தகவல் வெளியானது.

எலான் மஸ்க் மற்றும் ஷிவான் ஜில்ஸ் ஆகிய இருவருக்கும் ரகசிய உறவு இருந்ததாகவும் இதன்காரணமாக தான் இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது பிறந்துள்ள இரட்டை குழந்தைகளுடன் சேர்த்து எலான் மஸ்க் மொத்தம் 9 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார்.

மொத்தம் 9 குழந்தைகளுக்கு தந்தை

மொத்தம் 9 குழந்தைகளுக்கு தந்தை

கனடா எழுத்தாளரான ஜஸ்டின் வில்ஸனுக்கும் எலான் மஸ்க்குற்கும் 5 குழந்தைகள் பிறந்திருக்கிறது. ஜஸ்டின் வில்ஸன் எலான் மஸ்க்கின் முன்னாள் மனைவி ஆவார். அதேபோல் கனடா நாட்டு பாடகர் க்ரீம்ஸ் என்பவரை திருமணம் செய்த மஸ்க்கிற்கு 2 குழந்தைகள் இருக்கிறது.

தற்போது எலான் மஸ்க்கிற்கும் அவரது நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஷிவான் ஜில்ஸுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. இதன்மூலம் எலான் மஸ்க் மொத்தம் 9 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார்.

Source: wsj.com

Best Mobiles in India

English summary
Elon Musk Affair with Goole Co Founder Wife?- Report

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X