நல்லவரா? கெட்டவரா? இனி எல்லோருக்கும் 420! மஸ்க் வழங்கும் இன்பதிர்ச்சிக்கு ரெடியா இருங்க..

|

சமூகவலைதளங்களில் சராசரி ஒன்றாக உலா வந்த ட்விட்டர் சமீபகாலமாக பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு காரணம் அனைவரும் அறிந்ததே. ட்விட்டரை சமீபத்தில் உலகப் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். வாங்கிய தினம் முதல் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

280க்கு பதிலாக 420

280க்கு பதிலாக 420

ட்விட்டர் 2.0வில் எழுத்து வரம்பு 280க்கு பதிலாக 420 ஆக மாற்ற வேண்டும் என ஒரு பயனர் எலான் மஸ்க்கை டேக் செய்து ட்வீட் செய்திருந்தார். அதற்கு எலான் மஸ்க் "நல்ல யோசனை" என பதிலளித்துள்ளார். ஆரம்பத்தில் ட்விட்டர் ட்வீட் எழுத்துகள் 140 ஆக இருந்தது. 2018இல் இந்த வரம்பு 140 இல் இருந்து 280 ஆக உயர்த்தப்பட்டது. வரும் காலத்தில் இந்த எழுத்துகளின் எண்ணிக்கை 280 இல் இருந்து 420 ஆக அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி மாற்றங்கள்

அதிரடி மாற்றங்கள்

அக்டோபர் பிற்பகுதியில் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். ஒரு நிறுவனத்தை ஒருவர் கைப்பற்றிய உடன் அதில் படிப்படியாக மாற்றங்களை செய்வது வழக்கம் தான். ஆனால் மஸ்க் ட்விட்டரை பயன்படுத்தலாமா வேண்டாமா என அதன் பயனர்களுக்கே குழப்பம் ஏற்படும் அளவிற்கு அதில் மாற்றங்களை செய்து வருகிறார்.

ட்விட்டர் உரிமையாளரான எலான் மஸ்க்

ட்விட்டர் உரிமையாளரான எலான் மஸ்க்

மஸ்க் செய்து வரும் மாற்றங்களில் தற்போது புதிதாக ஒன்று இணைய இருக்கிறது. அதுதான் ட்விட்டர் எழுத்துக்களின் எண்ணிக்கை கட்டுப்பாடு. கடந்த நான்கு ஆண்டுகளாக ட்விட்டரில் 280 என எழுத்துக்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. புதிய ட்விட்டர் உரிமையாளரான எலான் மஸ்க், ட்வீட் இல் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 280 இல் இருந்து 420 ஆக அதிகரிக்க இருக்கிறார். இதை அவர் ட்வீட் மூலம் ஏறத்தாழ உறுதி செய்திருக்கிறார்.

ட்விட்டர் எழுத்து வரம்பு

ட்விட்டர் எழுத்து வரம்பு

@rawalerts என்ற ட்விட்டர் பயனர், "ட்விட்டர் 2.0, எரிச்சலூட்டும் 280க்கு பதிலாக எழுத்து வரம்பை 420 ஆக மாற்ற வேண்டும்" என ட்வீட் செய்துள்ளார். இதற்கு எலான் மஸ்க் "நல்ல யோசனை" என ட்வீட் செய்துள்ளார். ட்விட்டர் பாரம்பரிய எஸ்எம்எஸ் முறைகளை கருத்தில் கொண்டு 140 என எழுத்து வரம்பை நிர்ணயித்தது. பின் 2018 இல் எழுத்துகளின் எண்ணிக்கை 140 இல் இருந்து 280 ஆக உயர்த்தப்பட்டது. நான்கு ஆண்டுகளாக 280 என்ற எழுத்து கட்டுபாடுகள் இருந்த நிலையில் தற்போது 420 ஆக உயர்த்தப்பட இருக்கிறது.

டிரம்புக்கு அனுமதி அளித்த மஸ்க்

டிரம்புக்கு அனுமதி அளித்த மஸ்க்

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நாள் முதல் அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு விதிக்கப்பட்ட ட்விட்டர் தடை நீக்கப்பட வேண்டுமா என பயனர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில், 15 மில்லியன் ட்விட்டர் பயனர்கள் டிரம்பை மீண்டும் ட்விட்டரில் கொண்டு வர வேண்டும் என வாக்களித்தனர். இதையடுத்து டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ட்வீட் எடிட் ஆப்ஷன்

ட்வீட் எடிட் ஆப்ஷன்

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நாள் முதல் அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். ட்விட்டரில் ட்வீட் எடிட் ஆப்ஷன் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. இந்த ட்வீட்டர் ப்ளூ சந்தா சேவையும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில் ட்வீட் எடிட் பட்டன் சேவையை அனைவருக்குமானதாக மாற்ற எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ட்வீட் எடிட் ஆப்ஷன் குறித்தும் மஸ்க் முன்னதாகவே தெரிவித்திருந்தார்.

பெருமூச்சு விடும் ட்விட்டர் பயனர்கள்

பெருமூச்சு விடும் ட்விட்டர் பயனர்கள்

ட்விட்டரின் புதிய தலைவரான எலான் மஸ்க், ட்விட்டரின் ப்ளூ டிக் ஆப்ஷனை பெறுவதற்கு அனைத்து பயனர்களும் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என அறிவித்தார். அதாவது இந்திய மதிப்புப்படி மாதம் ரூ.660 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் திகைப்பில் இருந்த பயனர்களுக்கு தற்போது விடுதலை கிடைத்திருக்கிறது.

Twitter Blue சந்தாதாரர்கள்

Twitter Blue சந்தாதாரர்கள்

எலான் மஸ்க் எடிட் பட்டனை அனைத்து பயனர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய திட்டமிட்டுள்ளதாக பிளாட்ஃபார்மரின் கேசி நியூட்டன் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சேவையானது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள Twitter Blue சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. உண்மையாகவே எலான் மஸ்க் ட்வீட் எடிட் பட்டன் ஆப்ஷனை அனைவருக்கும் வழங்கும்பட்சத்தில் இது மிகவும் வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Elon Musk Accepts Twitter User Request: Now Musk Going to increase the Tweet Character Limit

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X