அறிமுகமானது எலிஸ்டா ஸ்மார்ட் எல்இடி டிவி: பெசல்லெஸ் வடிவமைப்பு, வெப்ஓஸ் ஆதரவு- அம்சம்தான் ப்ரீமியம் விலையல்ல!

|

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு என பிரபல பிராண்டாக எலிஸ்டா இந்தியாவில் வளர்ந்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் எலிஸ்டா அல்ட்ரா ப்ரீமியம் ஸ்மார்ட் எல்இடி டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிவி webOS மூலம் இயக்கப்படுகின்றன. இது பெசல் லெஸ் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் எல்இடி டிவிகள் ஆனது மூன்று டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கின்றன. ப்ரீமியம் டிவிகள் என்று குறிப்பிடுவதற்கு ஏற்ப இதன் விலையும் சற்று அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும் இந்த அம்சங்கள் விலையை ஈடுகட்டுகிறது.

எலிஸ்டா ப்ரீமியம் ஸ்மார்ட் டிவிகள்

எலிஸ்டா ப்ரீமியம் ஸ்மார்ட் டிவிகள்

எலிஸ்டா ப்ரீமியம் ஸ்மார்ட் டிவிகள் ஆனது மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அது 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகளாகும். மூன்று மாடல்களின் விலை குறித்து பார்க்கையில், இதன் 43 இன்ச் டிவியானது ரூ.48,990 என கிடைக்கிறது. அதேபோல் 50 இன்ச் டிவியானது ரூ.59,990 எனவும் 55 இன்ச் டிவியானது ரூ.70,990 எனவும் கிடைக்கிறது. இந்த சாதனம் அனைத்து ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.07 பில்லியன் வண்ண ஆதரவுகள்

1.07 பில்லியன் வண்ண ஆதரவுகள்

எலிஸ்டா ஸ்மார்ட் எல்இடி டிவி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ThinQ AI ஆதரவுடன் வருகிறது. அலெக்ஸா உட்பட குரல் கட்டளை வசதியும் இந்த டிவியில் இருக்கிறது. எலிஸ்டா ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது மேஜிக் ரிமோட் அணுகலுடன் வருகிறது. நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்ட ஓடிடி அணுகலை இந்த டிவி அனுமதிக்கிறது. இதன் டிஸ்ப்ளே ஆனது 400 நிட்ஸ் உச்ச பிரகாசம், 4கே குவாண்டம் லூசென்ட் மற்றும் 1.07 பில்லியன் வண்ண ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

தடையற்ற ஸ்ட்ரீமிங் சேவை

தடையற்ற ஸ்ட்ரீமிங் சேவை

பெசல் லெஸ் அதாவது குறைந்த பிரேம் வடிவமைப்போடு 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் மங்கலற்ற தெளிவான காட்சியை கொண்டிருக்கிறது. ஃபியூச்சர்-ரெடி டெக்னாலஜி அம்சத்தோடு இந்த ஸ்மார்ட்டிவி வெளியாகியுள்ளது. டால்பி ஆடியோ ஆதரவுடன் கூடிய மூன்று மாடல்களும் அதிக நம்பகத்தன்மை கொண்ட சரவுண்ட் ஒலியை வழங்குகின்றன. இந்த ஸ்மார்ட்டிவியில் தடையற்ற ஸ்ட்ரீமிங் சேவையை பெறுவதற்கு டூயல் பேண்ட் வைஃபை ரிசீவர் பொருத்தப்பட்டுள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி பவன் குமார் கருத்துகள்

தலைமை நிர்வாக அதிகாரி பவன் குமார் கருத்துகள்

எலிஸ்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி பவன் குமார் இந்த சாதனத்தின் அறிமுகம் குறித்து கூறிய கருத்துகளை பார்க்கலாம். "இந்தியாவில் ஸ்மார்ட்டிவி தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பயனர்கள் பட்ஜெட் விலையில் சிறந்த அனுபவம், சிறந்த தொழில்நுட்பம் கொண்ட டிவிகளையே எதிர்பார்க்கின்றனர். நாங்கள் சிறந்த செயல்திறன் கொண்ட தயாரிப்புகளை நுகர்வோர்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம்" என குறிப்பிட்டார். மேலும் எங்கள் ஸ்மார்ட் எல்இடி டிவிகள் ஆனது பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் இணையற்ற பார்வை அனுபவத்தை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என தெரிவித்தார்.

32 இன்ச் ஸ்மார்ட்டிவி

32 இன்ச் ஸ்மார்ட்டிவி

எலிஸ்டா ரஷ்யாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. எலிஸ்டா இந்தியாவில் பல்வேறு வீட்டு உபயோக சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. எலிஸ்டா இந்தியாவில் எல்இடி ஸ்மார்ட்டிவியை பட்ஜெட் விலையிலும் விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்மார்டிடிவியானது 32 இன்ச் அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது எச்டி ஆதரவோடு, ஏ+ பேனல் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது 20 வாட்ஸ் சவுண்ட் வெளியீட்டு ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.

1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு

1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு

இந்த ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.20,990 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த 32 இன்ச் டிவியானது க்ளவுட் டிவி ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இதில் ஏ+ கிரேட் பேனல் இருக்கும் காரணத்தால், பார்வை அனுபவம் எத்திசையிலும் மேம்பட்டதாகவே இருக்கிறது. இரண்டு எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யூஎஸ்பி போர்ட், ஒரு இயர்போன் ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு இந்த சாதனம் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Elista Launched its Elista Smart Led Tv in india with Bezel less design, webOs and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X