வாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும்.! 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.!
இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மிக எளிதாக ஹேக் செய்ய முடியுமென்று ஹேக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வித முறைகேடுகளும் செய்ய முடியாதென்று திட்ட வட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது தலைமை தேர்தல் ஆணையம். ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மிக எளிதாக ஹேக் செய்ய முடியுமென்று ஹேக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிமிடத்திற்கு 5 ஓட்டுகள் மட்டுமே
கள்ள ஓட்டுப் பதிவுகளை தடுப்பதற்காக இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்திற்கு 5 ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்ய முடியாதபடி இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே கள்ள ஓட்டுப் பதிவுகளை பதிவு செய்ய முயற்சித்தாலும் பெரிய அளவில் ஓட்டு எண்ணிக்கையில் மாற்றம் இருக்காதபடி இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2009 இல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு
2009 ஆம் ஆண்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாகப் பல காட்சிகள் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அந்தச் சமயத்தில் தலைமை தேர்தல் ஆணையம் வெளிப்படையான சவால் ஒன்றை முன் வைத்தது. அந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சோதித்து, அதனை ஹேக் செய்ய முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று வெளிப்படையான அறிவிப்பை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சவால்விட்ட தேர்தல் ஆணையம்
தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைக் கேட்ட ஒரு தொழில்நுட்ப குழு, நேரடியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சோதித்து பார்க்க தேர்தல் ஆணையம் சென்றது. சவாலை ஏற்றுத் தலைமை தேர்தல் ஆணையம் வந்த தொழில்நுட்ப குழுவினருக்குத் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சோதித்து பார்க்க அனுமதி வழங்கியது.

அதிர்ச்சி அடைந்த தேர்தல் ஆணையம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சோதனை செய்யத் துவங்கிய குழு, பார்த்த உடனே எளிதில் இதை ஹேக் செய்து விடலாம் என்று தெரிவித்தது. அக்குழு சொல்லிய தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைச் சோதனையிட தடை வழங்கி சோதனையை உடனடியாக பாதியில் நிறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முறைகேட்டை மூடி மறைத்தது ஏன்?
2009 ஆம் ஆண்டில் வெளிப்படையாகச் சவால் விட்டு அதனை நிரூபிக்க வந்த குழுவின் முதற் கட்ட சோதனையை உடனடியாக தடை செய்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேட்டை மூடி மறைத்தது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் தலைமை ஆணையம் பதில் அளிக்கவில்லை என்பதே நிதசனமான உண்மை.


Click it and Unblock the Notifications