Home
News

AI எலக்ட்ரானிக் மூக்கு.. உணவில் உள்ள விஷத்தை கண்டறியும்.. நாய்களை விட 1000 மடங்கு மோப்ப சக்தி.. புது தொழில்நுட

தொழில்நுட்பம் வளரவளர பல புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏஐ சென்சாருடன் பொருத்தப்பட்ட எலக்ட்ரானிக் மூக்கு (AI electronic nose) போன்ற கருவி உணவில் உள்ள விஷத்தை துல்லியமாக கண்டறிகிறதாம்.

இதன் மோப்ப சக்தி, நாய்களின் (dogs) மோப்ப சக்தியை விட சுமார் 1000 மடங்கு அதிகமானது என்று இந்த எலக்ட்ரானிக் நோஸ் (electronic nose device) கருவியை கண்டறிந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இஸ்ரேலில் உள்ள நெகேவின் பென் குரியன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளான இருவர் இந்த புதிய மோப்ப சக்தி (smelling sense) கொண்ட எலக்ட்ரானிக் கேட்ஜெட்டை உருவாக்கியுள்ளனர். இது மனித மூக்கை போல வாசனையை உணரக்கூடியதாக இருக்கிறது.

AI எலக்ட்ரானிக் மூக்கு.. நாய்களை விட 1000 மடங்கு மோப்ப சக்தி..

உண்மையில் மனித மூக்கு (human nose) ஒரு அற்புதமான விஷயமாகும். மனித மூக்கின் வாசனைத் திறன் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மூக்கிலும் சுமார் 400 சென்ட் ரிசெப்ட்டார்கள் (scent receptors) உள்ளன. இவற்றை நாம் வாசனை வாங்கிகள் என்று தமிழ் அழைக்கிறோம். இவை சுமார் 1 டிரில்லியன் (one trillion different odours) வெவ்வேறு வாசனை மற்றும் நாற்றங்களைக் கண்டறிய கூடிய திறனுடன் வருகிறது.

தொழில்நுட்பம் மூலம் மோப்ப சக்தியை உருவாக்க முடியுமா (smell sensing created through technology)?

மனித உடலில் இருக்கும் ஒரு உணர்வு திறனை நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருவடிவமைப்பு செய்ய முடியுமா? என்றால் முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதை சாத்தியம் என்று சொன்னதுமட்டுமல்லாமல் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (artificial intelligence) சென்சார்களை பயன்படுத்தி தொழில்நுட்பம் வழியாக மோப்ப சக்தியை உருவாக்க முடியும் என்று நிரூபித்தும்விட்டனர்.

எலக்ட்ரானிக் மூக்கு எதற்காக பயன்படுத்தப்படும்?

இத்தகைய வித்தியாசமான கண்டுபிடிப்பை உருவாக்க காரணம் என்ன? என்று கேட்டபோது, மனிதர்களின் உணவு பழத்தில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளது. குறிப்பாக, இப்போது மனிதர்கள் உண்ணும் உணவு விஷமாக மாறிவருகிறது. உணவு போர்டுகளில் கலப்படம் பெருகிவிட்டது. இது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக மாறியுள்ளது. உணவில் இருக்கும் விஷத்தை கண்டறிய மக்களுக்கு ஒரு சாதனம் கிடைத்தால் எவ்வளவு உதவியாக இருக்கும்?

இது எப்படி உணவில் உள்ள விஷத்தை கண்டறியும்?

இந்த கோணத்தில் யோசித்து தான், இந்த எலக்ட்ரானிக் நோஸ் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சாதனத்தை இவர்கள் சென்ஸிஃபி (Sensifi) என்று பெயரிட்டுள்ளனர். இந்த சாதனத்தில் இருக்கும் எலெக்ட்ரோட்கள் கார்பனின் நானோ துகள்கள் பூசப்பட்டுள்ளன. இவை பாக்டீரியாவால் வெளியேற்றப்படும் வாசனை அல்லது ஆவியாகும் கரிம சேர்மங்களை (VOC) கண்டறிகின்றன.

ஏஐ எலக்ட்ரானிக் நோஸ் சாதனத்திற்கு நாயை விட 1000 மடங்கு அதிக மோப்ப சக்தி:

பாக்டீரியாவின் வெவ்வேறு விகாரங்கள், வெவ்வேறு VOC வாசனையை உருவாக்குகின்றன. இது சென்ஸிஃபி இயந்திரத்தில் வேறுபட்ட எலக்ட்ரிக் சிக்னல்கள் உருவாக்குகிறது. இது AI மென்பொருள் அமைப்பால் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் உணவுகளில் உள்ள நஞ்சுகளை நம்மால் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியில் உள்ள உயிரினங்களில் நாய்களுக்கு தான் மோப்ப சக்தி திறன் அதிகமாகவுள்ளது என்று நாம் அனைவர்க்கும் தெரியும்.

ஆனால், இனி அப்படி நம்மால் சொல்ல முடியாது. ஏனெனில், இந்த சென்ஸிஃபி எலக்ட்ரானிக் நோஸ் (Sensifi electronic nose) சாதனத்தின் மோப்ப சக்தி, நாய்களின் மோப்ப சக்தியை விட சுமார் 1000 மடங்கு அதிகமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இனி பூமியில் அதிக மோப்ப சக்தி கொண்ட பொருளாக சென்ஸிஃபி இருக்க போகிறது என்பதே உண்மையாகும். இத்தகைய கண்டுபிடிப்பு பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Electronic Nose Sensifi With AI Smell Sensor Created To Prevent Food Poisoning
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X