Home
News

நீங்கள் குப்பை என்று தூக்கி போடும் இந்த சாதனங்கள்.. உண்மையில் பொக்கிஷமாம்.. உடைக்கப்பட்ட பகீர் உண்மை.!

கேபிள்கள் (cables), எல்இடி விளக்குகள் (LED லைட்ஸ்), மினி மின்விசிறிகள் (mini fans) மற்றும் டிஸ்போசபிள் வேப்கள் (disposable vapes) போன்ற கிட்டத்தட்ட அரை பில்லியன் சிறிய மின்சாதனங்கள் கடந்த ஆண்டு தூக்கி எறியப்பட்டதாக மெட்டீரியல் ஃபோகஸின் ஆராய்ச்சி காட்டுகிறது.

இந்த "ஃபாஸ்ட் டெக் (fast tech)" பொருட்கள், வேகமாக வளர்ந்து வரும் மின்-கழிவு வகை என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது. சராசரி வீட்டில் 30 பயன்படுத்தப்படாத மின்சாதனப் பொருட்கள் (electrical waste) குப்பையாக சேகரிக்கப்படுகின்றன என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த பொருட்களில் மதிப்புமிக்க மூலப் பொருட்கள் உள்ளன. மேலும் அவை அனைத்தும் மறுசுழற்சி (Recycle) செய்யப்படலாம் என்பதை இந்த ஆராய்ச்சி குழு விளக்கியுள்ளது.

நீங்கள் குப்பை என்று தூக்கி போடும் இந்த சாதனங்கள் உண்மையில் பொக்கிஷம்!

மெட்டீரியல் ஃபோகஸ் (material focus) என்ற இலாப நோக்கற்ற குழுவானது, ஓபினியம் ஆராய்ச்சியில் இருந்து 2000 பேரிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. பதில்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் 471 மில்லியன் "ஃபாஸ்ட் டெக்" பொருட்கள் தூக்கி எறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 260 மில்லியன் டிஸ்போஸபிள் வேப்ஸ் (vapes) தூக்கி எறியப்பட்டுள்ளன. அதேபோல், 30 மில்லியன் LED, சோலார் (solar) மற்றும் அலங்கார லைட்கள் மற்றும் வண்ண விளக்குகள் குப்பையாக தூக்கி எறியப்பட்டுள்ளன.

மற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை (electronics devices) பற்றி பேசுகையில், 26 மில்லியன் கேபிள்கள், 10 மில்லியன் USB ஸ்டிக்கள், 7 மில்லியன் கார்ட்லெஸ் ஹெட்ஃபோன்கள் (cardless headphones), 5 மில்லியன் மினி ஃபேன்கள் என்று பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குப்பையாக (e-waste) தூக்கி எறியப்பட்டுள்ளன. குப்பை என்று தூக்கி எறியப்பட்ட இவற்றில், பொக்கிஷம் இருக்கிறது என்று அந்த குழு தெரிவித்துள்ளது.

அதேபோல், நுகர்வோர் இந்த பொருட்களை தூக்கி எறியாமல் மீண்டும் உபயோகப்படுத்தக் கூடியவையாகப் (reuse) பார்க்க வேண்டும் என்று ஊக்குவிக்கிறது. காரணம், இவற்றில் அனைத்திலும் செப்பு கம்பிகள் (copper wires) மற்றும் லித்தியம் பேட்டரிகள் (Lithium batteries) போன்ற மதிப்புமிக்க மூலப்பொருட்களை அடகியுள்ளன. இவை மறுசுழற்சி செயல்முறை மூலம் மீட்டெடுக்கப்படுகின்றன. அதாவது ரீசைக்கிளிங் முறைப்படி மீட்டெடுக்கப்படுகின்றன.

உலகம் முழுவதும் இதே போன்ற படம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் 9 பில்லியன் கிலோ கேபிள்கள், பொம்மைகள் (toys), வேப்கள் (vapes), புதுமையான ஆடைகள் மற்றும் மின் கழிவுகள் (e-wastes) என்று அவர்கள் அங்கீகரிக்காத ஒத்த சாதனங்களை தூக்கி எறிகிறார்கள் என்று கழிவு மின் மற்றும் மின்னணு உபகரண மன்றத்தின் ஆராய்ச்சி கூறுகிறது.

நீங்கள் குப்பை என்று தூக்கி போடும் இந்த சாதனங்கள் உண்மையில் பொக்கிஷம்!

மெட்டீரியல் ஃபோகஸின் ஆராய்ச்சி, 2017 ஆம் ஆண்டிலிருந்து மின் கழிவுகளின் அளவு குறைந்துள்ளது என்றும் காட்டுகிறது. அதற்குக் காரணம், தற்போது பல மின்சாதனப் பொருட்கள் இலகுவாக இருப்பதால், மறுசுழற்சி விகிதங்கள் அதிகரித்துள்ளதாலும். 60% மக்கள் இப்போது தங்கள் மின்சார சாதனங்களை (electronic device recycle) மறுசுழற்சி செய்வதாகவும் கூறுகிறார்கள். ஆனால் பலர் பயன்படுத்தாத மின்-சாதனங்களான கேபிள்கள், மொபைல் போன்கள் மற்றும் ரிமோட்-கண்ட்ரோல்கள் என்று ஒரு வீட்டிற்கு 30 பொருட்களை வீணாய் சேகரித்து வைத்துள்ளனர்.

"எலக்ட்ரிகல் பொருட்களை விற்கும் அனைத்து சில்லறை விற்பனையாளர்களும், ஆன்லைனில் அல்லது கடை மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து தங்கள் பழைய மின் தயாரிப்புகளை வாங்கிக்கொள்ள வேண்டும். அல்லது அவற்றை மறுசுழற்சி செய்ய அல்லது அகற்ற உதவ வேண்டும். பொருட்கள் எங்கு வாங்கப்பட்டிருந்தாலும் சரி, இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அந்த குழு அறிவுரை வழங்கியுள்ளது.

மெட்டீரியல் ஃபோகஸ் என்பது மறுசுழற்சி செய்வதை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும். மின் உற்பத்தியாளர்கள் தங்கள் அரசாங்க மறுசுழற்சி இலக்குகளை அடையாத போது அவர்கள் செலுத்தும் கட்டணத்தால் இது நிதியளிக்கப்படுகிறது. மக்களும் எலக்ட்ரிக் குப்பைகளை சரியான முறையில் ரீசைக்கிள் செய்ய வேண்டும் என்பதே பூமியை (earth) அழிவில் இருந்து காப்பாற்ற உதவும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Electronic devices that you throw away as trash are actually treasures it should be recycled
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X