Just In
- 1 hr ago
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- 1 hr ago
உங்கள் மோதிரம் சைஸ் என்ன? போன் மூலம் சரியாக அளவெடுக்கலாமா? அது எப்படி?
- 2 hrs ago
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது?
- 2 hrs ago
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
Don't Miss
- News
தொடரும் ஆளுநர் - அரசு மோதல்! புதிய கல்விக்கொள்கையே "பெஸ்டு".. எதிர்ப்பவர்களை விமர்சித்த ஆர்என் ரவி
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Movies
ரஜினியின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் பிரபலம்... நெல்சனின் பிளான் இதுதானா?: ஷாக்கான ரசிகர்கள்
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Finance
தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது.. அதானி பற்றி ஹிண்டன்பர்க் ரிசர்ச்..!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
கணினி பயனர்களே உஷார்: மைக்ரோசாப்ட் ஸ்டோரில் இருந்து வேகமாக பரவும் மால்வேர்.!
சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, சமூக வலைத்தளங்களில் பயனர்களின் தகவல்களை திருடும் புதிய மால்வேர் ஒன்று மைக்ரோசாப்ட் ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது இந்த புதிய மால்வேர் பெயர் எலக்ட்ரான் பாட் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த மால்வேர் கூகுள், சவுண்ட்கிளவுட், பேஸ்புக், யூடியூப் கணக்குகளில் இருந்து அவர்களுடைய தரவுகளை திருடுவதோடு மட்டும் இல்லாமல், அந்த கணக்குகளின் கட்டுப்பாடுகளையும் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக செக்பாயிண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வ ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வரும் இந்த மால்வேர் 5000-க்கும் மேற்பட்ட கணினிகளை தாக்கியுள்ளதாகவும், பின்பு பயனர்களின் சமூக வலைதள கணக்குகளை கட்டுப்பாட்டில் எடுத்து, அந்த கணக்குகள் மூலம் அடுத்தவர்களின் பக்கங்களை லைக் செய்தல், கமெண்ட் செய்தல் உள்ளிட்ட செய்பாடுகளை செய்தவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதிய வகை மால்வேர் மைக்ரோசாப்ட் ஸ்டோரில் இருந்து புரோகிராம்களை, கேம்ஸ்களை தரவிறக்கம் செய்வதுமூலம் பரவுகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயன்படுத்தும் பயனர்கள் எச்சரிக்கையாகஇருக்க வேண்டும்.

ஒருவேளை ஏற்கனவே இந்த மால்வேர் உங்களது கணினியை பாதித்திருந்தால், மைக்ரோசாப்ட் ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்த மென்பொருளை உடனே அன் இன்ஸ்டால் செய்துவிடவும். பின்பு உங்களது கணினியில் C:UsersAppDataLocalPackages> சென்று அங்குள்ள மேல்வேர் பேக்கேஜ் ஃபோல்டரை டெலிட் செய்யவும். அதன்பின் கணினியில் C:UsersAppDataMicrosoftWindowsStart MenuProgramsStartup சென்று, Skype.lnk அல்லது WindowsSecurityUpdate.lnkin என்ற ஃபைலை கண்டுபிடித்து டெலிட் செய்யவும். அவ்வளவு தான் இதன் மூலம்உங்களது கணினியை மால்வேர் பாதிப்பில் இருந்து எளிமையாக பாதுகாக்கலாம்.

அதேபோல் இணைய அணுகலில் இருக்கும் அனைத்து கேஜெட்களும் வைரஸ்களால் பாதிக்கப்படுவது என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. கம்ப்யூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்பட்டிருக்கும் முக்கிய தகவல்களை அணுகவும், ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கை கையாடல் செய்து பணம் திருடவும் தீங்கிழைக்கும் மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தீங்கிழைக்கும் பயன்பாடுகள் மூலம் திருடப்படும் தகவல்கள் டார்க் வலைதளங்களுக்கு விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எனவே இலவசமாக கிடைக்கும் ஆப் மற்றும் மென்பொருள் வசதிகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பாதுகாப்பான மென்பொருள் வசதியை பயன்படுத்துவது மிகவும் நல்லது. அதேபோல் சில பாதுகாப்பு நிறுவனங்கள் மோசமான மென்பொருள் வசதியை உடனே அடையாளம் கண்டு கணினி மற்றும் மொபைல் பயனர்களை எச்சரிக்கை செய்கின்றன என்றுதான் கூறவேண்டும். அதேபோல் கூகுள் நிறுவனமும் அவ்வப்போது தீங்கிழைக்கும் ஆப் வசதியை பிளே ஸ்டேரில் இருந்து நீக்கிய வண்ணம் உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470