மின்சார செலவை சேமிக்க எலோன் மஸ்க் நிறுவனம் அறிமுகம் செய்யும் சூரிய கூரை

|

எலோன் மஸ்க்கின் எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா, தனது அடுத்தடுத்த வாகனங்களின் தயாரிப்புகளால் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது தெரிந்ததே. இதில் முக்கியமாக பிக் அப் டிரக்குகள், செமி டிரக்குகள் மற்றும் ஏடிவி ஆகியவை அடங்கும்.

எலோன் மஸ்க் நிறுவனம் அறிமுகம் செய்யும் சூரிய கூரை

கார் தயாரிக்கும் தொழிலில் பல்வேறு மாற்றங்கள் செய்து வரும் இந்நிறுவனம் தற்போது அவை சூரிய சக்தியை மாற்று சக்தியாக பயன்படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது

இதனையடுத்து இந்நிறுவனம் செயல்பட்டு வரும் மிக அற்புதமான திட்டங்களில் ஒன்று மலிவான விலையில் சூரிய தகடுகளால் ஆன மேற்கூரை அமைப்பதுதான். இப்போது சராசரி வீட்டில் இருக்கும் கூரையை விட இதற்கு அதிக செலவாகாது என்பதே இந்த திட்டத்தின் சிறப்பு.

டெஸ்லா நிறுவனம் முதலில் இந்த தயாரிப்பை 2018ஆம் ஆண்டுக்குள் சந்தைக்கு கொண்டு வரவேண்டும் என்று உறுதியாக செயல்பட்டது. ஆனால் உற்பத்தி செயல்பாட்டில் ஏற்பட்ட சில காரணங்களல் கொஞ்சம் காலதாமதம் ஆகி தற்போது அறிமுகம் செய்யப்படுகிறது.

எலோன் மஸ்க் நிறுவனம் அறிமுகம் செய்யும் சூரிய கூரை

கடந்த ஆண்டு ஒரு பங்குதாரர் கூட்டத்தின் போது, மஸ்க் நிறுவனம் இதுகுறித்து கூறியபோது வருங்காலத்தில் இந்த தொழில் பிரமாதமாக இருக்கும் என நம்பிக்கை அளித்தார். இது சந்தையில் மிகவும் நீடித்த மற்றும் மலிவு விலையில் அமையும் கூரை இதன் வியாபாரம் விரிவாகும் என்று கூறினார்


இந்த சூரிய கூரை அமைப்பை மூன்று விதங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், கூரை ஓட்டுடன் ஒருங்கிணைந்த சூரிய மின்கலத்தைக் கொண்டிருப்பது, அழகாக இருப்பது மற்றும் குறைந்தபட்சம் 30 ஆண்டுகல் இந்த கூரையால் பயன்படும் அளவில் நீடிப்பதும் என்பதுதான் அந்த மூன்று வழிமுறைகள் ஆகும். இது மிகவும் கடினமான தொழில்நுட்ப சிக்கல் என்றாலும், சூரிய கூரையின் பதிப்பை நான் அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று மஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் சூரிய கூரை வலுவாக இருப்பதற்கும் நீடித்த உழைப்பிற்கும் அவர் உத்தரவாதம் அளித்தார். இது மிகவும் மலிவான விலையில் செயல்படும் கூரை என்பதால் மின்சார செலவை முழுவதும் மிச்சப்படுத்துவது மட்டுமின்றி குறைந்தபட்சம் 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அதிகபட்சம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று உத்தரவாதம் அளிக்கும் என்றும் இந்நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. எந்தவித பழுது ஏற்பட்டாலும் அதற்கு நிறுவனமே பொறுப்பேற்று அது சரிசெய்யப்படும் என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டது


டெஸ்லாவின் சூரிய கூரை பேனல்கள் தற்போது நியூயார்க்கில் உள்ள பஃபேலோவில் உள்ள நிறுவனத்தின் ஜிகாஃபாக்டரி 2 இல் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் அது அவை எப்போது பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சராசரியாக ஒரு வீட்டின் கூரைக்கு செலவாகும் செலவை விட இந்த சூரிய கூரை மிகவும் விலை மலிவு என்றும், மின்சார செலவு முழுவதுமாக மிச்சமாகும் என்றும், இதனால் வீட்டின் உரிமையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய தொகையை சேமிப்பார்கள் என்றும் இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளதால் இந்த கூரையை பயன்படுத்த பெரும்பாலான மக்கள் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Electricity Savings Will Make Tesla Roofs One Of The Cheapest On The Market : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X