மின் கட்டண மோசடி- லட்சக் கணக்கான ரூபாய் அபேஸ்: நீங்க இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!

|

கொரோனா பேரில் தொடங்கி பல்வேறு வகையில் மோசடி செய்தவர்களின் குறி தற்போது மின்சார கட்டணத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. பில் பாக்கி இருப்பதாகவும் அதை செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்புகிறார்கள். இதில் ஒரு மொபைல் எண் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவலுக்கு இந்த எண்ணை அழைக்கும்படி அந்த மெசேஜில் கேட்கப்படுகிறது.

பல லட்ச ரூபாய் வரை மோசடி

பல லட்ச ரூபாய் வரை மோசடி

தொடர்ந்து மோசடி செய்பவர்கள் இந்த எண் மூலம் பயனர்களை தொடர்பு கொள்ள வைக்கின்றனர். மின்சார கட்டணம் பாக்கி இருப்பதாக கூறி அந்த பணத்தை செலுத்தும்படி அவர்களை நம்ப வைக்கின்றனர். கடந்த சில நாட்களில் பலர் இந்த மோசடியில் சிக்கி பல லட்ச ரூபாய் வரை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் கட்டண பேரில் மோசடி

மின் கட்டண பேரில் மோசடி

இந்தியா முழுவதும் மின் கட்டண மோசடி அதிகரித்துள்ளதாக டுவிட்டர் பயனர்கள் அறிக்கைகள் தெரிவிக்கிறது என கேட்ஜெட் 360 தெரிவித்துள்ளது. தற்போது குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பயனர்களை மோசடி செய்பவர்கள் குறி வைக்கின்றனர்.

போலியான மெசேஜ்கள் அனுப்பி மோசடி

மின் விநியோக நிறுவனத்திடம் இருந்து வருவது போல் போலியான மெசேஜ் அனுப்பப்படுகிறது. அதில் மின்சாரம் துண்டிக்கப்படுவதை தவிர்க்க இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதில் மின்வாரிய அதிகாரி என்று போலியாக ஒரு தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணை அழைத்தால் கட்டணம் பாக்கி இருக்கிறது என குறிப்பிட்டு அதை செலுத்தும்படி வலியுறுத்தப்படுகின்றனர்.

வாட்ஸ்அப் மூலமாகவும் மெசேஜ் அனுப்பும் மோசடியாளர்கள்

இதுகுறித்த தகவல் Gadgets 360 தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களை குறிவைத்து போலி மின்சார கட்டண எச்சரிக்கை மெசேஜ்களை அனுப்புகின்றனர். அதேபோல் சில சந்தர்ப்பங்களில் மோசடியாளர்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் பயனர்களை குறி வைக்கின்றனர்.

கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தல்

மகாராஷ்டிரா சைபர் உள்ளிட்ட ஏஜென்சிகள் இதுபோன்ற மெசேஜ்களுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளன. ஒடிசாவிலும் இதுபோல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் மோசடி நடக்கிறது என்று கவனக் குறைவாக இருக்க வேண்டாம். மொபைல் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தும் போது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமானதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சோதித்துக் கொள்ள வேண்டும். அதிகாரமற்ற எந்த அழைப்பு மற்றும் மெசேஜ்களுக்கும் செவி சாய்க்காமல் இருத்தல் என்பது மிக அவசியம்.

வங்கி கணக்கு முடக்கப்படும் என போலி மெசேஜ்கள்

வங்கி கணக்கு முடக்கப்படும் என போலி மெசேஜ்கள்

அதேபோல் அதிகாரப்பூர்வ வங்கி தளம் போன்றே ஒரு தளத்தை உருவாக்கி அதற்கான லிங்க் மெசேஜ் மூலமாக வருகிறது. வங்கி கணக்கில் இதை அப்டேட் செய்யவில்லை என்றால் உங்களது வங்கி கணக்கு முடக்கப்படும் 10 நிமிடத்துக்குள் அப்டேட் செய்ய வேண்டும் போன்ற தகவல்களுடன் லிங்க் அனுப்பப்படுகிறது.

மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் எச்சரிக்கை

மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் எச்சரிக்கை

இந்த மெசேஜ்களை பெறுபவர்கள் இந்த லிங்க்கை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்கின்றனர். இந்த விவரங்களை பெற்றவுடன் கும்பல் மோசடி வேலையை தொடங்குகிறது. இதுபோன்று வரும் மெசேஜ்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் வங்கியில் இருந்து இதுபோன்ற மெசேஜ்களை அனுப்பப்படவில்லை எனவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ வங்கி வெப்சைட் போன்றே போலி சைட்

அதிகாரப்பூர்வ வங்கி வெப்சைட் போன்றே போலி சைட்

கேஒய்சி அப்டேட் செய்யும்படி வங்கி மெசேஜ் போன்று ஒரு லிங்கை அனுப்புகின்றனர். இதில் சந்தேகத்திற்கு இடமான லிங்க் ஒன்றை அதிகாரப்பூர்வ வங்கி வெப்சைட் போன்றே வடிவமைத்து அனுப்புகின்றனர். மேலும் பயனர்களுக்கு இதுபோன்று வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மோசடியாளர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும்படி தொடர்ந்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கவரச்சிகரமான இலவச பரிசுகள் என மோசடி

கவரச்சிகரமான இலவச பரிசுகள் என மோசடி

இதேபோல் கவரச்சிகரமான இலவச பரிசுகள் மற்றும் பலவற்றை வழங்குவதாக கூறி ஏமாற்றி வருகின்றனர். இந்த தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற தகவல்களை நம்பவும் வேண்டாம் பகிரவும் வேண்டாம். இதுபோன்ற மெசேஜ்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

File Images

Source: gadgets360.com

Best Mobiles in India

English summary
Electricity Bill Scams: Don't Response this messages and Calls

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X