கேப்பில் கிடா வெட்டும் மோசடி கும்பல்: Electricity Bill பேரில் வரும் மெசேஜ்கள்.. இதுதான் அது!

|

உங்கள் Electricity Bill நிலுவையில் உள்ளது, கட்டணத்தை உடனே செலுத்தாவிட்டால் சப்ளை துண்டிக்கப்படும் என்ற பேரில் மெசேஜ் அனுப்பி மோசடி கும்பல் களமிறங்கி இருக்கிறது.

கவனம் தேவை

கவனம் தேவை

மோசடி செயல்கள் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. ஒரு மோசடி செயல் நடந்தால் அது அங்கு தானே நடந்திருக்கிறது இங்கு வரவில்லையே என்றும் யாருக்கோ நடந்திருக்கிறது நமக்கெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றும் அலட்சியம் காட்ட வேண்டாம். டிஜிட்டில் இந்தியாவில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும்.

மின் கட்டண மோசடி

மின் கட்டண மோசடி

அதன்படி தற்போது பெங்களூருவில் மின் கட்டண மோசடி வளர்ந்து வருகிறது. மக்களுக்கு ஃபிஷிங் எஸ்எம்எஸ் அனுப்பி இதன்மூலம் மோசடி செயலை அரங்கேற்றி வருகின்றனர் மோசடி கும்பல்.

உடனே மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் இல்லை என்றால் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என ஸ்பேம் மெசேஜ்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த மோசடியில் சிக்கி பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் மின்சார கட்டண மோசடியில் சுமார் ரூ.5 லட்சம் வரை இழந்திருக்கிறார்.

சைபர் கிரைம் பிரிவில் புகார்

சைபர் கிரைம் பிரிவில் புகார்

பெங்களூருவை சேர்ந்த அரவிந்த் குமார் என்ற 56 வயதான தொழிலதிபர் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் மோசடியில் சிக்கி ரூ.4.9 லட்சத்தை இழந்திருக்கிறார். தி இந்துவில் வெளியாகி உள்ள அறிக்கைப்படி, பாதிக்கப்பட்டவர் பெங்களூருவில் உள்ள சாமராஜப் பேட்டையில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

ரூ.4.9 லட்சம் வரை இழந்த நபர்

ரூ.4.9 லட்சம் வரை இழந்த நபர்

அதில், BESCOM (பெங்களூர் மின்சார விநியோக நிறுவனம் லிமிடெட்) அதிகாரி போல் ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு பேசினார். அதில் மின்கட்டணம் பாக்கி இருப்பதாகவும் உடனடியாக பணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் தெரிவித்தார். கட்டணத்தை எப்படி செலுத்துவது என்று கேட்டபோது, மறுபுறம் பேசியவர் Teamviewer Quick support மொபைல் செயலியைப் பதிவிறக்குவதற்கான இணைப்பை அனுப்பி இருக்கிறார்.

இதையடுத்து அரவிந்த் குமார், அந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட சில விவரங்களையும் பூர்த்தி செய்யத் தொடங்கி இருக்கிறார். அடுத்த சில வினாடிகளில் அரவிந்த் குமாரின் வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணமும் மற்றொரு கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்கிறது. கணக்கில் இருந்து சுமார் ரூ.4.9 லட்சம் வரை திருடப்பட்டிருக்கிறது.

ரிமோட் அணுகல் மூலம் திருட்டு

ரிமோட் அணுகல் மூலம் திருட்டு

இதையடுத்து அரவிந்த்குமார் சைபர் பிரிவு போலீஸாரை அணுகி புகார் அளித்திருக்கிறார். காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அரவிந்த் குமார் செயலியைப் பதிவிறக்கம் செய்து அணுகல் விவரங்களைப் பகிர்ந்து கொண்டபோது, மோசடி செய்பவர்கள் அவரது ஸ்மார்ட்போனுக்கு ரிமோட் அணுகலை அனுப்பி இருக்கின்றனர். அதன்மூலம் அவரது ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்ட அனைத்து வங்கி விவரங்களையும் திருடி இருக்கின்றனர்.

பரவும் ஸ்பேம் மெசேஜ்கள்

பரவும் ஸ்பேம் மெசேஜ்கள்

டிஜிட்டல் யுகத்தில் பாதுகாப்பு என்பது மிக அவசியம். கையில் இருப்பது உங்கள் ஸ்மார்ட்போன் தான் என்றாலும் அதன் தகவலும் விவரங்களும் காற்றில் டேட்டாவாக அலை மோதிக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒரு விஷயம்.

கொரோனா பேரில் தொடங்கி பல்வேறு வகையில் மோசடி செய்தவர்களின் குறி தற்போது மின்சார கட்டணத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. பில் பாக்கி இருப்பதாகவும் அதை செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்புகிறார்கள். இதில் ஒரு மொபைல் எண் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவலுக்கு இந்த எண்ணை அழைக்கும்படி அந்த மெசேஜில் கேட்கப்படுகிறது.

உண்மை போன்ற போலி மெசேஜ்

உண்மை போன்ற போலி மெசேஜ்

தொடர்ந்து மோசடி செய்பவர்கள் இந்த எண் மூலம் பயனர்களை தொடர்பு கொள்ள வைக்கின்றனர். மின்சார கட்டணம் பாக்கி இருப்பதாக கூறி அந்த பணத்தை செலுத்தும்படி அவர்களை நம்ப வைக்கின்றனர். கடந்த சில நாட்களில் பலர் இந்த மோசடியில் சிக்கி பல லட்ச ரூபாய் வரை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் விநியோக நிறுவனத்திடம் இருந்து வருவது போல் போலியான மெசேஜ் அனுப்பப்படுகிறது. அதில் மின்சாரம் துண்டிக்கப்படுவதை தவிர்க்க இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதில் மின்வாரிய அதிகாரி என்று போலியாக ஒரு தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணை அழைத்தால் கட்டணம் பாக்கி இருக்கிறது என குறிப்பிட்டு அதை செலுத்தும்படி வலியுறுத்தப்படுகின்றனர்.

எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியம்

எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியம்

மகாராஷ்டிரா சைபர் உள்ளிட்ட ஏஜென்சிகள் இதுபோன்ற மெசேஜ்களுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளன. ஒடிசாவிலும் இதுபோல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பிற மாநிலங்களில் மோசடி நடக்கிறது என்று கவனக் குறைவாக இருக்க வேண்டாம். மொபைல் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தும் போது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமானதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சோதித்துக் கொள்ள வேண்டும். அதிகாரமற்ற எந்த அழைப்பு மற்றும் மெசேஜ்களுக்கும் செவி சாய்க்காமல் இருத்தல் என்பது மிக அவசியம்.

பல விதங்களில் நடக்கும் மோசடிகள்

அதேபோல் அதிகாரப்பூர்வ வங்கி தளம் போன்றே ஒரு தளத்தை உருவாக்கி அதற்கான லிங்க் மெசேஜ் மூலமாக வருகிறது. வங்கி கணக்கில் இதை அப்டேட் செய்யவில்லை என்றால் உங்களது வங்கி கணக்கு முடக்கப்படும் 10 நிமிடத்துக்குள் அப்டேட் செய்ய வேண்டும் போன்ற தகவல்களுடன் லிங்க் அனுப்பப்படுகிறது.

இந்த மெசேஜ்களை பெறுபவர்கள் இந்த லிங்க்கை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்கின்றனர். இந்த விவரங்களை பெற்றவுடன் கும்பல் மோசடி வேலையை தொடங்குகிறது. இதுபோன்று வரும் மெசேஜ்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் வங்கியில் இருந்து இதுபோன்ற மெசேஜ்களை அனுப்பப்படவில்லை எனவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விழிப்புணர்வு தகவல்

விழிப்புணர்வு தகவல்

கேஒய்சி அப்டேட் செய்யும்படி வங்கி மெசேஜ் போன்று ஒரு லிங்கை அனுப்புகின்றனர். இதில் சந்தேகத்திற்கு இடமான லிங்க் ஒன்றை அதிகாரப்பூர்வ வங்கி வெப்சைட் போன்றே வடிவமைத்து அனுப்புகின்றனர். மேலும் பயனர்களுக்கு இதுபோன்று வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மோசடியாளர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும்படி தொடர்ந்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பரவும் போலி தகவல்கள்

பரவும் போலி தகவல்கள்

இதேபோல் கவரச்சிகரமான இலவச பரிசுகள் மற்றும் பலவற்றை வழங்குவதாக கூறி ஏமாற்றி வருகின்றனர். இந்த தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற தகவல்களை நம்பவும் வேண்டாம் பகிரவும் வேண்டாம். இதுபோன்ற மெசேஜ்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Electricity Bill Fraud Gang: Online Scam and Phishing SMS.. Don't believe and touch it

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X