இந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.!
பல முறை எதிர்க்கட்சிகள் எழுப்பும் இது போன்ற குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் இந்த முறையும் அதையே செய்துள்ளது.
இப்போது வரும் பல்வேறு புதிய தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்களில் பல்வேறு நண்மைகளும் உள்ளது, அதே சமயம் அவற்றில் சில குறைபாடுகளும் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். அதன்படி லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்களை முடக்க முடியும் என சையத் சுஜா என்பவர் செயல் விளக்கம் செய்து காட்டினார்.

சையத் சுஜா என்பவர் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார், இவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கும் குழுவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமைத் தேர்தல் ஆணையம்:
இருந்தபோதிலும் சையத் சுஜா என்பவரின் செயல் விளக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமைத்
தேர்தல் ஆணையம் இந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த மோசடி வேலையும் பலிக்காது என தெரிவித்துள்ளது.

சையத் சுஜா
மேலும் சையத் சுஜாவின் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய வாய்ப்பு இல்லை எனவும், இந்த இயந்திரத்தை சையத் சுஜாவினால் முடக்க இயலாது
எனவும் கூறியிருக்கிறது.

எதிர்க்கட்சிகள்
பல முறை எதிர்க்கட்சிகள் எழுப்பும் இது போன்ற குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் இந்த முறையும் அதையே செய்துள்ளது.

கவனமாக தயாரிக்கப்படுகின்றன
பின்பு லண்டன் செயல் விளக்கத்தில் பயன்படுத்தப்பட்டது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பயண்படுத்தும் இயந்திரம் அல்ல எனவும், பின்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த கட்டுப்பாட்டில் கவனமாக தயாரிக்கப்படுகின்றன என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
குறிப்பாக இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்களை முடக்கி, விருப்பப்பட்ட நபர்களுக்கு வாக்களிக்க செய்யும் எந்த முயற்சியும் இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்களில் பலிக்காது எனவும், பின்பு லண்டன் நிகழ்ச்சி பற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications