வாக்குப்பதிவு இயந்திரந்துக்கு வந்தது புதிய சிக்கல்: வருமா மீண்டும் வாக்குச்சீட்டு முறை.!

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 22 எதிர்க்கட்சிகள் இணைந்து வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு எதிராக,இன்று தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளனர்.

|

லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்களை முடக்க முடியும் என சையத் சுஜா என்பவர் செயல் விளக்கம் செய்து காட்டினார். சையத் சுஜா என்பவர் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார், இவர் மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கும் குழுவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு இயந்திரந்துக்கு வந்தது புதிய சிக்கல்.!

இந்நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு எதிராக 22 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றன.

 இயந்திரத்தில் முறைகேடு

இயந்திரத்தில் முறைகேடு

குறிப்பாக வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. அதற்கு வலு சேர்ப்பது போல சையத் சுஜா என்ற தொழில்நுட்ப நிபுணர், இயந்திரத்தில் முறைகேடு
செய்யலாம் எனவும், தன்னிடம் சில கட்சிகள் முறைகேட்டில் ஈடுபடுமாறு கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இது மிகவும் பரபரப்பானது.

வாக்குச்சீட்டு

வாக்குச்சீட்டு

பின்பு வரும் மக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத் திடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதுகுறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில்
கடந்த சில நாட்களுக்கு முன் கூட்டம் நடைபெற்றது.

ஓரிரு நாடுகள் மட்டுமே

ஓரிரு நாடுகள் மட்டுமே

கூட்டத்தில் உலகில் ஓரிரு நாடுகள் மட்டுமே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும், மற்ற நாடுகள் அனைத்து வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பி விட்டதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

 திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ்

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 22 எதிர்க்கட்சிகள் இணைந்து வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு எதிராக, இன்று தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளனர். அப்போது வாக்கு சீட்டு முறையையே, மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்த உள்ளனர். இதுபோன்ற கோரிக்கையை ஏற்கனவே தேர்தல் ஆணையம் நிராகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Election Commission plans presentation for opposition on ‘safe EVMs’ today : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X