சட்டம் இயற்றியாச்சு: பிட்காயின் அங்கீகரித்த முதல் நாடு- பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு குடியுரிமை இருக்கு!

|

எல் சால்வடார் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக ஒப்புதல் அளித்துள்ளது. பிட்காயினை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததன் மூலம் பிட்காயினை அங்கீகரித்த உலகின் முதல்நாடு என்ற பெருமையை எல் சால்வடார் பெற்றுள்ளது.

அதிகாரப்பூர்வ நாணயமாக பிட்காயின்

அதிகாரப்பூர்வ நாணயமாக பிட்காயின்

எல் சால்வடார் பிட்காயினுக்கு அதிகாரப்பூர்வ நாணயம் என்ற ஒப்புதல் அளித்த முதல் நாடாக மாறியுள்ளது. எல் சால்வடார் காங்கிரஸ் ஜூன் 9 அன்று பிட்காயினை நாட்டில் சட்டப்பூர்வ டெண்டராக மாற்றும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. எல் சால்வடார் அதிபர் நயீப் புக்கலே டுவிட்டர் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதேபோல் எல் சால்வடார் பிட்காயின் முதலீடு செய்யும் நபர்களுக்கு நாட்டில் குடியுரிமை கிடைக்கும் எனவும் அறிவித்தார்.

பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு குடியுரிமை

பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு குடியுரிமை

நாட்டின் பொருளாதாரத்தில் மூன்று பிட்காயின்களை முதலீடு செய்யும் மக்களுக்கு அரசாங்கத்தால் குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல் சால்வடாரில் இந்த மசோதா 84 வாக்குகளில் 62 வாக்குகளை பெற்றிருக்கிறது. பிட்காயின் எந்தவொரு பரிவர்த்தனைகளிலும் வரம்பற்றதாக உள்ளது. அதேபோல் டிஜிட்டல் நாணயத்தின் மூலம் வரி பங்களிப்பு செய்ய அந்நாட்டு மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கிர்ப்டோ ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கிர்ப்டோ ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கிரிப்டோ முதலீட்டில் சவாலைகளை எதிர்கொள்ளும் கிரிப்டோ ஆர்வலர்களுக்கு இந்த அறிவிப்பு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் எல் சால்வடார் குறித்து பார்க்கையில், அந்நாட்டுக்கு சொந்த நாணயம் இல்லை, அந்த நாடு தற்போது அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ நாணயமாக பயன்படுத்துகிறது. அந்த நாட்டில் மக்கள் பிட்காயினை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து எதிரொலிக்கும் பிட்காயின் பெயர்

தொடர்ந்து எதிரொலிக்கும் பிட்காயின் பெயர்

இணையம் சார்ந்த பண பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சேர்ந்தது பிட்காயின். வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு எதிராக இருப்பவை இந்த பரிவர்த்தனை. இந்தியாவில் பல இடங்களில் பிட்காயின் பெயர் எதிரொலிப்பது வழக்கம். காரணம் பிட்காயின் மதிப்பு குறுகிய காலத்தில் அதிகளவு அதிகரித்து வருகிறது.

பிளாக்செயின் முறையில் பாதுகாக்கப்படும் பிட்காயின்

பிளாக்செயின் முறையில் பாதுகாக்கப்படும் பிட்காயின்

உலகளாவிய பணம் செலுத்தும் முறைமையாக பிட்காயின் மாறிவருகிறது. உலகளவில் பல வணிக வளாகங்கள் மற்றும் இடங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை விரும்பிய நாட்டில் பணமாக மாற்றலாம். பிட்காயின் பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தும் பிளாக்செயின் முறையில் பாதுகாக்கப்படுகிறது.

24 மணிநேரமும் பரிவர்த்தனை

24 மணிநேரமும் பரிவர்த்தனை

வங்கிகளுக்கும் பயனர்களுக்கும் இல்லாமல் இரண்டு நபர்களுக்கு இடையிலோ அல்லது இரண்டு கணக்குகளுக்கோ இடையிலோ இந்த பரிவர்த்தனை நடக்கிறது. இது மிகவும் எளிதான பரிவர்த்தனையாக இருக்கிறது. மேலும் இதை தினசரி 24 மணிநேரம் என்ற வீதம் 365 நாட்களுக்கு பரிவர்த்தனை செய்யலாம்.

பிளாக்செயின் தொழில்நுட்பம்

பிளாக்செயின் தொழில்நுட்பம்

பிட்காயினுக்கு பயன்படுத்தப்படும் பிளாக்செயின் தொழில்நுட்பம் மிக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. பிட்காயின்கள் பரிவர்த்தனை நோக்கமாக முன்னெடுக்கப்பட்டாலும் பலர் முதலீடுகளாகவே பார்க்கின்றனர். அதேபோல் பிட்காயின்களானது சாடோஷி நாகமோட்டோ என்று தங்களை கூறிகொள்பவர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தகவல் முறையாக தெரியவில்லை என கூறப்படுகிறது.

எதிர்பாராத அளவில் அதிகரிக்கும் பிட்காயின் மதிப்பு

எதிர்பாராத அளவில் அதிகரிக்கும் பிட்காயின் மதிப்பு

பிட்காயின்களானது கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு அதன் மதிப்பு 0.0003 டாலராகத்தான் இருந்தது. ஆனால் தற்போது பிட்காயின் மதிப்பு பல ஆயிரம் டாலர்களாக இருக்கிறது. சில பொருளாதார வல்லுனர்கள் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து உயரும் என்று கூறினாலும் சிலர் பிட்காயின் மதிப்பு நிலையற்றது சரிவை காணும் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
El Salvador Approves BitCoin as Official Currency: Country Grants Citizenship to Bitcoin Investers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X