ரேஷன் அட்டை இருக்கா? வெளியானது முக்கிய அறிவிப்பு.. e-KYC கட்டாயம்.. இல்லையெனில் சிக்கல் தான்..
ரேஷன் கார்டில் கேஒய்சி சரிபார்ப்பு செய்யாத மக்கள் உடனே அதைச் செய்து முடிப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால் ரேஷன் கார்டு ( Ration Card) ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது ரேஷன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு மத்திய அரசு உணவு தானியங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த ரேஷன் பலன்கள் உண்மையிலேயே தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் இ-கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துகின்றன.

நாட்டில் போலி ரேஷன் கார்டுகளையும், தகுதியற்ற பயனாளிகளின் பெயர்களையும் நீக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இ-கேஒய்சி சரிபார்பை முடிக்காதவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டைகளில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக இது இலவச அரிசி மற்றும் கோதுமை விநியோகத்தை நிறுத்திவிடும்.
அதேபோல் இப்போது பல பகுதிகளில் இ-கேஒய்சி செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்களுக்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கும் சென்று சில நிமிடங்களில் இந்த செயல்முறையை முடிக்கலாம். மேலும் சில மாநிலங்களில் ஆன்லைன் சேவைகளும் கிடைக்கின்றன. ஆகவே இதுவரை இந்த அப்டேட்டை செய்து முடிக்காதவர்கள் தாமதமின்றி உடனடியாக அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதுவும் இந்த இகேஒய்சி செய்வதற்கு மிகவும் எளிதான வழி என்னவென்றால், அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று அங்கு விற்பனையாளரிடம் இ-பிஓஎஸ் (e-POS) இயந்திரம் இருக்கும், பயனாளி தனது ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை எண்ணை வழங்க வேண்டும். அதன்பின்பு கைரேகை அல்லது பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு கேஒய்சி செயல்முறை முடிக்கப்படும். இதற்குக் கட்டணம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல மாநிலங்களில் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் ஆதார் இணைப்பு அல்லது இ-கேஒய்சி வசதியை வழங்குகின்றன. ஆதார் எண்ணைப் பதிவுசெய்து, ஓடிபி பெறுவதன் மூலம் இந்த செயல்முறையை வீட்டிலிருந்தே முடிக்க முடியும். இந்த வசதி ஊழியர்கள், முதியவர்கள் மற்றும் தொலைத்தூரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் இந்த செயல்முறையின் மூலம் பல லட்சக்கணக்கான சட்டவிரோத மற்றும் தகுதியற்ற ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக மேரா ரேஷன் செயலி அல்லது தொடர்புடைய இணையதளத்திற்குச் சென்று உங்கள் ஆதார் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதாக என்பதை சரிபார்க்க முடியும். அதில் Aadhaar Seeding: Yes என்று காட்டினால், உங்கள் விவரங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அர்த்தம். ஆனாலும் ஒருமுறை உள்ளூர் அதிகாரிகளைத் தொடர்புகொள்வது மிகவும் நல்லது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் மற்றும் ஓடிபி சரிபார்ப்பு தேவைப்பட்டால் அந்த கைபேசி எண் ஆகியவை செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
அரசு பலமுறை ரேஷன் அப்டேட்டுக்கான காலக்கெடுவை நீட்டித்திருந்தாலும், கடைசி தேதி வரை காத்திருப்பதை விட உடனடியாக அதை முடிப்பது நல்லது. இல்லையெனில ரேஷன் உதவிக்கள் நிறுத்தப்படுவது மற்றும் பெயர்கள் நீக்கப்படுவது போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே இலவச ரேஷன் பெறும் ஒவ்வொரு குடும்பமும் உடனடியாகத் தங்கள் இ-கேஒய்சி நிலையைச் சரிபார்த்து, தேவைப்பட்டால அதை முடிக்க வேண்டும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








