Smart TV-லாம் வேஸ்ட்.. 210 இன்ச் டிஸ்பிளே.. ரூ.5990 விலையில் பிரமாண்டமாக படம் பார்க்க பெஸ்ட் Projector.. மாஸ்!
உங்கள் வீட்டிற்கு புதிய Smart TV வாங்க திட்டமிடுகிறீர்களா? அப்படியானால், ஸ்மார்ட் டிவி வாங்கும் ஐடியாவிற்கு கொஞ்சம் ஸ்பீட் பிரேக் போடுங்கள். நீங்கள் அதிக விலை கொடுத்து அதிகபட்சமாக 55'' இன்ச் அல்லது 43'' இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு பதிலாக, நீங்கள் ஸ்மார்ட் டிவி வாங்கும் விலையில் ஒரு பங்கிற்கு குறைவான விலையை மட்டும் செலவு செய்தால் போதும், 210'' இன்ச் அளவு வரையிலான டிஸ்பிளேவில் உங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை இனி நீங்கள் கண்டுமகிழலாம். இதற்கான மொத்த செலவே வெறும் ரூ. 5,999 தான் என்று சொன்னால் நம்புவீர்களா?
நம்புங்கள் மக்களேஅது தான் உண்மை. தற்போது தீபாவளி கொண்டாட்டம் நெருங்கிக்கொண்டிருக்கும் காரணத்தினால், அமேசான் (Amazon), Flipkart (Flipkart) போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஏராளமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில், ஒரு புது முயற்சியாக நீங்கள் ஒரு ப்ரொஜெக்டர் (Projector) சாதனத்தை வாங்கி பயன்படுத்தி பார்க்கலாம் மக்களே. இதை நீங்கள் இப்போது செய்து பார்ப்பதற்கு ஏற்ற சலுகைகள் நிறைய அறிவிக்கப்பட்டுள்ளது.

Smart TV-லாம் வேஸ்ட்.. 210 இன்ச் டிஸ்பிளே.. ரூ.5990 விலையில் பிரமாண்டமாக படம் பார்க்கலாம்:
அதில் ஒன்று தான் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் காணப்படும் இகேட் i9 ப்ரோ ப்ரொஜெக்டர் (Egate i9 Pro Projector) சாதனம். இது தற்போது நடைபெறும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்ஸ் விற்பனையில் மிகமிக குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 9,990 ஆகும். ஆனால், தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இதன் மீது 40% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இகேட் i9 ப்ரோ ப்ரொஜெக்டர் பிளிப்கார்ட் சலுகை விலை (Egate i9 Pro Projector Flipkart Offer Price):
இதன் மூலம் இந்த புதிய இகேட் i9 ப்ரோ ப்ரொஜெக்டர் (Egate i9 Pro Projector) சாதனம் ரூ.5,990 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. தற்போது சந்தையில் குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ப்ரொஜெக்டர் டிவைசாக இந்த சாதனம் பார்க்கப்படுகிறது. காரணம் இதில் இன்பில்ட் ஸ்பீக்கர், ஆப்ரேட் செய்ய ரிமோட் கண்ட்ரோலர், ப்ளூடூத் (Bluetooth), ARC HDMI, USB, AV, வைஃபை (WiFi) போன்ற அம்சங்கள் பேக் செய்யப்பட்டுள்ளன.
10 அடி தூரம் வரை துல்லியமான கலருடன் ப்ராஜெக்ட்ஷன்:
இதன் அம்சங்கள் பற்றி பேசுகையில், இதுவொரு LED டைப் ப்ரொஜெக்டர் சாதனமாகும். இது 8400 லுமென்ஸ் வரையிலான பிரகாசத்தை கொண்டுள்ளது. இது 720p நேட்டிவ் (Native) உடன் 1080p மற்றும் 4K குவாலிட்டி சப்போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனால், வெளிச்சமான இடங்களில் கூட உங்களால் துல்லியமான விஷுவலை பார்க்க முடியும். இந்த Egate Projector 10 அடி தூரம் வரை ப்ராஜெக்ட் செய்யும் திறன் கொண்டது.
டிவி சேனல்களையும் இனி பெரிய டிஸ்பிளேவில் ப்ரொஜெக்டர் மூலம் பார்க்கலாமா?
இது டிஜிட்டல் ஃபோகஸ் மற்றும் டிஜிட்டல் கீஸ்டோன் (Digital Focus & Digital Keystone) போன்ற அம்சங்கள் நிறைந்துள்ளது. இதில் ப்ரீலோட் செய்யப்பட்ட ஆப்ஸ்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு HDMI போர்ட் ஆதரவு இருக்கிறது. அதை பயன்படுத்தி உங்கள் செட் ஆப் பாக்ஸ் (Set Up Box) உள்ளடக்கங்களை நீங்கள் பெரிய திரையில் பார்த்து மகிழலாம். அதாவது, கேபிள் டிவி சேனல்களை நீங்கள் 210'' இன்ச் அளவு வரை ப்ராஜெக்ட் செய்து மகிழலாம்.
210'' இன்ச் வரை டிஸ்பிளே அளவை ப்ரொஜெக்ட் செய்யும் Egate i9 Pro ப்ரொஜெக்டர்:
ஆம், இந்த ப்ரொஜெக்டர் 24' இன்ச் முதல் அதிகபட்சமாக 210'' இன்ச் வரை டிஸ்பிளே அளவை ப்ரொஜெக்ட் செய்ய அனுமதிக்கிறது. இது ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சத்தையும் கொண்டுள்ளது என்பதனால், உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்ப்யூட்டர், பிளேஸ்டேஷன் போன்ற எல்லா சாதனங்களையும் இத்துடன் இணைத்து பெரிய திரையில் வீடியோக்களை பார்க்கலாம். உண்மையை சொல்லப்போனால் வெறும் 5999 விலையில் உங்கள் வீட்டுக்கு குட்டி தியேட்டரை நீங்கள் வாங்கலாம் மக்களே.


Click it and Unblock the Notifications








