பாரபட்சமே இல்ல: ஒரே நாளில் ஐந்தரை லட்சம் கோடி க்ளோஸ்., அம்பானி முதல் பில்கேட்ஸ் வரை!

|

கொரோனா அச்சம் உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பீதி தலையெடுத்து உள்ளது. அதேபோல் கொரோனா பராவமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா விழிப்புணர்வு தகவல்களும் பெருமளவு பரவி வருகிறது.

ஹுபெய் மாகாணம் வுகான் நகர்

ஹுபெய் மாகாணம் வுகான் நகர்

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா, அதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பிரிட்டன், ஸ்விட்சர்லாந்தில் முதல் முறையாக கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3,500 பேருக்கு கொரோனா

3,500 பேருக்கு கொரோனா

ஈரானில் மட்டும் 3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. மேலும் அங்கு 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக 13 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது, 30 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

31 மாகாணங்களுக்கு பரவிய கொரோனா

31 மாகாணங்களுக்கு பரவிய கொரோனா

சீனாவில் கொரோனா வைரஸ் 31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது. இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 3119 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு ரூபாய் காயின் இருந்தால் மொபைல்போன் சார்ஜ் ஏறும்: மாணவி கண்டுபிடிப்பு.!ஒரு ரூபாய் காயின் இருந்தால் மொபைல்போன் சார்ஜ் ஏறும்: மாணவி கண்டுபிடிப்பு.!

பல்வேறு நாடுகளில் கொரோனா

பல்வேறு நாடுகளில் கொரோனா

மேலும் ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, எகிப்து போன்ற நாடுகளிலும் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்க அரசு இந்திய மதிப்பில் 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை

கொரோனா அச்சம் காரணாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இதனால் உலக அளவில் பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியைக் கண்டன. அதேபோல் அமெரிக்க பங்குச் சந்தைகள், 1987-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

ஒரே நாளில் ஐந்தரை லட்சம் கோடி

ஒரே நாளில் ஐந்தரை லட்சம் கோடி

இதன் விளைவாக உலக கோடீஸ்வரர்கள் ஒரே நாளில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் வரிசைப்படி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை இழந்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

உலகின் மூன்றாவது பணக்காரரான பெர்னாடு அர்னால்டின் எல்விஎம்ஹெச் நிறுவன பங்குகள் 9 சதவீதம் அளவு குறைந்ததால், 7.7 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்புகளை சந்தித்துள்ளார். அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், 6.98 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.

குறிப்பிடதகுந்த அளவு சொத்துகள் இழப்பு

குறிப்பிடதகுந்த அளவு சொத்துகள் இழப்பு

ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன், ​கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ், சர்ஜபிரின், டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் ஆகியோரும் குறிப்பிடதகுந்த அளவு சொத்துகளை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐயன் மேன் கையில் இருக்கும் இந்த சூப்பர் ஸ்மார்ட்போன் என்ன மாடல் தெரியுமா?ஐயன் மேன் கையில் இருக்கும் இந்த சூப்பர் ஸ்மார்ட்போன் என்ன மாடல் தெரியுமா?

இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டதாக தகவல்

இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டதாக தகவல்

இந்தியாவை கணக்கிடுகையில் ஆசிய அளவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை குறியவர் முகேஷ் அம்பானி. தற்போது இவரின் சொத்து மதிப்பு 42 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது. இதனால் அவர் ஆசிய அளவில் இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
effect of corona: world rich peoples lost billions of amount in single day

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X