அடுத்து நீங்கதான்: டிவி, ஏசி, பிரிட்ஜையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்: விளைவை எதிர்நோக்கி இந்தியா!

|

கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவை நிலைகுலையச் செய்துள்ள நிலையில், சீனாவின் பொருளாதாரம் கடும் பாதிப்பைச் சந்தித்து உள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த சரக்கு கப்பலில் கூண்டில் ஒரு பூனை வைக்கப்பட்டிருந்தது.

சீன கப்பலில் வந்த பூனை

சீன கப்பலில் வந்த பூனை

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இந்தியர்கள் இந்த பூனை மூலம் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவும் அபாயம் இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பூனையை அனுப்பியது யார் என்ற கேள்வியும் எழுந்தது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாதிப்பு

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாதிப்பு

அச்சத்தின் காரணமாக இந்தியாவில் வந்த மொத்த சரக்குகளையும் அதே கப்பலில் சீனாவிற்கு திரும்பி அனுப்பி வைத்தது. அதேபோல் கொரோனா அச்சத்தின் காரணமாக உலக நாடுகள், சீனாவிடம் இருந்து வாங்குவதையும், விற்பதையும் தற்போதைக்கு நிறுத்தியுள்ளன. இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் வெகுவாக பாதித்துள்ளது.

அடுத்த இடி., மார்ச் 1 முதல் அந்த வங்கி ஏடிஎம்களில் ரூ.2000 போடவும் முடியாது., எடுக்கவும் முடியாது!

விலை ஏற்றம் அடைய வாய்ப்பு

விலை ஏற்றம் அடைய வாய்ப்பு

இதனால் இந்தியாவின் பல்வேறு பொருட்களின் விலை ஏற்றம் அடைய அதிகளவு வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் கட்டுமானம், ஆட்டோ, ரசாயனங்கள் மற்றும் மருந்தியல் துறைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார உபகரணங்களில் 40 சதவித இறக்குமதி சீனாவில் தான்

மின்சார உபகரணங்களில் 40 சதவித இறக்குமதி சீனாவில் தான்

முக்கியமாக இந்தியா தனது மின்சார இயந்திர பாகங்களில் 40 சதவீதம் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. இந்தியா தனது இயந்திரங்கள் மற்றும் இயந்திர சாதனங்களில் மூன்றில் ஒரு பகுதியைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.

முடங்கி கிடக்கும் சீனா

முடங்கி கிடக்கும் சீனா

தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாகச் சீனாவில் தொழில், உற்பத்தி, வர்த்தகம் முடங்கி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மின் இயந்திரங்கள், இயந்திர உபகரணங்கள், கரிம இரசாயனங்கள், பிளாஸ்டிக், ஆப்டிகல் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் ஆகியவற்றின் இறக்குமதியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ் விலை  உயரும்

தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும்

இந்தியா தனது பெரும்பாலான இறக்குமதியை சீனாவிடம் இருந்தே பெருகிறது. இதனிடையே தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் அபாயத்தில் இருக்கிறது. தொலைக்காட்சிக்கு பயன்படுத்தப்படும் பேனல்கள், சீனாவில் விலை குறைவு என்ற காரணத்தால் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்கள், சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்கின்றன.

நெருங்கும் வெயில் காலம் விலை ஏறும் ஏசி, பிரிட்ஜ்

நெருங்கும் வெயில் காலம் விலை ஏறும் ஏசி, பிரிட்ஜ்

சீனாவின் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது அதற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வெயில் காலம் நெருங்கி வருவதால் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க ஏசி, பிரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்கி பயன்படுத்துவது வழக்கமான ஒன்று.

Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்

டிவி ஏசி பிரிட்ஜ் விலை உயர அதிக வாய்ப்பு

டிவி ஏசி பிரிட்ஜ் விலை உயர அதிக வாய்ப்பு

சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு உற்பத்தி பாதிப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பேனல்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்திருப்பதால், அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தொலைக்காட்சி பெட்டிகளின் விலையை உயர்த்த டி.வி. தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏசி, பிரிட்ஜ் சாதனங்களுக்கான கம்ப்ரசர்களின் விநியோகமும் தடைபட்டுள்ளதால் அவற்றின் விலையும் உயரலாம்.

Best Mobiles in India

English summary
Effect of corona virus: Tv, AC, Refrigerator price hike in india

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X